தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி. வேறு யாரிடமும் ஒப்பிட முடியாத குரலும், கேரக்டர் தேர்வுகளும், படிப்படியான முன்னேற்றமும் அவரை இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக நிலைநிறுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான அவரது “மெய்யழகன்” படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வெற்றி பெற்றது. அந்த வெற்றியின் பின்னர், கார்த்தி தற்போது இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கும் “சர்தார் 2” படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதே நேரத்தில், இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கும் அவரது 26வது படமான “வா வாத்தியார்” திரைப்படமும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்க “சூது கவ்வும்” திரைப்படத்தின் மூலம் 2013-ம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான நலன் குமாரசாமி, தனித்துவமான நகைச்சுவையும் நையாண்டியும் கலந்த கதை சொல்லும் பாணியில் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ருசியை அளித்தவர். அவரது இரண்டாவது படமான “காதலும் கடந்து போகும்” விமர்சன ரீதியாக சிறந்த வரவேற்பை பெற்றது. அவரது மூன்றாவது முயற்சியாக உருவாகும் “வா வாத்தியார்” படத்தில், கார்த்தியை முற்றிலும் புதிய வடிவில் ரசிகர்கள் காணப்போகிறார்கள். இந்தப் படத்தில் கார்த்தி மக்கள் தலைவன் எம்.ஜி.ஆர்-ஐ ஆழமாக நேசிக்கும் ஒரு ரசிகனாக நடிக்கிறார் என்பது ஏற்கனவே பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. இந்த சூழலில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
கார்த்தியின் சகோதரர் சூர்யா நிர்வாக தயாரிப்பாளராகவும், கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை டி. ஜார்ஜ் கிரிஸ்டோபர் கவனிக்கிறார். எடிட்டிங் பணிகளை பில்குல் குமார் மேற்கொள்கிறார். கலை இயக்கம் சைரஸ் தாஸ். அவருக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ் கிரண், முனீஷ்காந்த், சுந்தரராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். “வா வாத்தியார்” படத்தின் முதல் லுக் போஸ்டர் கடந்த ஆண்டே வெளியானது. கார்த்தி அந்த போஸ்டரில் 80களின் ரசிகர் தோற்றத்தில், வாத்தியாராக பள்ளி முன் நிற்கும் தோற்றத்தில் இருந்தார். அதனுடன், பின்னணியில் எம்.ஜி.ஆர் போஸ்டர்கள், சிவப்பு நிறப் பைசிக்கிள், வெள்ளை சட்டை என இந்த சிறு விவரங்களே ரசிகர்களின் நினைவுகளில் எம்.ஜி.ஆர் காலத்தை மீட்டன.
இதையும் படிங்க: தல ஸ்டைல்ல சொல்லனும்னா... புகழ்ச்சியை தலையில் வைக்க மாட்டேன்..! நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஓபன் டாக்..!

அதன்பின் வெளியான டீசர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கார்த்தியின் இயல்பான நடிப்பு, எம்.ஜி.ஆர் ரசிகனின் உற்சாகம், சத்யராஜின் தீவிரமான உரையாடல்கள் என அனைத்தும் படத்துக்கான எதிர்பார்ப்பை மிக அதிகரித்தன. படத்தின் முதல் பாடல் “வா வாத்தியாரே வா” வெளியானதும், யூடியூப்பில் 24 மணி நேரத்துக்குள் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. சந்தோஷ் நாராயணனின் இசை, வரிகளில் இருந்த பழைய நினைவுகளும் நவீன உணர்வுகளும் ரசிகர்களை ஈர்த்தன. நேற்று வரை ரசிகர்களிடையே “வா வாத்தியார்” படம் எந்த மாதத்தில் வெளியாகும் என்ற கேள்வி நிலவி வந்தது. ஆரம்பத்தில் இது தீபாவளி வெளியீடாக பேசப்பட்டாலும், பின்னர் தயாரிப்பாளர்கள் வெளியீட்டை வருட இறுதிக்குத் தள்ளியிருந்தனர்.
இப்படி இருக்க இன்று காலை 10 மணிக்கு, படக்குழுவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “இப்படம் உலகமெங்கும் டிசம்பர் 5 அன்று திரைக்கு வருகிறது” என்று உறுதிப்படுத்தப்பட்டது. இப்படியாக கார்த்தியின் ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்களும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பில் உள்ளனர். காரணம், நலன் குமாரசாமியின் கதை சொல்லும் பாணி, சமூக நையாண்டி, நகைச்சுவை ஆகியவை கார்த்தியின் இயல்பான நடிப்புடன் இணைந்தால், அது ஒரு தனி அனுபவமாக மாறும். எனவே நடிகர் கார்த்தி தனது கேரியரை ஆரம்பித்தது “பருத்திவீரன்” படத்தின் மூலம். அதன் பிறகு அவர் ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், கைதி, சுல்தான், ஜப்பான், மெய்யழகன் என பல்வேறு வகைபாடுகளில் நடித்துள்ளார். ஒவ்வொரு கதையிலும் அவர் தன்னை புதிதாக மாற்றிக் கொள்கிறார்.
அவரது சமீபத்திய பேட்டியில், “நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒரு கற்றல் அனுபவம். வா வாத்தியார் எனக்குப் பெரிதும் நெருக்கமான கதை. இதில் ஒரு ரசிகனின் உணர்ச்சிகளும், ஒரு மனிதனின் போராட்டங்களும் கலந்துள்ளன.” என்றார். இந்த கருத்தே ரசிகர்களிடம் அந்தப் படத்தின் மீதான உற்சாகத்தை இன்னும் பலப்படுத்தியுள்ளது. சினிமா வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களின் படி, “வா வாத்தியார்” ஒரு சமூக நகைச்சுவை திரைப்படமாக இருக்கும். இதில் எம்.ஜி.ஆர் ரசிகனின் பார்வையில் சமூக மாற்றம், அரசியல், மனித உறவுகள் ஆகியவை நகைச்சுவையுடன் கலந்துள்ளன என்கின்றனர். ஆகவே “வா வாத்தியார்” திரைப்படம் வெளிவருவதற்கான அதிகாரப்பூர்வ தேதியாக டிசம்பர் 5 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்களிடையே உற்சாகம் உச்சத்தில் உள்ளது. இது கார்த்தி மற்றும் நலன் குமாரசாமி இணைப்பில் உருவாகும் முதல் படம் என்பதால், அதன் கதை, காட்சிப்படுத்தல், இசை அனைத்தும் சிறப்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர். “மெய்யழகன்” வெற்றிக்குப் பிறகு கார்த்தி மீண்டும் ஒரு வெற்றி மைல் கல்லை எட்டுவாரா என்பதை தெரிந்துகொள்ள டிசம்பர் 5 தான் பதில் சொல்லும் நாள்.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் நீங்காத வடு.. விஜய் இனி எப்படி துங்குவீங்க..! நடிகர் ரஞ்சித்தின் ஆவேச பேச்சால் பரபரப்பு..!