தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களின் மனதில் உற்சாக நாயகனாக இருப்பவர்தான் நடிகர் அஜித் குமார். இவர் பார்க்க அழகாகவும் கலராகவும் இருப்பதினால் நடிக்க மட்டும் தான் செய்வார் என நினைத்தால் அதுதான் தவறு. அவர் ஒருபுறம் நடிப்பு மறுபுறம் தனக்கு பிடித்த வகையில் பைக் ரைட் செய்வது, மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பாடங்களை கற்று கொடுப்பது, என தன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்து வந்த அஜித் தற்பொழுது கார் ரேஸில் களமிறங்கி அசத்தி வருகிறார்.

இப்படிப்பட்ட நடிகர் அஜித் பல போராட்டங்களை கடந்து தான் திரையுலகில் இன்று யாரும் அசைக்க முடியாத ஆலமரமாக நின்று கொண்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இதுவரை நடிகர் அஜித், அமராவதி, பவித்ரா, ஆசை, ராஜாவின் பார்வையிலே, வான்மதி, காதல் கோட்டை, கல்லூரி வாசல், உல்லாசம், ரெட்டை ஜடை வயசு, நேசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, உன்னை தேடி, நீ வருவாய் என,ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம், முகவரி, உன்னை கொடு என்னை தருவேன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், ராஜா, வில்லன், ரெட், ஆஞ்சநேயா, அட்டகாசம், ஜனா, ஜி, திருப்பதி, வரலாறு, பரமசிவன், கிரீடம், ஆழ்வார், பில்லா, ஏகன், அசல், மங்காத்தா, பில்லா 2, இங்கிலீஷ் விங்கிலிஷ், ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம், வலிமை, துணிவு, விடாமுயற்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் அஜித்தா இப்படி செய்தது... நம்பவே முடியல..! மகனை ஜெயிக்க வைக்க என்ன செய்தார் AK..!

இத்தனை படங்களில் நடித்த அஜித் தற்பொழுது நடித்துள்ள படம் தான் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் எனலாம். அந்த வகையில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, பிரியா வாரியர் முதலானோர் நடித்துள்ள படம் தான் "குட் பேட் அக்லி". இந்த திரைப்படத்தில் வரும் "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடல் மிகவும் ஃபேமஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் அஜித் ஷாலினி இருவருக்கும் திருமணம் ஆகி இதுவரை 25 ஆண்டுகள் ஆகிறது என்பதால் இருவரும் தங்களது திருமண நாளை சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடி இருந்தனர்.பின் இது தொடர்பான வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதனை அடுத்து கார் ரேஸில் ஜெயித்ததற்க்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் சமீபத்தில் இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான 'பத்ம பூஷண்' விருதினை பெற்றார். இந்த சூழலில், நடிகர் அஜித்திற்கு அவரது ரசிகர்கள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். அதன்படி, அவரது பிறந்தநாள் மற்றும் பத்ம பூஷண் விருதிற்காக அவரை கேக் வெட்டி கொண்டாட வைத்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அஜித் தனது படத்தின் பாடல் வரிகளான " பீரங்கி ஆல் நீ வெல்லாததும், உன் பேரன்பினால் அட கை கூடுமே, தாரளம நீ நேசம் வெச்ச அட, தாறு மாற மனம் கூதாடுமே..!!" என்ற வரிகளை வைத்து பதிவிட்டு தான் கேக் வெட்டிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அஜித் ஜாதகத்தில் உச்சத்தில் குரு... ஆல் ஏரியா கில்லி..! AK-வின் மறுபக்கம்..!