பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தற்போது கன்னட திரையுலகின் பிரபல நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருகிறார்.
இவருடன், அதே கொலை வழக்கில் கைதான சித்ரதுர்காவை சேர்ந்த அனுகுமார், ஜெகதீஷ், லட்சுமண், நாகராஜ், பிரதோஷ் போன்றோர் சிறையில் இருக்கிறார்கள். இந்த சிறை பிரிவில் சிறை தலைமை சூப்பிரண்டாக ஐ.பி.எஸ் அதிகாரி அஞ்சுகுமார் நியமிக்கப்பட்ட பிறகு, கைதிகளுக்கு கிடைக்கப்பட்டிருந்த சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சிறைவாசிகள் பீடி, சிகரெட்டுகள் போன்ற அடிப்படை வசதிகளையும் பெற முடியாமல் வருத்தமடைந்து இருகின்றனர். இப்படி இருக்க சிறைவாசிகள் இதற்கு எதிராக நான்கு நாட்கள் தொடர்ச்சியான போராட்டமும் நடத்தினர்.

நடிகர் தர்ஷனுக்கும் சிறையில் வழங்கப்படும் உணவு வரிசையில் வாங்க வேண்டியது, கழிவறைகள் சுத்தம் செய்வது போன்ற கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது போன்ற உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், சிறையில் எந்தவொரு சலுகைகளும் இல்லாத நிலையில் தர்ஷன் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: சென்சேஷனல் நடிகை கயாடு லோஹரா இது..! இப்படி ஹாட் ட்ரெஸில் கலக்குறாங்களே..!
சமீபத்தில், தர்ஷன் அறையில் இருக்கும் சக கைதிகளான லட்சுமண், அனுகுமார், ஜெகதீஷ், பிரதோஷுடன் மோதலில் ஈடுபட்டு, கடும் வாக்குவாதத்தில் சம்பந்தப்பட்டதாகவும் தாக்கியதாகவும் சிறை அதிகாரிகள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, அனுகுமார் மற்றும் ஜெகதீஷ் தங்கள் மீது தர்ஷன் காலால் தாக்குதல் ஏற்படுத்தியதாகவும் கூறியிருக்கின்றனர். அவர்களும் ரேணுகாசாமி கொலை வழக்கில் கோர்ட்டில் தங்களை ஆதரிக்க நல்ல வக்கீல்களை நியமிக்க வேண்டும் என கேட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சம்பவத்துக்குப் பின், அனுகுமார் மற்றும் ஜெகதீஷ் பெங்களூரு சிறையிலிருந்து தங்கள் சொந்த ஊரான சித்ரதுர்கா சிறைக்கு மாற்ற வேண்டுமென்று அதிகாரிகளிடம் கோரிக்கை தெரிவித்தனர். இந்த கோரிக்கை சம்பவமும் பரப்பன அக்ரஹார சிறையில் பரபரப்பையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
மொத்தமாக, தர்ஷன் உட்பட பல கைதிகள் சில அடிப்படை வசதிகளை இழந்து, கட்டுப்பாடுகளின் கீழ் இருக்க வேண்டிய நிலை, சிறையில் உள்ள வழக்குகள் மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் மத்தியில் மோதல்களையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் பரப்பன அக்ரஹார சிறையில் பரபரப்பை அதிகரித்து, சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தர்ஷன் மற்றும் சக கைதிகள் இடையேயான மோதலின் பின்னணி மற்றும் சிறை கட்டுப்பாடுகள் தொடர்பான விவரங்கள் தொடர்ந்து திரைப்பட ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தையும் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சம்பவம், சிறைச் சூழல் மற்றும் பிரபலர்களின் சிறை அனுபவங்கள் தொடர்பான விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: விருது வழங்கும் விழாவில் ஷாக்கான ரெஜினா..! நடிகையை தொடர்ந்து ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்திய நிறுவனம்..!