தென்னிந்திய திரைத்துறையின் பிரபல நடிகைகளில் ஒருவராக விளங்கும் அனுஷ்கா ஷெட்டி, கடந்த சில ஆண்டுகளாக திரையில் மிகக் குறைவாகவே தோன்றியுள்ளார். அவரது ரசிகர்கள் ஏங்கும் வகையில், அவர் மீண்டும் முழுவீச்சில் திரும்பும் நாளை எதிர்நோக்கியபடி இருந்தனர். ஆனால், அவர் மீண்டு வருவதற்கான பயணம் எளிதானதல்ல. கடந்த சில வருடங்களாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அனுஷ்கா, தற்போது தனது புதிய படம் ‘காட்டி’ மூலம் திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.
இப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளாலும், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது. இது நடிகை அனுஷ்காவிற்கு ஒரு கம்பேக் படம் என்ற வகையிலும் பார்க்கப்படுகிறது. எனினும், இப்படத்தின் ப்ரோமோஷன்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள், நிகழ்ச்சிகள் போன்ற எந்தவித விழாக்களிலும் நடிகை பங்கேற்க மறுத்திருப்பது தற்போது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ‘அருந்ததி’, ‘பாகுபலி’, ‘சிங்கம்’ போன்ற வெற்றி படங்களின் மூலம் ஒரு மாஸ் ஹீரோயின் என்ற இடத்தை பிடித்த அனுஷ்கா, கடந்த 2018 பிறகு திரையில் குறைவாகவே திரையில் காணப்பட்டார். ‘நிஷப்தம்’ போன்ற சில ஓடிடி படங்களில் மட்டுமே அவர் தோன்றினார். ஆனால், அவரது உடல் எடையிலான மாற்றம், ரசிகர்களிடையே எப்போதும் ஒரு டிஸ்கஷன் பாயிண்ட் ஆகவே இருந்து வந்தது. சமூக வலைத்தளங்களில், "அனுஷ்கா மிகவும் குண்டாகிவிட்டார்", "அவரால் இனி நாயகியாக நடிக்க முடியாது" போன்ற நெகட்டிவ் கருத்துக்கள் பரவியதாலும், நடிகை மேடைகளிலும், ப்ரோமோஷன்களில் தோன்ற மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மிகவும் நேர்மையாக தனது உடல் எடையை சமன்படுத்திக் கொள்ளும் பயணத்தில் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொழிப்பயிற்சி, யோகா, ஃபிட்னஸ் டைட் போன்றவற்றில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் 'காட்டி' திரைப்படத்தை இயக்கியுள்ளார் தெலுங்கில் பல தரமான படங்களை இயக்கிய கிரிஷ். இப்படம் ஒரு மனிதாபிமான கதை, கிராமத்து சூழலை மையமாக கொண்டு நகரும் ஒரு சமூக சினிமா என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அனுஷ்கா, தனது பழைய பிம்பத்தை முற்றிலும் மாற்றி ஒரு தீவிரமான, உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் நடிகர் விக்ரம் பிரபு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் இது அவருக்கு மிக முக்கியமான அறிமுகம் என்பதால், ப்ரோமோஷன்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். மேலும் தென்னிந்திய திரைத்துறையில், நடிகைகள் ப்ரோமோஷன்களில் பங்கேற்க மறுக்கும் பழக்கத்திற்கு முன்னோடியானவர் நயன்தாரா. கடந்த பல வருடங்களாக, அவர் நடிக்கும் எந்த படத்திற்கும் ப்ரோமோஷன் செய்ய வர மாட்டேன் எனவே ஒப்பந்தத்தில் முதலிலேயே தெரிவித்து விடுகிறார். ஆனால் அதனால் அவரது மார்க்கெட் குறையவில்லை என்பது ஒரு ஆச்சரியமான உண்மை.
இதையும் படிங்க: 'மதராஸி'யுடன் போட்டி போடும் 'காந்தி கண்ணாடி'..! எஸ்.கே படத்தின் மோதல் குறித்து kpy பாலா பேச்சு..!
தற்போது அதே பாதையை அனுஷ்கா பின்பற்றத் தொடங்கியிருக்கிறாரா? என்பது சமூக வலைத்தளங்களில் எழும் கேள்வி. 'காட்டி' படத்தின் தயாரிப்பாளர் கூறுகையில், “அனுஷ்கா ஆரம்பத்திலேயே ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டார். உடல் எடையைக் குறைக்கும் பயணத்தில் இருக்கிறார். தன்னை மற்றவர்கள் எப்படி பார்ப்பார்கள் என்ற சங்கடமும் அவருக்கு இருக்கிறது. அதனால்தான் அவர் விழாக்களிலிருந்து விலகியிருக்கிறார்” என்றார். இதை கேட்ட ரசிகர்கள் தலைவர்களின் மார்க்கெட்டிங் நெறிமுறைகளை நடிகைகளும் பின்பற்றுகிறார்கள் என வியப்புடன் வருகின்றனர். ஒரு பக்கம், அனுஷ்காவை மிகவும் நேசிக்கும் ரசிகர்கள்,
“அவங்க உடம்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை. திரையில் அவரோட உணர்வுகள் நம்மை தொடுகிறது. ப்ரோமோஷன் வந்தா வரட்டும், இல்லேனா பரவாயில்லை” என்று கூறுகிறார்கள். மேலும் திரையுலக வட்டாரங்களின் தகவல்படி, அனுஷ்கா தற்போது பிற திரைப்படங்கள் குறித்து பேச ஆரம்பித்துவிட்டார். அவை வெளிநாட்டு இயக்குநர்கள் மற்றும் தமிழ், தெலுங்கு ஜோடையான தயாரிப்பாளர்களுடன் விவாத நிலைமைக்கு வந்துள்ளன. இருப்பினும், அவர் விரைவில் ரசிகர்களை நேரடியாக சந்திக்க வாய்ப்பு இருக்குமா என்பது குறித்து அவர் தரப்பில் எந்த உறுதியான பதிலும் இல்லை. ஆகவே அனுஷ்கா ஷெட்டியின் வருகை என்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.

ஆனால் அவர் ப்ரோமோஷன்களில் பங்கேற்க மறுப்பது மற்றும் அதற்கான உடல் மொழி, மனச்சோர்வு மற்றும் சமூக விமர்சனங்களை தவிர்க்கும் எண்ணம் ஆகியவை, ஒரு பெரிய பிரபலமாக இருக்க வேண்டிய பொறுப்பின் ஒரு பக்கம் குறைவாகவே காணப்படுகிறது. அதே நேரத்தில், அவரது தனிப்பட்ட முயற்சிகளை மதித்து, அவரது பயணத்தில் ஆதரவு தரும் ரசிகர்களும் அதிகமாகவே இருக்கின்றனர். எனவே ‘காட்டி’ திரைப்படத்தின் வெற்றியே இதற்கு ஒரு தீர்வு ஆகுமா என்பது, செப்டம்பர் மாதம் ரிலீஸாகும் போது தெரியவரும்.
இதையும் படிங்க: ஒருவழியாக தனது காதலனை கண்முன் காட்டிய நடிகை நிவேதா பெத்துராஜ்..! ஜோடி பொருத்தம் அமோகம்..!