தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பலருக்கும் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

குறிப்பாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைப்பதுடன், அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளும் உருவாகின்றன.

அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை பூர்ணிமா ரவி.

சமூக வலைதளங்களில் ஏற்கெனவே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மேலும் பலரது கவனத்தை ஈர்த்தார்.
இதையும் படிங்க: ஓடிடியில் அடுத்த வாரம் தரமான ஹாரர் சம்பவம்.!! ஜி.வி. பிரகாஷ் – கயாடு லோஹரின் ‘இம்மார்ட்டல்’ ரிலீஸ் தேதி வந்தாச்சி..!

தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் பூர்ணிமா ரவி, மறுபுறம் இன்ஸ்டாகிராமிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தனது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் புதிய அப்டேட்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் அவர், தற்போது கருப்பு நிற கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களால் மீண்டும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளார்.

பூர்ணிமா ரவி என்ற பெயர் சமூக வலைதளங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமான ஒன்றுதான்.

குறிப்பாக, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் தனது வீடியோக்கள் மூலம் கவனம் பெற்ற அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் அதிகமான ரசிகர்களைச் சென்றடைந்தார்.
இதையும் படிங்க: ஹீரோயின்களுக்கு இதுவரை இல்லாத மாஸ் கட் அவுட்.!! 60 அடி உயரத்தில் நயன்தாரா.. ‘மூக்குத்தி அம்மன் 2’ படக்குழு அதிரடி.!