வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
சினிமா

‘தக் லைஃப்’ படத்துக்கு ரேட்டிங் வந்தாச்சு..! First விமர்சனமே Best விமர்சனமா வந்துடுச்சே..!

தக் லைஃப் படத்திற்கான முதல் ரிவியூ கிடைத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இப்படி இருக்க இத்திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தில் நடித்துள்ள திரிஷா சமீபத்தில் தக் லைஃப் படத்தில் தனது கேரக்டர் குறித்து பேசியிருந்தார்.

அதில் "இந்த படத்தில் எங்களது ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும். என்றாலும் எனது கேரக்டரை கண்டிப்பாக சிலர் விமர்சிக்கவும் செய்வார்கள். இதை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவே நான் ஒப்பு கொண்டேன். அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்காக "கமலும், மணிரத்னமும் எவ்வளவு புரிதலுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்பதை அனைத்து நடிகர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அது கூட ஒரு மாயாஜாலம் போல்தான் எனக்கும் இருந்தது" என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விவாதத்தை கிளப்பிய எக்ஸ் தள பதிவு… கமலஹாசனுக்கு தொடரும் சிக்கல்!!

மேலும், நடிகர் சிம்பு கூறுகையில், " தக்லைஃப் படத்த்தில் என்னை நடிக்க கூப்பிட்டார் மணி சார். ஆனால் சில காரணங்களால் என்னால் அப்படத்தில் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் மீண்டும் அதே வாய்ப்பு என்னை தேடி வந்தது. ஆனால் அது சாதாரணமாக வரவில்லை கமல் சார் கூட வந்தது. ஆதலால் இந்த நேரத்தில் கமல் சாருக்கும் மணிரத்தினம் சாருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி ஒரு அரிய விதமான கேரக்டரை எனக்கு கொடுத்ததற்காக உங்கள் இருவரையும் என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன் என்றார்.

இப்படி படத்தை குறித்து பலரும் தங்களது கேரக்டர் குறித்து பேசியது மகிழ்ச்சியை அளித்தாலும், படம் நாளை வெளியாகிறது என்றால் இன்று வரை போராட்டங்கள் வெடித்து கொண்டுதான் இருக்கிறது. காரணம் கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து கமல்ஹாசன் "உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் அனைத்தும் தமிழ் மொழி மட்டும் தான். எனது குடும்பம் அனைத்தும் இங்கு தான் இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமாரும் இங்கு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது மொழி கன்னடம், ஆனால் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இதனை தவறாக புரிந்து கொண்ட சிலர் மொழி பிரச்சனையை கிளப்பி உள்ளனர். 

இந்த பிரச்சனை கோர்ட் வரைக்கும் சென்றும் நடிகர் கமல்ஹாசன், தவறு செய்தால் மன்னிப்பு கேட்பேன்… தவறாக புரிந்துகொள்வதற்கு எல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என பிடிவாதமாக இருப்பதால் கர்நாடகாவில் இப்படத்தை வெளியிட பல சிக்கல்கள் வந்துள்ளது. இருப்பினும் கன்னட திரைப்பட சங்கம் கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் இந்த வேளையில், நாளை வெளியாகும் தக் லைஃப் படத்தின் ஸ்பெஷல் ஷோக்கள் காலை 9 மணிமுதல் இரவு 2 மணிவரை ஒளிபரப்பாக அனுமதி தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. 

இப்படி இருக்க, இதுவரை ப்ரி புக்கிங்கில் மட்டுமே ரூ. 20 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது தக் லைஃப் திரைப்படம். கண்டிப்பாக வசூலில் சாதனை படைக்கும் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மும்பையில் தக் லைஃப் படத்தின் இந்தி வெர்ஷன் தணிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில் சோஷியல் மீடியா விமர்சகரான உமைர் சந்து இப்படத்தை பார்த்து அதற்கான ரேட்டிங்கை கொடுத்துள்ளார். 

அவரது பதிவில், " தக் லைஃப் திரைப்படம் ஒரு கல்ட் கிளாசிக் த்ரில்லர், நடிகர்களின் performance எல்லாமே புல்லரிக்க வைத்துவிடும். மேலும், கமல்ஹாசன் மற்றும் எஸ்டிஆர் நடிப்பில் உருவான பவர் பேக்ட் ஆக்‌ஷன் காட்சிகலும்அல்டிமேட்டாக உள்ளது போங்க. ரோஜா படம் போல ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னத்தின் டெட்லி காம்போ அசத்தலாக இருப்பதால் மீண்டும் ரசிகர்களை மிரள விட இப்படம் காத்திருக்கிறது. ஆகவே இந்த படத்திற்கு ரேட்டிங் என பார்த்தால் 5க்கு 3.5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கலாம்" என தனது முதல் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். 

 

இதையும் படிங்க: நீதிமன்றத்திற்கு போனாலும் விட மாட்டோம்… கமலுக்கு எதிராக போர் கொடி தூக்கிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபை!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी