வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
சினிமா

வந்தாச்சு.. வந்தாச்சு.. ‘கேங்கர்ஸ்’ பட “ஸ்னீக் பிக் காட்சி” இணையத்தில் வந்தாச்சு..!   

நடிகர் சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் கலக்கல் காமெடி படமான கேங்கர்ஸ் படத்தின் "ஸ்னீக் பிக் காட்சி" இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் சுந்தர் சி மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு இருவரும் இணைந்து நடித்த படங்கள் தமிழ் திரையுலகில் ஏராளம். அந்த வகையில் இதுவரை இருவரும் வின்னர், லண்டன், கிரி, ரெண்டு, தலைநகரம், நகரம் மறுபக்கம் ஆகிய படங்கள் நடித்து படங்கள் ஹிட் கொடுத்தன இப்படி நீண்ட வருடங்களுக்கு பின் இவர்கள் இருவரின் காம்போவில் உருவாகியுள்ள திரைப்படமான 'கேங்கர்ஸ்' படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஸ்காந்த் ஆகியோருடன் நடிகர் வடிவேலும் நடித்துள்ளனர்.  

இந்த படம் ஏப்ரல் 24ம் தேதி அன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் கதை என பார்த்தால், படத்தின் ஆரம்பத்தில் ஒரு பள்ளி காண்பிக்கப்படுகிறது அந்த பள்ளியில் ஆசிரியராக பணி புரியும் கேத்ரின் தெரசா, இந்த பள்ளியில் இருந்து ஒரு மாணவி காணாமல் போனதை கண்டு பிடித்து, அதனை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். மேலும், இந்த பள்ளியில் பல அவலநிலைகள் உள்ளது. ஒழுக்கத்திற்கு மாறாக நிறைய சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக கேத்ரின் சொல்ல, அதனை விசாரிக்க போலீஸ் தரப்பில் இருந்து ஒருவர் அந்த பள்ளியில் ஆசிரியராக சேர்கிறார்.  

இதையும் படிங்க: ரீரிலீஸ் லிஸ்டில் "சுந்தரா ட்ராவல்ஸ்"..! வெளியீட்டு தேதியால் குதூகலத்தில் ரசிகர்கள்..!

அவர் தான் மறைமுக இன்வர்ஸ்டிகேஷன் ஆபிஸரான சுந்தர் சி, இவர் இந்த பள்ளியில் உள்ள அனைத்து குற்றங்களையும் கண்டு பிடிக்கிறார். மேலும் ஆக்ஷ்ன் மற்றும் சண்டை காட்சிகளில் பிச்சி ஒதறி இருக்கிறார். இப்படத்தின் வில்லனான பல ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான ஹரீஷ் பேரடி வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். அப்பொழுது சுந்தர் சி போலீஸ் இல்லை என்பதை கண்டுபிடித்த பின் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் சுந்தர் சி. எதிற்க்காக அவர் பள்ளிக்கு வந்தார், என்ன பிரச்சனை என்பதை அழகாக விவரித்தது படம்.

இவரை போலவே படத்தை கடைசி வரை விறுவிறுப்பாக கொண்டு சென்றவர் நடிகர் வடிவேலு, உண்மையில் இந்த படத்தில் பழைய வடிவேலுவை பார்க்க முடிந்தது. அவரது நடை உடை பாவனை அனைத்தும் மக்களை ஒரு நிமிடம் விடாமல் சிரிக்க வைத்தது. மேலும் வாணிபோஜன் சிறிது நேரமே திரையில் தோன்றினாலும் தனது அபார நடிப்பால் அனைவரையும் கண்கலங்க வைத்தார். 

இப்படி படம் ஆரம்பம் முதல் முடிவு வரை சிரிப்பு, காதல், அழுகை, எமோஷன், கிளாமர் என அனைத்தையும் வைத்து மிகுந்த கலவையாக கொடுத்துள்ளார் இயக்குனர். இந்த படத்திற்கு மேலும் அழகை சேர்த்தது கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவில் உருவான காட்சிகள் தான். இதனை தொடர்ந்து அனல் பறக்கும் சண்டை காட்சிகள். அதற்கு ஏற்றார் போல் சத்யாவின் இசை படத்துடன் மிரட்ட செய்கிறது. கிளாமரில் குறைவைக்காத நடன காட்சிகள் அனைத்தும் உண்மையில் இதுதான் சுந்தர் சி படம் என்பதை நிரூபித்து உள்ளார். இந்த சூழலில் இந்த படம் எப்பொழுது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்படத்தின் 
ஸ்னிக் பிக் காட்சிகளை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

அந்த வீடியோவில், சார்லஸ் என்பவரை கட்டிப்போட்டு அவருக்கு பதிலாக வில்லன் வீட்டிற்கு நடிகர் வடிவேலுவை அனுப்புகிறார்கள். மேலும் வடிவேலு தனக்கு இருபது கோடியில் இரண்டு கோடி அதிகமாக ஷேர் வேணும் என கேட்பது எல்லாம் மிகவும் நகைச்சுவையாக உள்ளது.

இதையும் படிங்க: கேங்கர்ஸ் பட வெற்றி..! நடிகர் ராஜ்கிரணை நினைத்து கண்கலங்கிய வடிவேலு..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी