சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்படமான 'கூலி' படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இத்திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோருடன் ரஜினியின் முதல் கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதாலேயே இந்த படத்துக்கு மிகப்பெரிய ஹைப்ஸ் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று என பார்த்தால் அதில் இணைந்துள்ள நட்சத்திரங்கள் தான்.
இதில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் இணைந்துள்ளனர். இந்திய சினிமாவின் பன்முகத் திறன்கள் கொண்ட இந்த நடிகர்கள் ஒரே படத்தில் இணைவது ஒரு பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது. மேலும் மிகவும் ஆர்வத்தை தூண்டும் விஷயம் என்கிறான் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது தான். அவரது இசை, இளம் ரசிகர்களிடையே மட்டுமல்ல, அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் ஒரு தனி இடத்தைப் பிடித்துவிட்டது. அண்மையில் வெளியான "மோனிகா" பாடல், அதன் எலக்ட்ரானிக் பீட் மற்றும் நவீன இசை அமைப்பால் இணையதளங்களில் செம வைரலானது. யூடியூப்பில் வெளியான முதல் 24 மணிநேரத்தில் ஒரு கோடியே இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்தது.

இந்த மோனிகா பாடலின் வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் வெகுவாக காத்திருக்கும் அடுத்த பாடலான "பவர் ஹவுஸ்" பாடல் இன்று வெளியாக உள்ளது. இந்த பாடல், ஜூலை 22ஆம் தேதியான இன்று இரவு 9.30 மணிக்கு, ஐதராபாத்தில் நடைபெறும் ஒரு சிறப்பு இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட உள்ளது. பவர் ஹவுஸ் பாடல் ஒரு ஹை எனர்ஜி மாஸ் பாடலாக இருக்கும் என லீக் ஆன தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பாடலின் வசனங்களை விவேக் எழுதியிருக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையில் ரஜினிகாந்தின் மாஸ் ஸ்டைல் மற்றும் லோகேஷின் சினிமாடிக் டெம்போ இணைந்து வருவதால், இந்த பாடல் 'மாஸ் மீட் மெலோடி' பாடலாக ரசிகர்களிடம் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் ராணா டகுபதி..!
'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகமெங்கும் உள்ள தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்திய சினிமாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் இப்படம், பாகுபலி, காமாண்டோ, வீரம், போன்ற வரலாற்றுச் சினிமாக்களை தாண்டி வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் எக்ஷன் சீன்கள், டயலாக்கள் மற்றும் கலைத்திறன்கள் அனைத்தும் மிகுந்த ரகசியத்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. லோகேஷ் தனக்கே உரிய மிரட்டும் எடிடிங், டார்க் ஸ்டைல் காட்சிகள் மற்றும் குற்றவியல் உலகைக் கலந்த கதையம்சம் இந்தப் படத்திலும் தொடரும் என நம்பப்படுகிறது.மேலும் இப்படத்தின் முதல் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரஜினிகாந்தின் நடிப்பில், லோகேஷின் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் 'கூலி' திரைப்படம், நிச்சயமாக இந்த ஆண்டின் மிக முக்கியமான திரைப்படங்களுள் ஒன்றாக இருக்கும்.

இந்தப் படத்தின் 'பவர் ஹவுஸ்' பாடல் இன்று வெளியாகும் என்பதையும், அதற்கு பிறகு மேலும் எத்தனை பாடல்கள் வெளியாகவுள்ளன என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த இசை வெளியீட்டு விழா மூலம் படம் தொடர்பான புதிய அப்டேட்டுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாலும், இன்று இரவு 9.30 மணி ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கப்போகிறது என்பது உறுதி.
இதையும் படிங்க: பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் ராசி கண்ணா..! "உஸ்தாத் பகத்சிங்" படத்தில் முக்கிய கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு..!