இன்றைய நவீன கால சூழலில் சமூக ஊடகங்கள் சினிமா உலகத்திற்கு திறக்கின்ற வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூடியூப் சேனலில் அரசியல் மற்றும் சமகால சமூக நிகழ்வுகளை நையாண்டி மற்றும் நகைச்சுவை கலந்த வடிவில் விளக்கியதன் மூலம் பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர், தற்போது வெள்ளித்திரையை நோக்கி தங்களது பயணத்தை வலுப்படுத்தி வருகின்றனர். இணையத்தில் மட்டுமே இருந்த இவர்களின் பயணம், தற்போது திரைப்பட தயாரிப்பு வரை வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பரிதாபங்கள் என்ற பெயரில் தனி யூடியூப் சேனல் ஆரம்பித்து, நகைச்சுவை மற்றும் சமூக விமர்சனங்களை கலந்த பல சுவாரசியமான வீடியோக்களைக் காட்சிப்படுத்தி வந்த இந்த இரட்டையர்களும், தற்போது “ஓ காட் பியூட்டிபுல்” என்ற திரைப்படத்தின் மூலம் நேரடியாக திரைத்துறையில் காலடி வைத்துள்ளனர்.
இப்படிப்பட்ட கோபி மற்றும் சுதாகர் இணைந்து பரிதாபங்கள் புரொடக்ஷன் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கியுள்ளனர். இவர்களது முதல் முயற்சியாகவே “ஓ காட் பியூட்டிபுல்” என்ற படத்தை தயாரித்து, அதில் தாங்களே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம், வெறும் பொழுதுபோக்கு அல்ல.. அதில் சமூகப் பிரச்சனைகள், மனித உணர்வுகள், நவீன காதல், தற்காலிக வாழ்க்கை முறை ஆகியவை நகைச்சுவை மஞ்சளில் அழுத்தமாக பேசப்படுவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்க “ஓ காட் பியூட்டிபுல்” படத்தை, புதிய இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கியுள்ளார். இது அவருடைய முதல் திரைப்படமாகும். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் என பார்த்தால், விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் ஆகியோரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இசை அமைப்பாளராக J.C. Joe பணியாற்றியுள்ளார். இவர் புதியவராக இருந்தாலும், அவரது இசைக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த திரைப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ள பாடல் “வேணும் மச்சா பீஸ்” தான். இவர் நடிகரே தவிர, ஒரு திறமையான பாடகர் என்பதும் பல முந்தைய பாடல்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்பாடல் வெளியாகியவுடன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. காதலுக்கும் காமெடியுக்கும் இடையே ஒரு தனிப்பட்ட வாசல் திறக்கும் வகையில் அமைந்திருந்த இந்த பாடல், பலரின் கவனத்தை ஈர்த்தது. யூடியூப்பில் வெளியான சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றது. இந்த வரவேற்புக்குப் பின், படக்குழு தற்போது இரண்டாவது பாடலின் வெளியீட்டை அறிவித்துள்ளது. "மியூட் லவ் ஸ்டோரி" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல், வரும் 22-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் பெயரே சுவாரசியமாக உள்ளது. “மியூட் லவ்” என்றால், பேசாமல் நடைபெறும் காதல். இது காதலின் உணர்வுப்பூர்வமான பக்கத்தை சித்தரிக்குமா? இல்லையெனில் ஒரு நகைச்சுவையான காதல் அனுபவமா என்பதைப் பாடல் வெளியாகிய பின் தான் அறிய முடியும்.

இந்த நிலையில் “ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் ப்ரீ-ப்ரொமோ வீடியோக்கள், பாடல்கள், மற்றும் படத்தின் உருவாக்கத்தில் ஈடுபட்ட நபர்களின் பின்புலம் போன்றவற்றால் இணையத்தில் ஏற்கனவே பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. மேலும் கோபி மற்றும் சுதாகர் – யூடியூபில் தொடங்கிய பயணத்தில், குறும்படங்களாக இருந்தபோதும் சமூக விமர்சனங்களை நகைச்சுவையுடன் தொகுத்து மக்கள் மனதில் பதிந்து வைத்தவர்கள். அவர்கள் தற்போது முழு நீள திரைப்படம் ஒன்றை உருவாக்கி வெளியிடும் நிலையில், ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா விமர்சகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 'மனுஷி' பட முக்கிய காட்சியை டெலிட் செய்ய சொன்ன சென்சார் போர்ட்..! ஐகோர்ட் நீதிபதி எடுத்த அதிரடி முடிவு..!
சமூக ஊடகங்களில் உருவாகும் பிரபலத்தைக் கொண்டே வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இதன் முக்கிய உதாரணமாக பரிதாபங்கள் குழுவின் பயணத்தை கொள்ளலாம். எனவே “ஓ காட் பியூட்டிபுல்” திரைப்படம், வெறும் நகைச்சுவை படமாக மட்டுமல்லாமல், சமூக செய்திகளை கேள்விக்குள்ளாக்கும் முயற்சியாக அமைந்திருக்கக்கூடும். இது, இன்று தமிழ் சினிமாவில் காணப்படும் புதிய கோணங்களை வெளிப்படுத்தும் ஒரு படைப்பாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகேவ “பரிதாபங்கள்” என்ற பெயர் நகைச்சுவைக்காக வெறும் பெயராக இருந்தாலும், இக்குழுவின் பயணம் எந்தவொரு பரிதாபத்துக்கும் இடமில்லாத வெற்றிப் பயணமாக மாறியுள்ளது. தங்கள் சொந்த தயாரிப்பில், தாங்களே நடித்தும், புதிய இயக்குநரின் வழியாகவும் ஒரு முழு நீள படத்தை உருவாக்கி மக்களுக்கு வழங்குவது என்பது, இன்றைய சூழ்நிலையில் மிகவும் சாதனைக்கு உரிய விஷயமாகும்.

அப்படிப்பட்ட “ஓ காட் பியூட்டிபுல்” படம் மற்றும் அதன் பாடல்கள், இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் வகையில் அமைந்துள்ளன. வருகிற 22-ம் தேதி வெளியாகும் “மியூட் லவ் ஸ்டோரி” பாடல் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் உயர்த்துமா என்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: கொஞ்சம் பியூட்டியா தெரியனுமாம்.. அதுக்குன்னு இப்படியா..! நடிகை திஷா பதானி நீங்க இதை செய்யலாமா..!