சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல மெகா தொடரான எதிர்நீச்சல் தொடர்கிறது தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகைகள் ஹரிப்ரியா மற்றும் பிரியதர்ஷினிஆகியோரின் நட்பு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

திரையில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் நீண்ட ஆண்டுகளாக நெருங்கிய தோழிகளாக இருந்து வரும் இந்த இருவரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவுகள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: ‘Hai Jawani Toh Ishq Hona Hai’ ரிலீஸுக்கு முன்னதாக ரசிகர்களை கவர்ந்த பூஜா ஹெக்டே..!! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் எதிர்நீச்சல் தொடர்கிறது தொடரில் இருவரும் தனித்தனி கதாபாத்திரங்களில் நடித்தாலும், அவர்களுக்கிடையிலான நட்பு தொடரின் வெளியிலும் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.

படப்பிடிப்பு தளங்களில் தொடங்கிய பழக்கம், தற்போது நெருங்கிய நட்பாக வளர்ந்துள்ளதாக அவர்களது சமூக வலைதளப் பதிவுகள் மூலம் தெரிய வருகிறது.

இந்த நிலையில், நடிகை பிரியதர்ஷினியின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை ஹரிப்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறப்பு வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

பிறந்தநாள் வாழ்த்து பதிவில், பிரியதர்ஷினிக்கு தனது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் ஹரிப்ரியா சில உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகளையும் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' பட அப்டேட் கிடைச்சாச்சு..!! பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட போவது யார் தெரியுமா..?