கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டம், நாட்டையே உலுக்கிய ஒரு பெரும் கோர நிகழ்வாக மாறியது. கட்சித் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்ட இந்த பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த மனிதாபிமான பேரழிவு, தமிழக அரசியலிலும், சமூகத்திலும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோரமான சம்பவத்தின் பின், தவெக முக்கிய நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டு, அவர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கின் விசாரணை முறையில், தவெக தரப்பில் பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. “நாங்கள் ஏற்பாடு செய்த கூட்டத்திற்காக பெரிய அளவில் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. கட்சித் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியும். ஆனால் பொது மக்களை தடுக்க வேண்டும் என்பது போலீசாரின் பொறுப்பு. மேலும், பரப்புரை நடைபெறும் இடத்தில் உள்ள சென்டர் மீடியனை, தற்காலிகமாக நீக்கி கொடுத்திருந்தால் கூட்ட நெரிசலை தவிர்க்க முடிந்திருக்கும்” என்றனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற நாளின் பின்னர், கட்சித் தலைவர் விஜய் கரூருக்கு மீண்டும் செல்லவில்லை என்பதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளிக்ககும் வகையில் தனது அதிகாரப்பூர்வ வீடியோ உரையில் விஜய் மிகுந்த உணர்வுப்பூர்வமாக பேசினார். அவர் பேசுகையில், "என் வாழ்க்கையில் இதுபோன்ற வலிமிகுந்த சூழலை நான் எதிர்கொண்டதில்லை. மனம் முழுக்க வலியாக உள்ளது. நானும் மனிதன் தான். எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்துவிட்டார்கள் என்ற கவலையில், என்னால் அந்த ஊரை விட்டுச் செல்ல முடியவில்லை. மீண்டும் சென்றிருந்தால் நிலைமை மேலும் பதற்றமாக மாறியிருக்கும் என்ற அச்சத்தினால் தான் நான் செல்லவில்லை. இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல.
இதையும் படிங்க: முதல்ல "காந்தாரா 2" ரிலீஸ்... பிறகு தான் “ஜெய் ஹனுமான்” படப்பிடிப்பு..! நடிகர் ரிஷப் ஷெட்டி திட்டவட்டம்..!
இது எப்படி கரூரில் மட்டும் நடந்தது என்பது கேள்விக்குறி. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். முதலமைச்சரே, உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என்றால், என்னை எப்படியாவது செய்யுங்கள். ஆனால், அந்த விக்டிம்களுக்கோ, என் தொண்டர்களுக்கோ எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது. நான் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருப்பேன். என்னை தேட வேண்டியிருந்தால் அங்கே வாருங்கள்." என்றார். இந்த உருக்கமான உரையை தொடர்ந்து, சமூக ஊடகங்களில் விஜயின் மனநிலை தொடர்பாக பலரும் கருத்துக்களை வெளியிட்டனர். சிலர் “விஜய் மனஅழுத்தத்தில் இருக்கிறார்”, என்கிற வகையில் பேச தொடங்கினர். இதனை எதிர்த்துக் கொண்டு நடிகை வினோதினி தனது எக்ஸ் தளத்தில் ஒரு உணர்ச்சிமிக்க பதிவை வெளியிட்டார்.

அந்த பதிவில் அவர், “விஜய் அவர்கள் பண்ணின அல்லது பண்ணாத எல்லாத்தையும் விமர்சியுங்க, பரவாயில்ல. ஆனா விஜய்க்கு அந்த காம்ப்லெக்ஸ் இருக்கு, இந்த காம்ப்லெக்ஸ் இருக்குன்னு பெரிய மனோதத்துவ நிபுணர் மாதிரி பேசி பிம்பம் உருவாக்காதீங்க. திராவிடக்கட்சிகளுக்கு எதிரா வந்த எல்லாரையும் எதாவது சொல்லி க்லோஸ் பண்ணுறீங்க... விஜயகாந்த் குடிகாரர், கமல் பாஜக பி-டீம், சீமான் கோமாளி... இப்படி மாற்றுக்கட்சிகளே வர முடியாத மாதிரி நிலைமை உருவாக்கறீங்க. அவர்கள் கொள்கை ரீதியா எதிர்க்கறத பற்றி விமர்சனை பரவாயில்லை. ஆனா இப்படி ஒருவரின் தனிப்பட்ட மனநலத்தை விமர்சிக்குற மாதிரி OCD, NPD, MPDன்னு சைக்காலஜி படிச்சவங்க மாதிரி பேசாதீங்க. அடுத்தவனுக்கு மனநோய் இருக்குன்னு பேசுறதே ஒரு பெரிய மனநோய்தான்” என பதிவிட்டு இருக்கிறார்.
இந்த பதிவு சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருக்கிறது. வினோதினியின் இந்த நேர்மையான எதிர்வினை, சமூக ஊடகங்களில் ஒரு முக்கியமான விவாதத்திற்கு தூண்டிவைத்துள்ளது. சமூக உளவியல் மற்றும் அரசியல் விமர்சனங்கள் இடையே உள்ள வரம்புகள் பற்றி பலர் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கரூர் சம்பவம் ஒரு வழக்கமான தவறாக பார்க்கப்படக் கூடாது என்பது தெளிவாகிறது.

இது அமைப்பாற்றல், பொறுப்புணர்வு, மற்றும் அரசியல் தூய்மையின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்துகிறது. விஜயின் வருங்கால அரசியல் பயணம், இந்த சம்பவத்தின் தாக்கத்தில் எப்படி மாறும் என்பதும், தமிழக அரசியல் மேடையில் மாற்றத்தை உருவாக்குமா என்பதும் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: ரசிகர்களின் நீண்ட நாள் கனவான ஆண்டனி வர்கீஸின் “கட்டாளன்”..! படத்தின் படப்பிடிப்பு குறித்த மாஸ் அப்டேட்..!