இந்திய சினிமாவில் ஸ்பை யூனிவர்ஸ் என்ற தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கி ரசிகர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கிய யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம், தற்போது அதன் அடுத்த கட்ட தயாரிப்பாக "வார் 2" திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட தயாராகி வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி, சமூகவலை தளங்களில் பெரும் வரவேற்பையும், பரபரப்பையும் உருவாக்கியுள்ளது. இத்திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷனும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமான ஜூனியர் என்.டி.ஆரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த கூட்டணியே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, தற்போது வெளியாகியிருக்கும் டிரெய்லர் அந்த எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையில் உருவாகியிருக்கிறது. 'வார் 2' என்பது 2019-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக நிலை கொண்ட "வார்" படத்தின் தொடர்ச்சியாக உருவாகிறது. அந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடித்திருந்தனர். தற்போது அதன் அடுத்த கட்டம் போல உருவாகி இருக்கும் 'வார் 2' படத்தில், ஹிருத்திக் ரோஷனின் கதாபாத்திரமான ‘கபீர்’ மீண்டும் திரையில் அனைவரையும் மகிழ்விக்க வந்து இருக்கிறார். ஆனால், இந்த முறை அவருக்கு நேரடி சவாலாக ஜூனியர் என்.டி.ஆர் மோதுகிறார். ஜூனியர் என்.டி.ஆரின் காட்சிகள் மற்றும் அவருடைய ஆக்ஷன் சீன்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, அவரது உருவம் நெகட்டிவ் ஷேடு கொண்ட எதிரியாக இருக்கலாம் என்பதாக இருக்கும் என்பதே சினிமா வட்டாரங்களின் கணிப்பாக உள்ளது.

அதே சமயம், கதையின் முக்கிய மையமாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், 'யே ஜவானி ஹை திவானி', 'பிரஹ்மாஸ்திரா' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அயன் முகர்ஜி, தற்போது ஸ்பை திரில்லர் உலகில் தனது கைவசத்தை காட்டியுள்ளார். 'வார் 2' என்ற கதை, காட்சிப்பதிவு, ஃபைட் கொரியோகிராபி ஆகியவை அனைத்தும் ஹாலிவுட் தரத்தில் இருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், டிரெய்லரில் காணப்படும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக கியாரா அத்வானியின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதில் வெறும் கவர்ச்சிக்காக அல்லாமல், முக்கியமான ஆக்ஷன் ரோலில் அவர் நடித்துள்ள காட்சிகள், இவர் கதையின் முக்கிய புள்ளியாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆகவே, அணிஅவரது எதிர்பார்ப்பையும் எகிற செய்த 'வார் 2' திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14, அன்று, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: கவர்ச்சி நாயகி யூடியூபர் இலக்கியா தற்கொலை முயற்சி..? காரணம் இவரா..??
👉🏻 WAR 2 Official Trailer | Tamil | Hrithik Roshan, NTR, Kiara Advani | Ayan Mukerji | YRF Spy Universe👈🏻
யாஷ்ராஜ் பிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள இந்த படம், இந்திய சினிமாவின் ஸ்பை யூனிவர்ஸ் தொடரில் முன்கணிக்க முடியாத முன்னேற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 'எக் தா டைகர்', 'டைகர் ஜிந்தா ஹை', 'வார்', 'பதான்', 'டைகர் 3' போன்ற படங்கள் மூலம் நிறுவப்பட்ட இந்த யூனிவர்ஸ், 'வார் 2' மூலம் புதிய உச்சத்தை நோக்கிச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி இருக்க, டிரெய்லர் வெளியாகிய வெறும் சில மணி நேரங்களில் யூடியூபில் மில்லியன் கணக்கில் பார்வைகள், லைக்குகள் மற்றும் ரசிகர்களின் விமர்சனங்கள் என அடித்துத் துவம்சம் செய்துள்ளது.

இந்நிலையில், “வார் 2” திரைப்படம், வெறும் கமர்ஷியல் எண்டர்டெய்னராக மட்டும் இல்லாமல், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் ஸ்பை ஆக்ஷன் படங்களுக்கு புதிய நிலையை உருவாக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இது இந்திய சினிமாவின் தொழில்நுட்பம், திரைக்கதை மற்றும் நடிப்பு ஆளுமைகளை உலகமே பாராட்டும் ஒரு தருணமாக உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: திரைப்படமாகிறது பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு..! படத்தின் தலைப்பே சும்மா அதிருதே..!