தமிழில் ஆண்டு ஒன்றுக்கு பல நடிகர்களை வைத்து பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வெளிவந்தாலும். சிலருக்கு படத்தின் கதை பிடிக்கும், சிலருக்கு படத்தின் கதாநாயகி பிடிக்கும், சிலருக்கு படத்தின் கதாநாயகன் பிடிக்கும், இப்படி ஒவ்வொரு முறை படம் பார்க்க செல்லும் பொழுதும் தனக்கு பிடித்த ஒரு கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட சினிமாதுறையில், ஒருவர் எப்படிப்பட்ட படங்களை வேண்டுமானாலும் இயக்கலாம், ஆனால் இயக்குநர்கள் எடுக்கும் படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு தான் செல்ல வேண்டும். ஆதலால் தற்பொழுது படத்தை இயக்குவதற்கும் தயாரிப்பதற்கும் மிகுந்த கவனத்துடன் அடி எடுத்து வைக்கின்றனர் திரையுலகத்தினர். இப்படி இருக்க, பலரது திரைப்படங்கள் வெளியான நாட்களில் ஓடாமல் இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் அந்த திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு தான் வருகிறது.

இந்த நிலையில், புதிய படங்களை தயாரிக்க சற்று தயங்கும் தயாரிப்பாளர்கள், 90 மற்றும் 2000 காலங்களில் ஹிட் கொடுத்த அனைத்து படங்களையும் இன்று ரீரிலீஸ் செய்து வருகின்றனர். இதுவரை நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த 'கில்லி' திரைப்படமும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பாட்ஷா' திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இன்னும் சுந்தரா ட்ராவல்ஸ், ஜெயம், ஆட்டோகிராப் முதலிய திரைப்படங்கள், ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் ஆடியோ மற்றும் வீடியோக்களை சரி செய்து, சீக்கிரமாக திரையில் காண வழிவகை செய்து கொண்டிருக்கின்றனர் படகுழுவினர். அந்த வரிசையில் நீண்ட நாட்களுக்கு முன்பாக நடிகர் ரவிமோகனின் நடிப்பில் வெளியாகியிருந்த எம்.குமரன் சன்ஆஃப் மகாலட்சுமி என்ற திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகிறது என்ற செய்திகளை அறிந்த ரசிகர்களை உற்சாகம் அடைந்தனர்.
இதையும் படிங்க: கேங்கர்ஸ் பட வெற்றி..! நடிகர் ராஜ்கிரணை நினைத்து கண்கலங்கிய வடிவேலு..!

மேலும், தற்பொழுது வெளியான ரீரிலீஸ் படமான சச்சின் படத்தின் வெற்றியை மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் அனைவரும் எதிர்பார்த்த படம் மீண்டும் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. அந்த வகையில், சுந்தரா டிராவல்ஸ் படம் என்றால் அனைவரது நினைவிற்கு வருவது, வடிவேலு மற்றும் முரளியின் கலக்கல் காமெடிதான், ஒரு பஸ்ஸை மட்டும் வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பஸ் வைத்து ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பிக்க நினைத்த கதாநாயகன் தொழில் கனவை மறந்து காதல் கனவை திறந்திருப்பார். பல போராட்டங்களுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முரளி எங்கு வாழ்ந்திருப்பார் என்ற சந்தேகத்தை போக்க மீண்டும் வருகிறது சுந்தரா டிராவல்ஸ் 2.

இயக்குநர் கருப்பு தங்கம் இயக்கத்தில் உருவாகி வரும் சுந்தரா டிராவல்ஸ் 2 படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல், பன்றிமலை, தென்காசி, காரைக்குடி, சென்னை போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் சமீபத்தில் வெளியிட்ட பதிவில், பாகம் ஒன்றில் வேலை செய்த அனைவரையும் வைத்தே இந்த படம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வடிவேலு மற்றும் மறைந்த நடிகர் முரளியின் கதாபாத்திரத்தில் கருணாஸ் மற்றும் கருணாகரன் நடிப்பதாகவும் தெரிவித்தார். இதில் எத்தனை கதாபாத்திரங்கள் நடித்தாலும் கதையின் முக்கிய கதாப்பாத்திரமான பஸ்ஸை விலைக்கு வாங்கி படத்திற்கு ஏற்றாற்போல் தயார்படுத்தி வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்பொழுது இரண்டாம் பாகம் வருவதற்கு முன் சுந்தரா டிராவல்ஸ் படம் வருகின்ற மே மாதம் அனைத்து திரையரங்குகளிலும் ரீரிலீஸ் ஆக உள்ளது என்ற இனிப்பு செய்தியை படகுழுவினர் தெரிவித்து உள்ளனர். எந்த தேதியில் படம் வெளியாகும் என்பதை விரைவில் அறிவிப்போம் எனவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.
மேலும் ,'ஈ பறக்கும் தளிகா' என்ற மலையாள படத்தின் ரீ மேக்கான படம் தான் 'சுந்தரா டிராவல்ஸ்' என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிளாக் பஸ்டர் ஹிட்டான "கேங்கர்ஸ்"..! விறுவிறுப்பு குறையாமல் ரசிக்க வைத்த சுந்தர் சி-க்கு பாராட்டு..!