தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா மோட்டுவானி தற்போது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றிய பரபரப்பான செய்தியால் சினிமா வட்டாரத்தில் நாயகியாக உள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அவரது கணவர் சோஹைல் கட்டாரியாவுடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி விட்டதாக ஹன்சிகா மீதான பரபரப்பு கிளம்பியுள்ளது. இது, விவாகரத்து தொடர்பான தகவல்களுக்கு வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளதோடு, இதனை உறுதிப்படுத்தும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையிலும், சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் ‘உண்மைதான்’ என்றே பரவத் தொடங்கியுள்ளது. நடிகை ஹன்சிகா, கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, தொழிலதிபர் மற்றும் நிகழ்வு ஒழுங்குபடுத்தல் நிறுவன உரிமையாளர் சோஹைல் கட்டாரியாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அரண்மனையில், மத்திய யுக ராஜ்பூட் மாடலில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் இந்திய திரையுலகின் பல பிரபலங்களும், ஹன்சிகாவின் குடும்பத்தினரும், நெருங்கிய தோழிகளும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு முந்தைய ஹல்தி, மெஹந்தி, சங்கேத் விழாக்கள் எல்லாமும் பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தவை. இருவரது காதல் மற்றும் திருமண தகவல்கள் வெளியானபோது, அது ஒரு விவாதத்திற்குரிய அம்சமாகவும் அமைந்தது. காரணம், சோஹைல் கட்டாரியா, ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான ரிங்கி பஜாஜின் முன்னாள் கணவர் என்பது தான்.

சோஹைல் மற்றும் ரிங்கி திருமணத்தில் ஹன்சிகா நேரில் கலந்து கொண்டு எடுத்த புகைப்படங்களே, பிறகு ஹன்சிகா திருமணம் செய்துகொண்ட போது இணையத்தில் பரவி மீம்கலாக மாறின.. ஆனால், தங்களது உறவு இடையூரு இல்லாமல் வளர்ந்தது என்றும், தாங்கள் குடும்ப ஒப்புதலோடு திருமணம் செய்து கொண்டோம் என்றும் ஹன்சிகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, ஹன்சிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோஹைலை சுற்றி இருந்த திருமண புகைப்படங்கள், ஹாலிடே டிரிப்கள், விழாக்கள் உள்ளிட்ட அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஹன்சிகா தனது கணவருடன் எடுத்த தனிப்பட்ட புகைப்படங்களைக் குறைத்து 50-க்கும் மேற்பட்ட பதிவுகளில் பகிர்ந்திருந்தார். ஆனால் தற்போது, அந்த பதிவுகள் எதுவும் இருக்கவில்லை. இந்த நிலைமை தான், தற்போது விவாகரத்து அல்லது அவர்கள் உறவில் தடை ஏற்பட்டிருப்பது போன்ற பரவலான ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. தொடர்ந்து ஹன்சிகாவை சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்து வந்திருக்கும் ரசிகர்கள், இந்த திடீர் மாற்றத்தை கவனித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஹன்சிகா தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ மறுப்போ அல்லது விளக்கமோ வெளியாகாதது, இந்த சாமர்த்தியமான மௌனத்திற்கு பின்னால் ஏதேனும் இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு வழிவகுக்கிறது. ஹன்சிகா தற்போது சில தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஹன்சிகா விவாகரத்து குறித்த செய்தி..! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த கணவர் சோஹைல் கட்டாரியா..!
இவரது லைவ் நிகழ்ச்சிகள் மற்றும் டிராவல் வ்லாக் போன்ற பதிவுகள் இன்ஸ்டாவில் இடம்பெற்றாலும், கணவருடன் தொடர்பான எந்தவொரு விவரமும் இல்லை. ஹன்சிகா தனித்து தோன்றும் புகைப்படங்களையும், தாயாரிப்புப் பணிகளைச் சுற்றிய தகவல்களையும் மட்டுமே பகிர்ந்துவருகிறார். ஆகவே திருமணமாகி மூன்று ஆண்டுகள் கூட ஆவதற்கு முன், ஹன்சிகா மற்றும் சோஹைல் ஜோடியின் தனிப்பட்ட உறவில் இந்த அளவுக்கான மாற்றம் ஏற்படுவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒரு தற்காலிக மனமோதலா? அல்லது உண்மையான உறவு முறிவு என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ள, அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் தான் வழியாக உள்ளது. ஹன்சிகா, தனது தொழில்முறை பயணத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருவதை வைத்து பார்த்தால், தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் வெளிப்படையாக பேச விரும்பாத நிலைப்பாட்டில் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

எனவே ரசிகர்கள் சார்பில், நடிகை ஹன்சிகா மற்றும் சோஹைல் ஜோடிக்கிடையே பிரச்சனைகள் இருந்தாலும், அவை தீர்ந்து மீண்டும் இணைவர் வாழ்வு தொடர வேண்டும் என்பதே பிரார்த்தனையாக உள்ளது.
இதையும் படிங்க: ஹன்சிகா விவாகரத்து குறித்த செய்தி..! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த கணவர் சோஹைல் கட்டாரியா..!