மௌனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. இப்படி, 21 ஆண்டுகளாக, சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வரும் த்ரிஷா, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் தற்பொழுது பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தில் மாஸ் காண்பித்து இருக்கிறார் த்ரிஷா. அதுமட்டுமல்லாமல் தற்போது கமல் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் "தக் லைஃப்" படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: நயன்தாராவுக்கு போட்டியாக இறங்கிய த்ரிஷா..! 2025ல் பல படங்கள் கைவசம்..!

மேலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஜோடியாக நடித்து முடித்துள்ளார். இப்படி பட்ட திரிஷாவின் ஆரம்ப வாழ்க்கை, "மிஸ் இந்தியா" மற்றும் "மிஸ்.மெட்ராஸ்" போன்ற அழகி போட்டியில் தொடங்கியது.

அதில் பங்குபெற்று வெற்றி பெற்ற நடிகை திரிஷா, 1999-ம் ஆண்டு 'ஜோடி' என்ற திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

இதனை அடுத்து, இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான "லேசா லேசா" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக அறிமுகமானார்.

இதுவரை ஜோடி, குஷி, மௌனம் பேசியதே, சாமி, அலை, லேசா லேசா, மனசெல்லாம், எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆய்த எழுத்து, ஜி, ஆறு, திருப்பாச்சி, ஆதி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், கிரீடம், பீமா, வெள்ளித்திரை,

குருவி, அபியும் நானும், சர்வம், விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு, மங்காத்தா, என்றென்றும் புன்னகை, சமர், தூங்காவனம், சகலகலா வல்லவன், பூலோகம், என்னை அறிந்தால், கொடி, அரண்மனை 2, நாயகி, மோகினி, 96,

பேட்ட, பரமபதம் விளையாட்டு, பொன்னியின் செல்வன் (PS 1), ராங்கி, லியோ, பொன்னியின் செல்வன் 2, தி ரோடு, குற்றப்பயிற்சி, தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்), தக் லைஃப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை த்ரிஷா.

இந்த சூழலில், திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்துடன் திரிஷா இணைந்து சிறப்பாக நடித்து இருந்த நிலையில், திரிஷாவின் ரசிகர்கள், சினிமாவில் ஒரே ஒரு லேடி சூப்பர் ஸ்டார்தான்.

அது எங்கள் திரிஷாதான் என்று சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த மே 4ம் தேதி தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய த்ரிஷா தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: 'குட், பேட், அக்லி' பாடல் சர்ச்சை.. இளையராஜா எதிர்பார்ப்பது இதை மட்டும்தான்.. இயக்குநர் சி.எஸ். அமுதன் நெகிழ்ச்சி!