அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கயாடு லோஹர் புனேவில் பிறந்து வளர்ந்தவர். பிசினஸ் படிப்பு முடித்த இவர் தனது இளம் வயதில் ‘டையமண்ட்' போட்டியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

பின்னர் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நடத்திய Everyuth Fresh Face சீசன் 12ல் கலந்து கொண்ட கயாடு வெற்றி கண்டார்.
இதையும் படிங்க: ஜூஸ் குடிக்க கூட நேரமில்லை..'மூன்று' மொழிகளில் 'ஐந்து' படம்..! மாஸ் காட்டும் கவர்ச்சி நடிகை கயாடு லோகர்..!

பின் 2021ம் ஆண்டு கன்னட படமான முகில்பேட்டை பேட்டையில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். 2022ம் ஆண்டு "Pathonpatham Noottandu" என்ற மலையாளப் படத்தில் நடித்து அங்கும் அறிமுகமானார்.

மேலும், தெலுங்கு படமான "அல்லூரி" படத்தில் ஸ்ரீவிஷ்ணு உடன் நடித்த ‘சந்தியா’ என்ற கதாபாத்திரல் நடித்து புகழ் பெற்றார்.

2023ம் ஆண்டு வெளியான மராத்தி திரைப்படத்திலும் நடித்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி போன்ற மொழிகளில் நடித்த கயாடு கடைசியாக 2025 தமிழில் வெளியான டிராகன் திரைப்படத்தில்நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் ‘பல்லவி பரசுரம்’ என்ற வேடத்தில் நடித்து பலரது பாராட்டுகளையும் தட்டி சென்றார்.

கல்வியும் அழகும், திறனும் இணைந்து பன்மொழி தொடர்ந்து திரை உலகை ஆட்கொண்டு வரும் ஒரு தலைசிறந்த நடிகையாக வலம் வருகிறார் நடிகை கயாடு லோஹர்.
இதையும் படிங்க: ஜூஸ் குடிக்க கூட நேரமில்லை..'மூன்று' மொழிகளில் 'ஐந்து' படம்..! மாஸ் காட்டும் கவர்ச்சி நடிகை கயாடு லோகர்..!