சின்னத்திரை உலகில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் அறிமுகம் பெற்ற நடிகை தான் ரெகானா பேகம். இவர் தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்கின்ற பிரச்சனை விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது, ராஜ்கண்ணன் என்ற நபர் நகை மற்றும் பண மோசடி செய்ததாக புகார் அளித்ததையடுத்து, இருவருக்கும் இடையிலான அந்தரங்கத் தொடர்புகள், திருமணம் தொடர்பான புகார்கள், நிதி பரிமாற்றங்கள் உள்ளிட பல புகார்கள் தற்போது வெளியாகி, இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், நடிகை ரெகானா பேகம், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பொன்னி’ தொடரில் கதாநாயகனின் தாயாகவும், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் சித்தி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். அதேசமயம், ராஜ்கண்ணன், சென்னை போரூர் அருகே கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஆவார். அவர் நடிகை ரெகானா பேகம் தன்னிடம் நெருங்கிய உறவில் இருந்து, நகை மற்றும் பணத்தை பெற்றுவிட்டு பின்னர் தவறான அறிக்கைகள் வெளியிட்டதாக ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

இந்த விவகாரம் தற்போது சட்ட ரீதியாக மாறியுள்ள நிலையில், இது எப்படி முடிவடையும் என்பதை சின்னத்திரை உலகமே தீவிரமாகக் கவனித்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் தொடர்பாக பல கருத்துகள் பரவுகின்றன. இது குறித்து நடிகை ரெகானா பேகம் செய்தியாளர்களிடம் பேசியபோது, "ராஜ்கண்ணன் எனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி என்னுடன் நெருங்கி பழகினார். எனது நம்பிக்கையை பயன்படுத்தி, உணர்ச்சி ரீதியாக என்னை ஏமாற்றினார். கண்ணமூட சொல்லி தாலி கட்டி திருமணம் செய்துகொண்டு என் வாழ்க்கையை பாழாக்கினார்..இந்த விவகாரம் தொடர்பாக நான் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளேன்.
இதையும் படிங்க: அதிரடி ஆரவாரத்துடன் வெளியானது "வார் 2" டிரெய்லர்..! ஸ்பை ஆக்ஷன் திரில்லர் உலகில் புதிய பரிமாணம்..!
எவ்வித அரசியல் அல்லது பிரபல பின்னணி இல்லாமல், ஒரு பெண் நடிகையாக இருக்கும் நான், என் உயிரை பாதுகாத்துக்கொள்ள இவ்விதமான நடவடிக்கைகளை முன்வைக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன். இது என்னுடைய வாழ்க்கை, எனவே நான் சட்ட ரீதியில் என் உரிமையை பெறுவேன்" என்றும் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, பூந்தமல்லி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நடிகை ரெகானா பேகமும், ராஜ்கண்ணனும் தங்களது வழக்கறிஞர்களுடன் பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஆஜராகினர். காவல்துறை, இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தது. இந்த விசாரணையின் போது, பணம் கொடுத்தது, நகை பரிமாற்றம், வங்கி செலவுத்தொகைகள், நபர்களிடையே பரிமாறப்பட்ட முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். இருவரும் தங்கள் தரப்பில் உள்ள ஆதாரங்களை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விசாரணையின் முடிவில், இருவரும் நீதிமன்றத்தில் தீர்வு காண இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, போலீசார் இருவரிடமும் எழுத்து மூலம் உறுதி பெற்று, அவர்களை அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் பெண்களின் பாதுகாப்பு, திருமண உறவின் நம்பகத்தன்மை, சினிமா துறையினருக்கிடையேயான நெருக்கமான உறவுகள், மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் போன்ற பல்வேறு பரபரப்பான அம்சங்கள் உள்ளதால், இது ஒரு தனிப்பட்ட பிரச்சனை என்பதை மீறி சமூக பிரச்சனையாகவும் மாற வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: கவர்ச்சி நாயகி யூடியூபர் இலக்கியா தற்கொலை முயற்சி..? காரணம் இவரா..??