அழகோ அழகு அவள் கண் அழகு இந்த பாட்டுக்கு உண்மையில் சொந்த காரர் என்றால் அவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன்.

அனைவரையும் கவர்ந்து வரும் கீர்த்தி பாண்டியன் தமிழகத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார்.

இவர் நடிகரும் அரசியல்வாதியுமான அருண்பாண்டியனின் மகளும் நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையுமாவார்.

இப்படிப்பட்ட இவர் 2019-ம் ஆண்டு இயக்குநர் ஹரிஷ்ராம் இயக்கத்தில் வெளியான 'தும்பா' என்ற படத்தில் அறிமுகமானவர்.

இதனை தொடர்ந்து, 2021ம் ஆண்டு இயக்குநர் கோகுல் இயக்கத்தில் வெளியான 'அன்பிற்கினியாள்' திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: பொருள் அந்த மாதிரி வர்மா.. ஒரு செட் அமைக்க இத்தனை கோடியா! வாரணாசியை கண்முன் கொண்டு வந்த ராஜமௌலி..!

'அன்பிற்கினியாள்' திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்தும் விமர்சன ரீதியான வெற்றியை பார்த்தும் அவரை பாராட்தி வந்தனர்.

மேலும், மலையாள திரையுலகில் இவர் நடித்த ஹெலனின் திரைப்படம் இப்பொழுதும் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

இதனை அடுத்து, நடிகர் முனிஷ்காந்துடன் இணைந்து பிரபல ஓடிடி தளத்தில் வெளியான "போஸ்ட்மேன்" என்ற நகைச்சுவை தொடரிலும் நடித்துள்ளார்.

மேலும், "கொஞ்சம் பேசினால் என்ன" மற்றும் "கண்ணகி" ஆகிய படங்களிலும் நடித்து தூள் கிளப்பி இருக்கிறார்.

இப்படி பட்ட நடிகை கீர்த்தி பாண்டியன் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தினசரி தனது புகைப்படங்ககளை இணையத்தில் வெளியிடும் பழக்கம் உடையவர்.

அந்த வகையில், இன்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: உலகத்தையே அசர வைத்த டாம் குரூஸை அதிர வைத்த அமைப்பு.. இப்படி ஒரு அறிவிப்பை யாரும் எதிர்பார்க்கல..!