தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குநராக திகழும் லோகேஷ் கனகராஜ், தனது திரைப்படங்களின் வெற்றிக்கு ஆதாரமாக இருந்த சண்டைக் காட்சிகளுக்குப் பின்னால் இருக்கின்ற ‘அன்பறிவ்’ என்கிற ஆக்ஷன் மாஸ்டர்களுக்கு தனது நன்றியை உருக்கமாக தெரிவித்துள்ளார். லோகேஷ் இயக்கிய மாநகரம், கைதி, விக்ரம், லியோ மற்றும் சமீபத்தில் வெளியாகவுள்ள ‘கூலி’ போன்ற அனைத்துப் படங்களிலும், அதிரடி சண்டைக் காட்சிகளை சாஃபிஸ்டிகேட்டாகவும், தரமான முறையிலும், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் வடிவமைத்தவர்கள் அன்பு மற்றும் அரிவ் எனும் சகோதரர்கள்.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில், இந்த இருவரையும் நினைத்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. அந்த பதிவில் லோகேஷ் கனகராஜ், " எனது இயக்குநர் வாழ்க்கையின் முதல் நாளிலிருந்து இன்று வரை, எனக்கு ‘தூண்கள்’ போல இருந்தவர்கள் அன்பறிவ். அவர்களைப் பற்றி பேசுவதற்கான சரியான தருணம் இது தான் என நினைக்கிறேன். நான் இப்போது இருக்கும் இடத்தில் என்னை அவர்கள் ஆரம்பத்திலேயே பாக்க விரும்பினார்கள். என் வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்து வெற்றிகளிலும் அவர்களுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கிறது. அதற்காக, உங்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் இயக்குநர்களாகும் அடுத்த கட்டத்தை எட்டுவதைக் காண நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். எப்போதும் உங்களை நேசிக்கிறேன் மாஸ்டர்ஸ்" என பதிவிட்டுள்ளார்.

இப்படியாக ‘அன்பறிவ்’ என அழைக்கப்படும் அன்பு மற்றும் அரிவ் சகோதரர்கள், தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல், இந்திய சினிமாவில் பெரும் புகழ் பெற்ற ஆக்ஷன் இயக்குநர்களாக திகழ்கிறார்கள். இவர்களின் சண்டைக் காட்சிகள் ‘ஹாலிவுட் தரத்துடன்’ அமைந்திருக்கின்றன என்றே கூறப்படுகிறது.'கைதி' திரைப்படத்தில் டார்க் லொக்கேஷன் காட்சிகள், 'விக்ரம்' படத்தில் கமல் நடிக்கும் கம்யாப் ஆக்ஷன் சீன்கள், 'லியோ'வில் விலங்குப் போன்று மனிதன் போராடும் காட்சிகள், இவை அனைத்திலும் ‘அன்பறிவ்’ பங்களிப்பு முக்கியமானது. இப்போது உருவாகி இருக்கும் ‘கூலி’ படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் அபாரமான ஆக்ஷன் சீன்கள் இருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: "கூலி" படத்தில் கேமியோ சூர்யாவா..! அடுத்த படம் சரவெடி தான் லோகேஷ் கனகராஜ் அதிரடி..!
இந்த படத்தின் மூலம் அவர்களின் பணி இன்னும் உயர்ந்த கட்டத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தனது பதிவில், "நீங்கள் இயக்குநர்களாக அடுத்த கட்டத்திற்கு செல்லும் தருணத்தைக் காண ஆவலாக இருக்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார். இது, அன்பு – அரிவ் இருவரும் சமீபத்தில் இயக்குநர்களாகவும் மாறும் திட்டத்தில் இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்களுக்கு உறுதிப்படுத்தலாக விளங்குகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆக்ஷனில் வல்லவர்களாக இருக்கும் இந்த இருவரும் கதையும் இயக்கமும் சார்ந்த படைப்பாளிகளாக மாறும் தருணம், தமிழ் சினிமாவுக்கே புதிய உந்துதலாக அமையும் என்பது உறுதி. ஆகவே 'வெற்றி என்பது தனிமையில் ஏற்படுவதில்லை.

அது நம் பயணத்தில் நடக்கின்ற ஒவ்வொரு மனிதரின் பங்களிப்பில் ஒளிக்கிறது.. இதை நன்கு புரிந்து நன்றியுடன் வாழும் இயக்குநர் தான் லோகேஷ் கனகராஜ் என்பது அவரது பதிவில் இருந்து தெளிவாக தெரிகிறது.
இதையும் படிங்க: லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் ரஜினியா..! இயக்குநர் கொடுத்த ஷாக் நியூஸ்..!