பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் தான் அதிதி ஷங்கர்.

மருத்துவ படிப்பை முடித்த கையேடு திடீர் என சினிமா துறையில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார்.

முதல் படத்திலேயே சூர்யா தயாரிப்பில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதாவது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான 'விருமன்' படம் தான் இவரின் அறிமுக திரைப்படம்.

கிராமத்து ரோலில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அதிதி ஷங்கருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றது.

இதையும் படிங்க: Aditi Shankar: அழகு ராட்சசியே... அதிதி ஷங்கரின் அட்டகாச போட்டோ ஷூட்!
அதன்படி, விருமன் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'மாவீரன்' நடித்தார்.

கடைசியாக இவர் நடிப்பில் 'நேசிப்பாயா' படம் வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தமிழில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள திரைப்படம் அடுத்து வெளியாக உள்ளது. மேலும், தெலுங்கில் 'கருடன்' பட ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ள பைரவம் படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் பைரவம் படத்தின் ஆடியோ லான்ச் நடந்தது.

இதில் அதிதி ஷங்கர், மீன் வலை போன்ற உடையில்... கொஞ்சம் தூக்கலான கிளாமரில் கலந்து கொண்டார்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: காதலை அறிவித்த விஷால் - சாய் தன்ஷிகா! வைரலாகும் ரொமான்டிக் போட்டோஸ்!