இந்தாண்டும் கோவா மாநிலம் மீண்டும் ஒரு முறை சினிமா திருவிழா மழையில் நனைந்துள்ளது. ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI – International Film Festival of India), இந்த முறையும் பனாஜியில் இன்று அதிரடியாக துவங்கி, உலக திரைப்பட பிரியர்களை ஒரே மேடையில் கூட்டியுள்ளது.
கோவாவின் கடற்காற்று, பனாஜியின் பிரகாசமான விளக்குகள், உலகம் முழுவதும் இருந்து வரும் சினிமா கலைஞர்கள் என இவை அனைத்தும் சேர்ந்து பனாஜியை இன்று செம்மையாக ஒரு ராஜ்ஜியமாக மாற்றியிருக்கின்றன. இப்படி இருக்க 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவது எந்த அளவுக்கு கடினமோ அதை விட அதிகமான உற்சாகம் ரசிகர்கள் மற்றும் கலைஞர்களிடையே உருவாகியுள்ளது. இந்த விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. பல மொழிகள், பல நாடுகள், பல கலாச்சாரங்கள் என எல்லாமே ஒரு திரை மேடையில் ஒன்று சேர்வது IFFI’க்கே உரிய பிரம்மாண்டம். இந்த பட்டியலில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெருமையாக இருக்கும் ஒரு பெரியச் செய்தி கூட உள்ளது.
அதாவது... ‘அமரன்’ – ஓபனிங் பீச்சர் பிரிவில் இடம் பிடித்த பெருமை தான் அது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள ‘அமரன்’ படம், இந்த விழாவின் மிக முக்கியமான பிரிவான Opening Feature Film பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. Opening Film பிரிவில் இடம் பெறுவது எளிதான விஷயம் அல்ல. உலகம் முழுதும் கண்கள் முதலில் பார்க்கப் போகும் படம் என்பதால் இந்த அங்கீகாரம் மிகப் பெரிய சாதனை.
இதையும் படிங்க: நயன்தாராவுக்கு போட்டியாக அட்லீ இறக்கிய காஸ்ட்லி ரதம்..! இந்தியாவிலேயே இந்த கார் இவர் கிட்டதான் இருக்காம்..!

இந்த விஷயத்தை அதிகாரபூர்வமாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. இது மட்டும் அல்ல… மரணத்தையும் மீறி தைரியமாக போராடிய மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘அமரன்’, IFFI விழாவின் மிக உயரிய விருதான Golden Peacock Award-க்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விருது ஒரு படத்தின் அனைத்து துறைகளுக்குமான முழுமையான கலைத்திறன், மனித உணர்வுகள், தொழில்நுட்ப நுணுக்கம் ஆகிய அனைத்தையும் மதிப்பீடு செய்து வழங்கப்படும் மிகப் பெரிய விருது. தமிழ் சினிமாவில் இருந்து இந்த பிரிவுக்கு தேராகுவது ஓர் அரிய பெருமை.
இந்த பெருமைகளுடன், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சென்னை விமான நிலையத்தில் கண்கவர் தோற்றத்துடன் தோன்றினார். ‘அமரன்’ படத்தின் திரையிடுதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர் கோவாவுக்கு புறப்பட்டார். விமான நிலையத்தில் அவரை பார்த்த ரசிகர்கள்— புகைப்படங்கள், செல்ஃபிகள், ஆரவாரம் கொடுத்தனர். அவற்றையெல்லாம் சிரிப்புடன் கையாளும் சிவகார்த்திகேயன், எளிமையுடன் அனைவரையும் மரியாதை செய்து சந்தித்தார். விமான நிலையம் முழுவதும் அவரைச் சுற்றி ஒரு சிறிய IFFI முன்னோட்டம் போலவே இருந்தது. தமிழ் சினிமா உலகமே பனாஜியில் ஒரு திருவிழா கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கிறது. ‘அமரன்’ படம் Opening Film இடம் பெறுவது, Golden Peacock Award-க்கு பரிந்துரை பெறுவது, சிவகார்த்திகேயன் அவரின் பேன்ஸ் பவர்—இதெல்லாம் தமிழ் சினிமா தற்போது எத்தனை உயரத்தில் இருக்கிறது என்பதை வாழ்வாதாரமாக காட்டிவிடுகிறது.

IFFI விழாவின் அடுத்த நாட்களில் ‘அமரன்’ உலகம் முழுவதும் இருந்து வரும் திரைப்பட கலைஞர்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் எப்படிப் பிரதிபலிக்கப்போகிறது என்பதை பார்ப்பதில் சினிமா உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.
இதையும் படிங்க: காதல் முதல் கல்யாணம் வரை.. எல்லாத்துக்கும் காரணம் நான் தான்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஷாலினி-யின் Love Story..!