• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இந்த வயசுல ஜாலியா இருங்கப்பா.. வாழ்க்கைய என்ஜாய் பண்ணுங்க..!! "கருப்பு" பட விழாவில் நடிகர் சூர்யா பேச்சு..!

    நடிகர் சூர்யா இந்த வயசுல ஜாலியா இருங்கப்பா என "கருப்பு" பட விழாவில் பேசி இருக்கிறார்.
    Author By Bala Wed, 13 May 2026 11:49:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-as-an-elder-brother-i-say-this-actor-suriyas-speech-at-the-karuppu-movie-event-tamilcinema

    தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் தனித்த அடையாளம் கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் சூர்யா. கமர்ஷியல் படங்களிலிருந்து சமூக கருத்துள்ள கதைகள் வரை பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செய்து வரும் அவர், தற்போது “கருப்பு” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வர தயாராகியுள்ளார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது நடைபெற்றுள்ள புரமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா பேசிய உணர்ச்சிகரமான வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “கருப்பு” திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் அதிக ஆர்வம் உருவாகியுள்ளது. மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    படம் நீதிமன்ற வழக்கை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதுடன், அதில் கடவுள் நம்பிக்கை மற்றும் மனித உணர்ச்சிகளை இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதனால் இந்த படம் வெறும் கமர்ஷியல் ஆக்ஷன் படமாக இல்லாமல், உணர்ச்சி மற்றும் சஸ்பென்ஸ் கலந்த வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: நடிகை திரிஷா வராத 'கருப்பு' பட விழாவில் ஏற்பட்ட பதற்றம்..!! மேடையில் திடீரென ஏறிய நபர்.. ஷாக்கான சூர்யா.. அடுத்து நடந்த டிவிஸ்ட்..!

    “கருப்பு” திரைப்படம் மே 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் தற்போது படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை, ஐதராபாத், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்து கொண்டு ரசிகர்களை நேரில் சந்தித்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் ஐதராபாத்தில் பிரம்மாண்ட பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி, திரிஷா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. குறிப்பாக தெலுங்கு ரசிகர்கள் சூர்யாவை வரவேற்ற விதம் இணையத்தில் அதிகம் பேசப்பட்டது.

    karuppu movie

    இதனை தொடர்ந்து நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துடன் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய நடிகர் சூர்யா, தனது திரைப்பட பயணம், ரசிகர்களின் ஆதரவு மற்றும் இளைஞர்களின் கனவுகள் குறித்து உணர்ச்சிகரமாக பேசியது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    “கடந்த 5 ஆண்டுகளில் நான் நடித்த படங்களிலிருந்து இது மிகவும் வித்தியாசமான படம்” என்று தொடங்கிய சூர்யா, “இந்த படத்தின் முதல் பாதி ஒரு உணர்ச்சிப்பூர்வமான பயணமாக இருக்கும். இரண்டாம் பாதி முழுக்க முழுக்க தியேட்டர் மொமென்ட்ஸால் நிரம்பி இருக்கும். ரசிகர்கள் திரையரங்குகளில் விசில் அடித்து ரசிப்பதற்கான நிறைய காட்சிகள் இருக்கின்றன” என்று கூறினார்.

    சூர்யாவின் இந்த பேச்சு ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக “தியேட்டர் மொமென்ட்ஸ்” என்ற அவரது வார்த்தை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “சூர்யா மீண்டும் மாஸ் ரூட்டுக்கு திரும்பியிருக்கிறார்” என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    அதோடு, “மே 14ஆம் தேதி மீண்டும் உங்கள் அன்பை பெறுவோம் என்று நம்புகிறேன்” என்று கூறிய சூர்யா, ரசிகர்களை பார்த்து உணர்ச்சியுடன் பேசிய தருணம் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்தது. தொடர்ந்து பேசிய அவர், “நான் சந்தோஷமாக இருக்கணும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நானும் நீங்கள் எல்லாரும் ரொம்ப சந்தோஷமாக இருக்கணும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார்.

    இந்த வார்த்தைகளுக்கு அரங்கில் இருந்த ரசிகர்கள் பல நிமிடங்கள் கைதட்டி உற்சாகம் காட்டினர். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக சூர்யாவின் படங்கள் ஓடிடி மற்றும் தியேட்டர் வெளியீடுகள் தொடர்பாக பல விவாதங்கள் நடந்த நிலையில், ரசிகர்களுடன் அவர் பகிர்ந்த இந்த உணர்ச்சி தருணம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    karuppu movie

    இளைஞர்களுக்காக அவர் கூறிய வார்த்தைகளும் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. “ஒரு அண்ணனாக சொல்கிறேன், இந்த வயதை மிஸ் பண்ணாதீங்க. பெரிய கனவு காணுங்கள். எல்லாமே நிச்சயம் நனவாகும்” என்று சூர்யா பேசியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    சூர்யா எப்போதும் தனது நிகழ்ச்சிகளில் இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, சமூக சேவை, கனவு, முயற்சி போன்ற விஷயங்களை தொடர்ந்து பேசும் அவர், இந்த நிகழ்ச்சியிலும் அதே பாணியை தொடர்ந்துள்ளார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் “கருப்பு” திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. படத்தின் ட்ரெய்லர், பின்னணி இசை, நீதிமன்ற காட்சிகள் மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருப்பது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திரைப்படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், ரசிகர்கள் தற்போது முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர். பல இடங்களில் அதிகாலை காட்சிகளுக்கே ஹவுஸ்ஃபுல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    karuppu movie

    இதனால் “கருப்பு” திரைப்படம் சூர்யாவின் சமீபத்திய படங்களில் மிக முக்கியமான திருப்பமாக அமையுமா என்ற கேள்வி தற்போது திரையுலக வட்டாரங்களில் எழுந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ள எதிர்பார்ப்பு மற்றும் சமூக வலைதளங்களில் கிடைக்கும் வரவேற்பை பார்க்கும்போது, படம் வெளியாகும் முதல் நாளிலேயே பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜியின் 'கருப்பு' பட புதிய போஸ்டர் ரிலீஸ்..! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..!

    மேலும் படிங்க
    DIRTY POLITICS..! தூய சக்தியா..? எம்எல்ஏ-வை தூக்கும் சக்தியா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    DIRTY POLITICS..! தூய சக்தியா..? எம்எல்ஏ-வை தூக்கும் சக்தியா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    பர்சனலா வச்சிக்கோங்கன்னு சொன்ன பிரேமலதா விஜயகாந்த்... பேரவையிலேயே சி.எம். விஜய் கொடுத்த அதிரடி பதிலடி...!

    பர்சனலா வச்சிக்கோங்கன்னு சொன்ன பிரேமலதா விஜயகாந்த்... பேரவையிலேயே சி.எம். விஜய் கொடுத்த அதிரடி பதிலடி...!

    அரசியல்
    ஜோதிடருக்கு அரசு பணியா..? கொந்தளிப்பு.. ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை வாபஸ் பெற்ற தமிழக அரசு..!

    ஜோதிடருக்கு அரசு பணியா..? கொந்தளிப்பு.. ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை வாபஸ் பெற்ற தமிழக அரசு..!

    தமிழ்நாடு
    மாரடைப்பால் பறிபோன உயிர்..!! 47-வது வயதில் கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ் திடீர் மரணம்..!

    மாரடைப்பால் பறிபோன உயிர்..!! 47-வது வயதில் கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ் திடீர் மரணம்..!

    சினிமா
    ஐயப்ப பக்தர்களே.. ரெடியா..?? வைகாசி மாத பூஜை.. சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு..!!

    ஐயப்ப பக்தர்களே.. ரெடியா..?? வைகாசி மாத பூஜை.. சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு..!!

    பக்தி
    தமிழ்நாட்டுக்கே நல்ல CM கிடைக்கும் பொழுது.. உங்களுக்கு கிடைக்கமாட்டாங்களா..!! கேரள மக்களை ஆசுவாசப்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி..!

    தமிழ்நாட்டுக்கே நல்ல CM கிடைக்கும் பொழுது.. உங்களுக்கு கிடைக்கமாட்டாங்களா..!! கேரள மக்களை ஆசுவாசப்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி..!

    சினிமா

    செய்திகள்

    DIRTY POLITICS..! தூய சக்தியா..? எம்எல்ஏ-வை தூக்கும் சக்தியா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    DIRTY POLITICS..! தூய சக்தியா..? எம்எல்ஏ-வை தூக்கும் சக்தியா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    பர்சனலா வச்சிக்கோங்கன்னு சொன்ன பிரேமலதா விஜயகாந்த்... பேரவையிலேயே சி.எம். விஜய் கொடுத்த அதிரடி பதிலடி...!

    பர்சனலா வச்சிக்கோங்கன்னு சொன்ன பிரேமலதா விஜயகாந்த்... பேரவையிலேயே சி.எம். விஜய் கொடுத்த அதிரடி பதிலடி...!

    அரசியல்
    ஜோதிடருக்கு அரசு பணியா..? கொந்தளிப்பு.. ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை வாபஸ் பெற்ற தமிழக அரசு..!

    ஜோதிடருக்கு அரசு பணியா..? கொந்தளிப்பு.. ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை வாபஸ் பெற்ற தமிழக அரசு..!

    தமிழ்நாடு
    கொடூரமான உத்தரவு..! பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கு..! ஹைகோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை..!

    கொடூரமான உத்தரவு..! பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கு..! ஹைகோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை..!

    தமிழ்நாடு
    கொஞ்சம் சிந்திங்க விஜய்... முதல்வருக்கு ஆலோசனை சொல்கிற இடத்தில் இவரா?... விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்...!

    கொஞ்சம் சிந்திங்க விஜய்... முதல்வருக்கு ஆலோசனை சொல்கிற இடத்தில் இவரா?... விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்...!

    அரசியல்
    புஷ்பா பட பாணியில் சோஃபா ஆட்சி...! உதயநிதி குற்றச்சாட்டு.. திமுகவினர் வெளிநடப்பு..!!

    புஷ்பா பட பாணியில் சோஃபா ஆட்சி...! உதயநிதி குற்றச்சாட்டு.. திமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share