மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழித்திரையிலும் தனித்திறமை கொண்ட நடிகையாக சிறந்து விளங்குபவர் ஐஸ்வர்யா லட்சுமி.

திரைத்துறையில் ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

மருத்துவத்தைப் பூர்த்தி செய்த பின் திரையுலகைத் தன் கனவுகளுக்கான மேடையாக மாற்றிக்கொண்ட அவர், இன்று பல திரையுலகில் நடிகையாக இருக்கிறார்.
இதையும் படிங்க: கிளாமர் மாற்று கவர்ச்சியை ஸ்டைலாக வெளிப்படுத்தும் நடிகை திவ்ய பாரதி..!

திருவனந்தபுரத்தில் பிறந்த ஐஸ்வர்யா, ஸ்ரீ நாராயணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ் - இல் MBBS பட்டத்தை முடித்தவர்.

இளம் வயதில் மாடலிங் மீது ஆர்வம் கொண்டு, 2014 முதல் Vanitha, FWD Life போன்ற பத்திரிகைகளிலும், பல பிரபல விளம்பரங்களிலும் மாடலாக பங்கேற்றார்.

2017-ம் ஆண்டு மலையாள திரையுலகத்தில் வெளிவந்த “Njandukalude Nattil Oridavela” திரைப்படம் மூலம் நடிப்புத் திறனை வெளிப்படுத்திய அவர், முதல் படத்திலேயே பாராட்டுகள் பெற்றார்.

அதே ஆண்டில் வெளிவந்த “Mayaanadhi” திரைப்படம், அவரை ரசிகர்களின் மனதில் ஆழமாக பதியச் செய்தது.

அடுத்தடுத்து Varathan, Kaanekkaane போன்ற படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா, 2019-ல் “ஆக்ஷன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்தார்.

அதன்பின் ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் 1 & 2, கட்டா குஸ்தி, மாமன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தார்.

குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத் தொடரில் அவரது தோற்றம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நடிப்புடன் மட்டுமல்லாமல், 2022-ல் “Gargi” என்ற திரைப்படத்தை தயாரிப்பதன் மூலம் தயாரிப்பாளராகவும் களத்தில் இறங்கினார். அதனைத் தொடர்ந்து மலையாள படம் *“Kumari”*யிலும் முக்கிய பங்காற்றினார்.
இதையும் படிங்க: ‘ரசவாதி’ படத்திற்கு சர்வதேச பாராட்டுடன் விருது...! பிரான்ஸ் திரைப்பட விழாவில் சுவாரசியம்..!