ஒருகாலத்தில் 'சின்ன குஷ்பு', 'அமுல் பேபி' என அழைக்கப்பட்ட நடிகை ஹன்சிகா மோத்வானி, தன்னுடைய குழந்தை பருவத்திலேயே நடிப்புத்திறமையால் முதலில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ஹன்சிகா, 2010 களின் நடுவில் இருந்தே தென்னிந்திய திரையுலகில் முக்கியமான நடிகையாக திகழ்கிறார்.
இப்படிப்பட்ட இவர் 2022-ம் ஆண்டு டிசம்பரில், நீண்ட நாள் நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கட்டாரியாவை திருமணம் செய்து கொண்டார். ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் நடந்த இவர்களது திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த திருமண நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலானது. ஹன்சிகாவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. திருமணத்திற்குப் பிறகு ஹன்சிகா திரையுலகிலும், டிஜிட்டல் பிளாட்பார்ம்களிலும் பிசியாக இருந்தாலும், தனது மரியாதையான தனிமையான வாழ்க்கையை மற்றவர்களிடமிருந்து வெகு தொலைவில் வைத்திருந்தார். தனது கணவருடன் அவர் கொண்ட ஒற்றுமை மற்றும் வாழ்க்கையின் சிறப்புகளைப் பகிர்ந்து கொண்டபடி வாழ்க்கையை நகர்த்தி வந்த ஹன்சிகா, சில மாதங்களுக்கு முன்பு தனது திருமண வாழ்க்கையின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு "Love, Shaadi, Drama" என்ற டாக்குமெண்டரி தொடர் ஒன்றிலும் நடித்திருந்தார். அது ஹன்சிகாவின் ரசிகர்களிடம் கூடுதல் பாராட்டை பெற்றது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் 'ஹன்சிகா மற்றும் சோஹைல் கட்டாரியா விவாகரத்து செய்ய உள்ளனர் என்ற தகவல்கள் பரவத் தொடங்கின. குறிப்பாக, இருவரும் சமூக வலைதளங்களில் ‘அன்ஃபாலோ’ செய்திருப்பதாகவும், சில காமெண்ட் அழிக்கப்படுவதை வைத்தே இத்தகைய வதந்திகள் உருவானதாகவும் தகவல்கள் வெளியாகின. இது ஹன்சிகாவின் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயங்களைப் பற்றிய செய்திகளைப் பல்வேறு மீடியா மற்றும் யூடியூப் சேனல்கள் பரப்பத் தொடங்கி இருந்தாலும், இதுவரை ஹன்சிகா மோத்வானியின் தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்று இரவு வெளியாகிறது 'பவர் ஹவுஸ்' பாடல்..! 'மோனிகா' பாடலுக்கு பிறகு வரும் அரங்கம் அதிரும் பாடலை கேட்க தயாரா..?
அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய எந்தவொரு பதிலையும் அளிக்காமல் இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மேலும் சந்தேகங்களை உருவாக்கியது. இந்த சூழ்நிலையில், ஹன்சிகாவின் கணவர் சோஹைல் கட்டாரியா சில நாட்களுக்கு முன்பு, தனது சுற்றியுள்ள நெருங்கிய வட்டாரங்களுக்கு கூறியதைக் குறிப்பிடும் செய்திகள் வெளியாகின. அதில், "எங்களுக்கு இடையே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. சில ஊடகங்கள் தவறாக செய்திகளை பரப்பி வருகின்றன. எங்களது வாழ்க்கையில் இப்போதும் எல்லாம் நன்றாகவே நடக்கின்றது" என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறும் பொழுது, "ஹன்சிகா மற்றும் சோஹைல் இருவரும் தனிப்பட்ட மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் சில நேரங்களில் இணையத்தில் ‘அன்ஃபாலோ’ செய்யலாம். ஆனால் அதைக் கொண்டே அவர்களின் உறவில் பிரிவு என்று கருதுவது தவறானது. ஏற்கனவே சமந்தா, நயன்தாரா, ஷ்ருதி ஹாசன் ஆகியோர் தங்களது தனிப்பட்ட வாழ்கையைப் பற்றிய செய்திகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது அதே காரியத்தை ஹன்சிகாவும் எதிர்கொள்கிறார்.

இந்த விவகாரத்தில் தற்போது வரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹைல் கட்டாரியா இருவரும் தனிப்பட்ட முறையில் எந்தவொரு காரியத்தையும் வெளியிடாத நிலையில், வதந்திகள் மட்டும் பரவி வருகின்றன.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் ராணா டகுபதி..!