டெக்னலாஜி வளர வளர மோசடிகளும் தவறு செய்யும் கூட்டங்களும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் சிக்காமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள சைபர் ஃரைம் அதிகாரிகளும் அரசாங்கமும் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் அதில் வலிய போய் சிக்கி கொள்கிறோம். அந்த வகையில் தான், நம்பி கடையை விட்டு சென்ற முதலாளிக்கு நல்ல பலனை கொடுத்துள்ளனர் கடை விற்பனையாளர் பெண்கள்.

அந்தவகையில் தான், தெய்வத்திருமகள், மனிதன் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் தான் நடிகர் கிருஷ்ணகுமார். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இவர் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியுமடைந்தார். இப்படி பிரபலமான இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அதில் முத்த மகளான, நடிகை ஆஹானா பல படங்களில் நடித்து பிரபலமானவர், ஆனால் இரண்டாவது மகளான தியா கிருஷ்ணா, சினிமா சாயலில் வராமல் யூடியூபில் பெண்கள் விரும்பும் பொருட்களை காண்பித்து பிரபலமானவர். அதன்படி கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். திருவனந்தபுரம் காவடியாரில் 'ஓ பை ஓஸி' என்ற பெயரில் கவரிங் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ரவி மோகன்.. புதிய படத்தின் டைட்டில் இதுதான்..!

இப்படி இருக்க, கடையில் நல்லபடியாக வியாபாரம் செல்லும் வேளையில் நிறை மாத கர்ப்பிணியான தியா கிருஷ்ணா, தொடர்ந்து கடைக்கு வரமுடியாததால் கடையில் வேலை பார்த்த மூன்று பெண்களிடமும் கடையை பார்த்து கொள்ளும் பொறுப்பை நம்பி விட்டு சென்றுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த மூன்று பெண் ஊழியர்களும் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருளிற்கு உண்டான தொகையை தங்கள் கியூஆர் மூலமாக பெற்று வந்துள்ளனர்.

பின்னர் கடைக்கான வரிகளை செலுத்த ஆடிட்டர் மூலமாக வரவு செலவுகளை பார்த்த தியாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரூ.69 லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் விற்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்குண்டான பணம் வங்கி கணக்கில் வராமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அந்த மூன்று பெண்களையும் விசாரித்த பொழுது, கடந்த ஒரு வருட காலமாக தங்களது கியூஆர் கோடை பயன்படுத்தி ரூ.69 லட்சம் வரை மோசடி செய்தது அம்பலமானது. இதனை அடுத்து மூன்று பெண்களையும் அலுவலகம் வரவைத்து விசாரித்ததில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ரூ. 8 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணம் திருப்பி கொடுத்துள்ளனர். மீதமுள்ள ரூ.60 லட்சத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

பின்னர் இதிலிருந்து தப்பிக்க நினைத்த மூன்று பெண்களும் தியா கிருஷ்ணாவும் அவரது தந்தையும் சேர்ந்து தங்களை ஆட்களை வைத்து கடத்தி சென்று மிரட்டியதாகவும், அவர்கள் வரியில் இருந்து தப்பிக்க தங்கள் வங்கி கணக்குகளை பயன்படுத்தியதாகவும் பணம் வந்த உடனே அவர்கள் எங்களிடம் இருந்து பெற்று கொண்டு, இப்பொழுது நாங்கள் ஏதோ ஏமாற்றியதாக கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் எங்களை அழைத்து சென்று ஜாதி ரீதியாக வசைபாடினார்கள் என்றெல்லாம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு புகாரை பெற்று கொண்ட மியூசியம் போலீசார் தியா மற்றும் கிருஷ்ணா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து அந்த மூன்று பெண்கள் மீதும் தியா கிருஷ்ணாவும் போலீசில் மோசடி புகார் அளித்துள்ளார்.

குற்றத்தையும் செய்துவிட்டு தனது தங்கையின் மீதும் பழி சொன்னால் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என களமிறங்கிய தியா கிருஷ்ணா சகோதரியான நடிகை ஆஹானா, சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மே 30ம் தேதி எடுக்கப்பட்ட அந்த காட்சியில், அந்த மூன்று பெண்களும் தங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதும், அதனால் தங்கள் மீது வழக்கு தொடர வேண்டாம், நாங்கள் எடுத்த தொகையை மீண்டும் கொடுத்து விடுகிறோம் என மன்னிப்பு கேட்டு கெஞ்சியும் உள்ளனர். மேலும் கடத்தி வரப்பட்டதாக சொன்ன அவர்களது கணவர்களும் அந்த வீடியோவில் இருக்கின்றனர்.

இதனை குறித்து பேசிய ஆஹானா, "இந்த மூன்று பெண்களை நாங்கள் கடத்தவோ துன்புறுத்தவோ இல்லை, அவர்களே எங்களை பார்க்க வந்தனர், வழக்கு வேண்டாம் என்றனர், மன்னிப்பு கேட்டனர், பணத்தை திரும்ப கொடுக்கிறோம் என்றனர். பின்னர் வெளியே சென்று புகாரும் கொடுத்துள்ளனர். இதில் நாங்கள் என்ன செய்தோம். உண்மையில் இந்த வீடியோவை வெளியிட்டு அந்த பெண்களை காயப்படுத்த வேண்டும் என்பது எங்களது நோக்கமே இல்லை. ஆனால் எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்லவே இந்த வீடியோவை வெளியிடுகிறோம்" என தெரிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தியா கிருஷ்ணா, ஜாதி ரீதியாக நாங்கள் பேசினோம் என சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் நான் என்ன ஜாதி என எனக்கே தெரியாது. இதில், அவர்களை நான் ஏன் பேச போறேன். அதுமட்டுமல்லாமல் நானே கலப்பு திருமணம் தான் செய்து இருக்கிறேன் என தெரிவித்தார்.

இப்படி தனது சகோதரிக்கு பிரச்சனை என்றவுடன் அதிரடியாய் களமிறங்கிய ஆஹானாவை அவரது ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெள்ளை நிற ஆடை.. இடை அழகில் போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா மேனன்..!