பிரபல யுடியூபரான இர்பான் பார்க்க ஜைஜான்டிக்காக இருந்தாலும் அவ்வப்போது பிரச்சனைகளில் சிக்கி குழந்தை போல் மன்னிப்பு கேட்டு எஸ்கேப் ஆவதில் கைதேர்ந்தவர். ஆரம்பத்தில் உணவுகளை பற்றி பேசி வீடியோக்களை பதிவு செய்து வந்த இர்பான், அந்த வீடியோவில் சிறிய பூச்சி முதல் பெரிய முதலை வரை சாப்பிட்டு அனைவரது வயிற்றெரிச்சலையும் வாங்கி குவிப்பார்.
இப்படி சாப்பாட்டில் வீடியோக்களை பதிவு செய்ய ஆரம்பித்தவர், அடுத்ததாக கார்களை குறித்து பேசி அதனையும் பதிவிட ஆரம்பித்தார். அதன்பின் தனக்கென விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை வாங்கி அனைவரையும் திக்குமுக்காட வைத்தார். சிறிது நாள் கழித்து அந்த கார் சரியில்லை என கூறி வேறொரு விலையுயர்ந்த காரை வாங்கி அதில் பயணம் செய்தபடியே வீலாக் எடுத்து வருகிறார்.

இப்படி யூடியூபில் தனக்கென ரசிகர்களை உருவாக்க ஆரம்பித்தவர் தற்பொழுது அதனை இழந்து வருகிறார். அதற்கு காரணம் அவர் செய்து வரும் செயல்களே என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதன்படி, பிரபல தனியார் உணவகத்தில் உணவு நன்றாக உள்ளது, நம்பி வாருங்கள் என ரிவியூ கொடுத்தார் இர்பான். ஆனால் அந்த உணவகத்தில் கெட்டுப்போன உணவுகளை பரிமாறுவதாக பேச்சுக்கள் எழுந்த நிலையில், இர்பானின் ரிவியூவை நம்பி ஹோட்டலுக்கு போனால் அங்கு கெட்டுப்போன இறைச்சிகளை கொடுக்கிறார்கள் என்ற புகார் வர, இணையவாசிகளும் செய்தியாளர்களும் இர்பானை வசைபாடி தீர்த்தனர்.
இதையும் படிங்க: ஈனத்தனமான இர்ஃபான்..! அவர் என்ன மைசூர் மகாராஜாவா..? வெளுத்தெடுத்த வி.ஜே பாரு..!

இது போக, வயதான மூதாட்டி மீது காரில் மோதி பிரச்சனையில் சிக்கினார். இதனை தொடர்ந்து, தனது திருமணத்திற்கு பிறகு துபாய்க்கு சென்ற இர்பான் அங்கு தனது குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ அவரை கைது செய்யவேண்டும் என்ற கோஷங்கள் தமிழகத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் வலுக்க தொடங்கியது. பின்பு பல அரசியல் கட்சி தலைவர்களின் தலையிட்டால் அதில் இருந்து தப்பினார் இர்பான்.

இந்த நிலையில், ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு உதவ போகிறேன் என தனது மனைவியுடன் உடைகள் வாங்கிக் கொண்டு சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்ற இருவரும், காருக்குள் அமர்ந்து கொண்டே அவர்கள் கொண்டு வந்த உடைகள் மற்றும் உதவிப் பொருட்கள் அடங்கிய, பைகளை அனைவருக்கும் கொடுத்திருக்கிறார்கள். இப்படி இவர்கள் கொடுக்கும் பொருட்களை வாங்குவதற்காகவும், கைக்கு எட்டிய பொருள் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பதட்டத்தில் காருக்குள் கைகளை விட்டும் மக்கள் வாங்கியுள்ளனர்.

இதனை பார்த்த இர்பான், டேய் விடுங்கடா, இது என் பொண்டாட்டிடா என கூறி காட்டமாக பேசியிருக்கிறார். மேலும், காருக்குள் கைகளை விடவேண்டாம் எனவும் உதவிப் பொருளை வாங்கும் சிலர் எனது மனைவியை தொட்டு விட்டார்கள் என்றும் அவரது கைகளை பிடித்து இழுத்தார்கள், மேலும் இப்படியெல்லாம் அசிங்கமாக பண்ணாதீர்கள் எனவும் கூறியிருக்கிறார். இதனை பார்த்த ஜமாத் அமைப்புகள் முதல் சினிமா பிரபலங்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் மக்கள் என அனைவரிடமும் பாரபட்சமில்லாமல் கண்டனத்தையும் திட்டுக்களையும் வாங்கி வருகிறார் யுடியூபர் இர்பான்.

இந்த நிலையில், தனது தவறை உணர்ந்த இர்பான் அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். அதில், நானும் கஷ்டப்படுற இடத்திலிருந்து தான் இங்கே வந்திருக்கேன். எதுவுமே முன்கூட்டியே திட்டமிட்டு நான் செல்லவில்லை. அந்த நேரத்தில் எனக்கு உதவியாக யாரும் இல்லாததால் எனது மனைவியை அழைத்துக்கொண்டு சென்றேன். அந்த சூழலில், எனது மனைவி 'ஹர்ட்' ஆனதால் என்ன செய்வது என தெரியாமல் வாய்க்கு வந்ததை பேசிவிட்டேன். இனிமேல் இதுபோன்று எந்த தவறுகளும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், ரிவியூ கொடுக்கும் உங்களுக்கே, எங்களை ரிவியூ சொல்ல வைத்துவிட்டீர்களே இர்பான் என வேதனையை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒவ்வொரு படமும் ஒரு பிரச்னை... வைரலாகும் இளையராஜா பேட்டி!!