கங்குவா தோல்வியை ரெட்ரோவில் ஈடுகட்ட நினைத்த சூர்யா இரட்டை அடி விழுந்துள்ளது. தமிழகத்தில் ரெட்ரோ படத்திற்கு பெரும் வரவேற்பு இல்லை. படைப்பு சுதந்திரம் நிதி சுதந்திரத்தை பாதித்துள்ளது.
''வன்னியர்களை சாதி வெறியர்களாக காண்பித்து சூர்யாவுக்கு முட்டுக் கொடுத்த யாரும் அவரின் பட தோல்விகளை வெற்றிகளாக மாற்ற முடியவில்லை. ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்து காட்சிப்படுத்திய பிறகு இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பிய பிறகும் அச்சமுதாய மக்களிடம் எந்த ஒரு வருத்தமோ, மன்னிப்போ கேட்காமல் ராமதாஸுக்கு எதிராக அறிக்கை விட்ட சூர்யாவின் திமிர் பேச்சுக்கு எதற்கும் துணிந்தவன் படம் பெரும் தோல்வி அடைந்தது. தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவன தலையில் குல்லா போட்டு விட்டார்கள்.

பிறகு தனது சொந்த தயாரிப்பில் பல நூறு கோடி செலவு செய்து கங்குவா படத்தை வெளியிட்டு அதுவும் தோல்வியை சந்தித்து பல்வேறு வகையில் பொருளாதார நிதி பிரச்சனை ஏற்பட்டது. சமாளிக்க கோயில்களையும், பல பூஜைகளையும் முன்னின்று செய்தும் தற்போது வெளியாகி உள்ள ரெட்ரோ படமும் மக்கள் இடையே பெரும் வரவேற்பு இல்லாமல் படம் தோல்வி அடையும்'' எனக் கொதிக்கிறார்கள் வன்னியர் சமூக பிரதிநிதிகள்.
இதையும் படிங்க: சினிமா வரலாற்றில் எந்த ஹீரோவுக்கும் இல்லாத அடி..! சின்னா பின்னமான சூர்யா..!
நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் சில படங்கள் விமர்சன ரீதியாகவோ, வணிக ரீதியாகவோ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும், சூர்யா தமிழ் திரையுலகில் தனது நடிப்புத் திறனால் முன்னணி நடிகராக லைம்லைட்டில் இருந்து வருகிறார். சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் வணிக ரீதியில் வெற்றி பெற்றாலும், அதன்பின் வெளியான காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

குறிப்பாக, உயிரிலே கலந்தது படுதோல்வியடைந்ததால், தயாரிப்பாளர் முத்தம் சிவகுமார் கடுமையான நிதி நஷ்டத்தை சந்தித்தார். அஞ்சான் படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. படம் எதிர்பார்த்த அளவு வசூலைப் பெறவில்லை.
மாஸ், 24, சிங்கம்-3, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் தமிழில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் 24 படம் தெலுங்கில் நல்ல வசூல் செய்தது. எதற்கும் துணிந்தவன் படமும் சில எதிர்ப்புகளையும், மிதமான வரவேற்பையும் பெற்று, பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்தப் படங்கள் சூர்யாவின் தொடர் தோல்விகளாகப் பேசப்பட்டன. அவரது திரைப்படத் தேர்வுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. சூர்யாவின் பிரம்மாண்ட வரலாற்றுப் படமான கங்குவா வெளியான நாள் முதல் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது. படத்தின் கதை மற்றும் திரைக்கதை பலரால் விமர்சிக்கப்பட்டன. இது உலகளவில் வணிக ரீதியாக தோல்வியடைந்து பப்படம் ஆனது.

இன்று வெளியான ரெட்ரோ படமும் படுதோல்வியை தோல்வியைச் சந்தித்துள்ளது. இது சூர்யாவின் திரைப்பயணத்தில் பெரும் இக்கட்டான சூழலுக்கு தள்ளியுள்ளது. சூர்யா பல சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க இருந்து பல்வேறு காரணங்களால் அவற்றைத் தவறவிட்டார். உதாரணமாக, துருவ நட்சத்திரம், சார்பேட்டா பரம்பரை, இயற்கை, வணங்கான், மற்றும் புறநானூறு போன்ற படங்கள். இந்த படங்களை தவற விட்டது சூர்யாவின் தோல்விகளுக்கு மறைமுகமாகக் காரணமாக கூறப்படுகிறது.
குறிப்பாக, வணங்கான் படத்தில் இயக்குனர் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா விலகினார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யாவின் ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்கள் சில அரசியல் கட்சிகளின் எதிர்ப்பைச் சந்தித்தன. இது அவரது படங்களின் வெற்றியைப் பாதித்தது. சமூக வலைதளங்களில் சிலர் சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்து, அவரது படங்களைத் தோல்வியடையச் செய்ய முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சூர்யாவின் திரைப்பயணத்தில் நந்தா, காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம், சூரரைப் போற்று போன்ற வெற்றி படங்கள் அவரை முன்னணி நடிகராக உயர்த்தினாலும், சில தவறான படத் தேர்வுகள், தவறவிட்ட வாய்ப்புகள், மற்றும் விமர்சனங்கள் அவரது தோல்விகளுக்கு காரணமாக அமைந்தன. இருப்பினும், கங்குவா, ரெட்ரோ போன்ற தோல்விகளுக்குப் பிறகும், சூர்யா தனது அடுத்த படங்களான சூர்யா 44 மற்றும் சூர்யா 45 மூலம் மீண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: மவனே... ரெட்ரோ-வை அரை மணி நேரம் தாண்டி பார்த்துட்டா நீ வீரன்டா..! குமுறும் ரசிகர்கள்..!