குடியரசு தினத்தையொட்டி ஆண்டு தோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கலை, பொதுசேவை உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களை கெளரவிக்க மத்திய அரசு இந்த விருதுகளை வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுகள் பட்டியலில் அஜித்குமார் பெயர் இடம்பெற்றிருந்தது. இதை அடுத்து டெல்லியில் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து நடிகர் அஜித் பத்ம பூஷண் விருதைப் பெற்றார்.

இதை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அஜித்குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் அஜித் சென்னையில் உள்ள அப்ப லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதலுக்கு நடிகர் அஜித் கண்டனம்..! மத்திய அரசுக்கு புதிய வேண்டுகோள்..!

அஜித்குமார் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படார் அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனையா? என்பது குறித்த விவரங்களை விரைவில் அப்பல்லோ மருத்துவமனை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுஒருபுறம் என்றால் மறுபுறம் சமீபத்தில் பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் ரேஸ் பயிற்சியின் போது சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அஜித்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

நேற்று முன் தினம் பத்மபூஷன் விருது பெறுவதற்காக அஜித்குமார் டெல்லி சென்றார். இந்த நிலையில் நேற்று சென்னை திரும்பினார். இன்று ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் பந்தயத்தில் பங்கேற்க நாளை துபாய் புறப்படும் நிலையில், முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாக அஜித் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிந்து மாலையில் வீடு திரும்புகிறார். அஜித்குமார் நாளை தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: குடியரசு தலைவர் கையால் அஜித்துக்கு விருது..! குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட "AK"..!