சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பிடிக்காதவர்கள் என யாரும் இருக்க முடியாது அப்படிப்பட்டவர், தான் அரசியலுக்கு வருவதாக கூறி அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் பிஜேபிக்கு ஆதரவான அவரது அரசியல் பிரச்சாரங்களும் பேச்சுக்களும் மக்கள் மத்தியில் அவர் மீதான எதிர்பார்ப்பையும் அன்பையும் உடைத்ததாக தெரியவர தனது ரசிகர்களுக்காக அரசியல் வேண்டாம் என்று அதிலிருந்து விலகி சென்றார். அரசியலில் இருந்து விலகினாலும் அவ்வப்போது நாடுகளில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளை குறித்தும் பேசி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் தனது ரசிகர்களுக்காக மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதனால் மீண்டும் தனது ரசிகர்களை தன் பக்கமாக ஈர்த்தார் ரஜினி.

இனி அவ்வளவு தான் அரசியலுக்கு வருகிறேன் என சொன்ன 'ரஜினியும்', மக்கள் நீதி மையம் தலைவர் 'கமலஹாசனும்' அரசியலுக்கு வந்து பின்வாங்கி விட்டனர். இனி சினிமாவில் இருந்து யாரும் அரசியலுக்கு வரப்போவதில்லை என நினைத்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வு நடைபெற்றது. அதுதான் சினிமாவில் இருந்து நடிகர் விஜய் விலகுகிறேன் என்று சொன்ன செய்தி. ஆரம்பத்தில் மனிதன் எல்லாரையும் போல் பாவனை காண்பித்து கொண்டு இருக்கிறார் என சொல்லி கொண்டு இருக்க, அட உண்மையிலேயே நான் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் இறங்க போகிறேன் நம்புங்கய்யா என்றார்.
இதையும் படிங்க: இதுதான் டா தீர்ப்பு.. பொள்ளாச்சி வழக்கு ஜெயிச்சாச்சி.. விஜய் தவெக தலைவராக பதிவிட்டுள்ள பதிவு வைரல்..!

ஆனாலும், நான் இப்போதைக்கு ஒரு படத்துக்கு மட்டும் கமிட் கொடுத்துட்டேன் நண்பா, அத விட்டுட்டு வந்தா நல்லா இருக்காது நண்பா, ஆதலால் இந்த படம் முடிச்சிட்டு உங்க அண்ணன் விஜய் கண்டிப்பாக அரசியல் வருவேன் என சொல்லி "ஜனநாயகன்" படத்தில் பிசியாக நடிக்க சென்றார் விஜய். இதைப்பார்த்து பலரும் கேலி செய்ய, நாம்ப சும்மா சொல்றோம்னு நினைக்கிறாங்க போல புஸ்லி, கட்சி பெயரை சொல்ல போறம்னு சொல்லிவிடுங்க என விஜய் சொல்ல, புஸ்லி ஆனந்தும் மகிழ்சியோட கட்சி பெயர் விரைவில் உங்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

இதனை தொடர்ந்து, ஒருநாள் நடிகர் விஜய் நமது கட்சியின் பெயர் "தமிழக வெற்றிக் கழகம்" என அறிவிக்க தமிழ்நாடு மட்டுமல்ல டெல்லி வரை அதிர்ந்தது. இதனை பார்த்த தளபதி தொண்டர்கள், அண்ணா லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொன்னாரு என மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க ஆரம்பித்தனர். இதனை அடுத்து, அனைவரும் கட்சி தொடங்கிட்டீங்க, பேரும் வச்சிட்டீங்க, ஆனா கொள்கை என்ன? மாநாடு எங்க? என கேட்க, விறுவிறுப்பாக கட்சியின் மாநாடு தொடர்பான வேலைகள் நடந்தன. பல தடைகளும் இருந்தன. இப்படி இருக்க, திடீரென விக்ரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி பெறப்பட்டு கட்சியின் கொடியும் பிரமாண்டமாக ஏற்றப்பட்டு அமர்க்களமாக நடந்தது விஜயின் தாவெக மாநாடு.

இப்படி எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்க, 2026 தாவெக கையில் தான், முடிசூடுவது எங்க அண்ணன் விஜய் தான் என அண்ணனின் விழுதுகள் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் தளபதி அடுத்தும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ரசிகர்களுக்காக அடுத்த படத்தில் நடிக்க கதைகளை கேட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை கேள்விப்பட்ட சினிமா வட்டாரங்கள் ஒரு வேலை லோகேஷ் கனகராஜ் சொன்னது போல "லியோவை விட மாஸ்டர் 2 எடுக்க தான் ஆசை" என்கிறாரே அதுவாக இருக்குமோ என பரவலாக பேசிவருகின்றனர்.

தனது அரசியல் விழுதுகளின் நம்பிக்கையை காப்பாறுவாரா அல்லது சினிமா ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாறுவாரா அல்லது தயாரிப்பாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: அப்போ த்ரிஷா... இப்போ...? கொடைக்கானலுக்கு விஜயுடன் விமானத்தில் சென்ற அந்த பெண் யார்..?