தென்னிந்திய திரையுலகில் 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக மட்டுமே நடித்து வருபவர் தான் த்ரிஷா.

சென்னையை சேர்ந்த த்ரிஷா, மாடலிங் துறையில் கால் பதித்த பின்னரே ஹீரோயினாக மாறினார்.

இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான திரைப்படம் ஜோடி. இதில் சில நொடிகள் மட்டுமே சிம்ரனின் தோழியாக வந்து செல்வார்.

இதையும் படிங்க: விமர்சனம் என்ன எனக்கு புதுசா..! தக் லைஃப் படம் வரட்டும் அப்பறம் பாருங்க - நடிகை த்ரிஷா ஓபன் டாக்..!
இதை தொடர்ந்து மௌனம் பேசியதே படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்த வாய்ப்பு கிடைத்தது.

குறிப்பாக சாமி திரைப்படம் த்ரிஷாவை முன்னணி நடிகையாக மாற்றியது.

இந்த படத்திற்கு பின்னர், விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக மாறிய த்ரிஷா, பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி முதல் மகேஷ் பாபு வரை ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் இந்த ஆண்டு அஜித்துக்கு ஜோடியாக நடித்த விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்கள் வெளியானது.

அடுத்ததாக ஜூன் 5-ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில், த்ரிஷா சேலையில் ஜொலிக்கும் சில புகைப்படங்களை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்ட்டாகிராமில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Trisha Photos: சுகர் பேபியாக மாறி... வெள்ளை புடவையில் சூடேற்றிய த்ரிஷா!