பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர் தான் நடிகர் ராஜு ஜெயமோகன், இவர் தற்போது முதன் முறையாக ஹீரோவாக 'பன் பட்டர் ஜாம்' என்ற திரைப்படத்தில் அவதாரம் எடுத்து இருக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இப்படம், இன்றைய இளைஞர்களுக்கே உரிய உணர்ச்சிவசமான படமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், கதை மிகவும் ரசிக்கத்தக்க, புதுமையான நம்பிக்கை பெற்றவர்களுக்கு கொடுத்துள்ளது மேலாம். இப்படத்தில் இரண்டு அம்மாக்களான, சரண்யா பொன்வண்ணனும் தேவதர்ஷினியும் தங்களது பிள்ளைகள் கல்லூரியில் தவறான காதலுகளில் சிக்காதவாறு ஒரு வித்தியாசமான "அரேஞ்ச் லவ்" திட்டத்தை வகுக்கின்றனர்.
அந்த வகையில் 'நம் பிள்ளைகள் ஒருவரையொருவர் காதலிக்கட்டும், அதை நாமே ஏற்பாடு செய்துவிட்டோம் என்றாலும், அவர்கள் பார்வையில் இது லவ் மேரேஜ் என்றாலே போதும்' என்பதே இந்த இரண்டு தாய்மார்களின் திட்டமாக உள்ளது. அதன்படி, கல்லூரிக்கு செல்லும் கதாநாயகன் ராஜு, பாவ்யா த்ரிகாவை காதலிக்கிறார். இருவருக்கும் இடையே ஏற்படும் காதல், அதற்கு பின்னால் உள்ள அம்மாக்களின் திட்டம் என அனைத்தும் வெற்றியடைகிறதா? அல்லது எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படுகிறதா? என்பதே படத்தின் மையக் கருத்தாக உள்ளது. இந்த சூழலில், நடிகர் ராஜு போட்டியாளராக கலந்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே வெளிப்படுத்தியது போல் நகைச்சுவையும், இயல்பான நடிப்பும் கொண்டு ரசிகர்களின் மனதை இப்படத்தில் கவர்ந்திருக்கிறார். இப்படி ஹீரோ ஸ்டைல் அல்லாத, நம் பக்கத்து வீட்டு பையன் மாதிரியான, சந்தோஷமாக வாழும் இளைஞனாக தனது கதாபாத்திரத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, நகைச்சுவை மற்றும் உணர்ச்சி நிரம்பிய காட்சிகளில் அவர் செய்த நடிப்பு பாராட்டதக்கது. அதேபோல், கதாநாயகிகளாக நடித்துள்ள ஆதியா பிரசாத் மற்றும் பாவ்யா த்ரிகா இருவரும் தங்களுக்கே உரிய தனிச்சிறப்புடன் காட்சிகளை அட்டகாசமாக கொடுத்துள்ளனர். இப்படியாக இருவரது நடிப்பு பாராட்டை பெற்றுள்ளது. இந்த படத்தில் உள்ள முக்கியமான ஒரு பில்லர் தான் அம்மாக்கள்அதன்படி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் தேவதர்ஷினி ஆகிய இருவரும் தங்கள் பிள்ளைகளை பற்றிய அக்கறையும், அதிகளவு காதலும் கொண்ட தாய்மாராக மிக நம்பகமாக நடித்துள்ளனர். இயக்குநர் ராகவ் மிர்ததி தனது முதல் படத்திலேயே இளம் தலைமுறையை மையமாக கொண்டு ஒரு புதுமையான கதையை சொல்ல முயற்சித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: காதல் தோல்வி காரணமாக நடிகை தமன்னா எடுத்த விபரீத முடிவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
மேலும், நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் உணர்ச்சிக்கு உயிர் ஊட்டும் வகையில் உள்ளன. குறிப்பாக, காதல் தொடங்கும் தருணங்களில் வரும் அருமையான இசைகள், மற்றும் உணர்ச்சி பாயும் காட்சிகளில் வரும் ஸ்கோர் நம்மை அந்த காட்சிகளுடன் இணைக்க செய்கின்றன. ஒளிப்பதிவாளரும் சிறப்பாகக் காட்சிகளை படம்பிடித்துள்ளார். கல்லூரி சூழல், இளமையின் பரபரப்பு, இரவுப் பொழுதுகளின் அமைதியுடன் கூடிய காதல் தருணங்கள் எல்லாம் கண்ணுக்கு இனிமையாக இருக்கின்றன. படத்தின் முக்கியமான சில இடங்களில் சற்று மெதுவாக நகரும் தருணங்கள் காணப்படுகின்றன.
சில காட்சிகளில் ஏற்படும் இரண்டாவது கட்ட காட்சிகள், சிறு சலிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால், இதை மிகப் பெரிய குறையாகக் எடுத்து கொள்ள முடியாது. ஏனெனில் அது படத்தின் முழுமையான ஓட்டத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக இல்லை. ஆகவே, 'பன் பட்டர் ஜாம்' படமானது இனிமையான, நேர்த்தியான காதல் படமாக பார்க்கப்படுகிறது. இன்று புது தலைமுறை பார்வையாளர்களுக்கான உருப்படியான படைப்பாக இப்படம் அமைந்துள்ளது.

மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இப்படம் அதன் எளிமை மற்றும் உணர்ச்சி நிரம்பிய அணுகுமுறையை ரசிகர்கள் கொள்ளும் வகையில் இப்படம் அமைந்துள்ளது. இது பிக்பாஸ் புகழ் ராஜு ஜெயமோகனுக்கான ஒரு தகுந்த, வெற்றிகரமான சினிமா அறிமுகமாக இருக்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும். அவர் எதிர்காலத்தில் இன்னும் பல படங்களில் வித்தியாசமான கதைகளில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இப்படம் மூலம் உருவாகி இருக்கிறது. மேலும், காதலும், குடும்பமும், நகைச்சுவையும் கலந்த ஒரு அருமையான படமாக 'பன் பட்டர் ஜாம்' பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நீல நிற அழகிய சுடிதாரில் நடிகை பிரியா வாரியர்...! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!