தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியான ஸ்டார் ஹீரோ என்றால் அவர்தான் ரசிகர்களால் அன்புடன் இளையதளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய். அப்படிப்பட்ட அவர் தனது அடுத்த படமான லியோ-2 வில் நடிப்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இனி சினிமாவில் இருந்து விலகி முழு அரசியலில் ஈடுபட போவதாக கூறி அனைவரையும் திக்கு முக்காட வைத்தார். அதனைத் தொடர்ந்து தனது கடைசி படத்தை எச்.வினோத் இயக்கத்தில் "ஜனநாயகன்" திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, பாபிஜியோல், மமீதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட சக நடிகர்களுடன் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.

வழக்கமாக நடக்கும் பிரச்சனைகள் ஒன்றும் குறையாமல் இந்த ஜனநாயகன் படபிடிப்பு சமயத்தில் நடந்தது. அதன்படி, சமீபத்தில், நடிகர் விஜய் நடித்து வந்த ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இந்த படத்தை பெங்களூரை சேர்ந்த கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், சமீபத்தில் இந்த நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடைபெற்று உள்ளது. மேலும் இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் ஜனநாயகன் ஷூட்டிங்கில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சரியான சம்பளம் மற்றும் பேட்டாக்கள் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு தற்போது ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன.
இதையும் படிங்க: ரஜினியை போல் பேக் அடிக்கிறாரா விஜய்..! கசிந்த ரகசியம்.. ரசிகர்கள் ஹேப்பி.. தொண்டர்கள் அதிர்ச்சி..!

இப்படி பல பிரச்சனைகளை கடந்த இந்த படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான அப்டேட்டுகளை படக்குழுவினர் கொடுத்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லி ஆகிய மூன்று பேரும் இப்படத்தில் வரும் குறிப்பிட்ட பாடலில் "நடிகர் விஜய்க்கு சென்ட் ஆஃப் கொடுக்கும் காட்சிகளில்" நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இப்படத்தில் நடிகர் விஜயுடன் பூஜா ஹெக்டேவும் சிறப்பு நடனம் ஆடியுள்ளதால் இப்படத்தின் முதல் பாடல் தளபதி விஜயின் பிறந்த நாள் அன்று வெளிவரும் என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், இப்படத்தில் அரசியல் கட்சிகளில் ஜெயிக்க வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்றும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் பேசும் படமாக ஜனநாயகன் படம் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதுதான் படத்தின் கதைக்களமாக இருக்கும் என்றும் அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பதால் புரட்சிரமான வசனங்களை இப்படத்தில் எழுதி இருக்கிறார் இயக்குநர் ஹெச். வினோத். மேலும் பல பன்ச் வசனங்கள் அனைத்தும் தீயாய் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் விஜய், நடிகர் பாலகிருஷ்ணாவின் "பகவந்த் கேசரி" படத்தைப் பார்த்தாராம், அதில் வந்த 'குட் டச் பேட் டச்' காட்சி அவருக்கு மிகவும் பிடித்து போனது. இதனால் அதே காட்சிகளை ஜனநாயகன் படத்திலும் வைத்தால் நன்றாக இருக்கும் என இயக்குனரிடம் விஜய் தெரிவித்து இருக்கிறார். விஜயே விரும்பி கேட்டதால், "பகவந்த் கேசரி" படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் ஸ்ரீலீலா நடித்த அந்தக் குறிப்பிட்ட காட்சி, ஜனநாயகனிலும் இடம்பெற உள்ளது. இந்த ஒரே ஒரு காட்சியை தவிர பகவந்த் கேசரிக்கும் ஜனநாயகனுக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை, ஆதலால் நெட்டிசன்கள் தெரிவித்து வரும் வகையில் ஜனநாயகன் படம் முழுவதும் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் கிடையாது என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்க, படத்தின் காட்சிகளை மட்டும் வாங்கி பின் பிரச்சனை ஆவதை விட, படத்தையே வாங்கினால் நன்றாக இருக்கும் என நினைத்த தயாரிப்பு நிறுவனம் "பகவந்த் கேசரி" படத்தை ரூ.4.5 கோடிக்கு வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இணையத்தை கலக்கி வரும் விஜய்யின் சச்சின் பட unseen புகைப்படங்கள்..!