தமிழ் சினிமாவின் தற்போதைய அதிரடி இயக்குனர்களில் முக்கியமான ஒருவராக பார்க்கப்படுபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளுக்காக தனது பழைய கல்லூரியான கோவையின் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரிக்கு சென்றிருந்தார். அந்த நிகழ்வில் அவர் பேசிய உரை தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
அதன்படி, 'கூலி' திரைப்படம், ஆகஸ்ட் 14-ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம், தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல், பான் இந்தியா அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினிகாந்த் மட்டுமல்லாமல், ஆமீர் கான், நாகார்ஜூனா, உபேந்திர ராவ், சத்யராஜ் ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது இந்த எதிர்பார்ப்புக்கு மேலும் பலமாக இருக்கிறது. இப்படம் திரைக்கு வர இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், படக்குழுவினர் தற்போது புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது கல்லூரி பயணத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரிக்கு சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரை மாணவர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

இப்படி இருக்க, இந்த நிகழ்வில் பேசிய லோகேஷ் கனகராஜ், அனைவரையும் ஆச்சர்யத்திலும் உற்சாகத்திலும் ஆழ்த்தினார். அதன்படி அவர் பேசுகையில், "நான் 2003 முதல் 2006 வரை இந்தக் கல்லூரியில் படித்தேன். அப்போது நாங்கள் பார்த்த பெரும்பாலான படங்கள் சூர்யா சாரின் படங்கள் தான். ஆயுத எழுத்து, பிதாமகன், மாயாவி, காக்க காக்க போன்ற படங்களை திரும்பத் திரும்ப பார்த்தோம். அந்த படங்கள் என்னை சினிமாவை நோக்கி இழுத்து சென்றது, நான் ஒரு நாளாவது சூர்யா சாருடன் பணியாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கனவு காண்கிறேன். அந்த வாய்ப்பு இன்னும் அமையவில்லை. ஆனால் நிச்சயமாக ஒரு நாள் சூர்யா சாரை வைத்து ஒரு திரைப்படம் இயக்குவேன்.
இதையும் படிங்க: லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் ரஜினியா..! இயக்குநர் கொடுத்த ஷாக் நியூஸ்..!
இருவருக்கும் சரியான நேரம் எப்போது வந்தாலும், அது மிகச் சிறப்பான கூட்டணியாக இருக்கும்" என்று உருக்கமாகப் பேசினார். அவரது இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் 'லோகேஷ் x சூர்யா' கூட்டணியை மிகுந்த உற்சாகத்துடன் எதிர்நோக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் பலர், "விக்ரம்" படத்தில் சூர்யாவின் சிறிய காட்சிகள் இருந்தது போன்று, 'கூலி' படத்திலும் அவர் கேமியோவாக வந்திருக்கலாம் என எதிர்பார்த்தும் வருகின்றனர். இது தவிர, ‘கூலி’ திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸின் (LCU) அடுத்த படியாக உருவாகியுள்ளது என கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' ஆகிய படங்களை தொடர்ந்து, இந்த படமும் ஒரே உலகத்தில் நிகழும் கதையாக இருக்கலாம் என்பதும் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. இப்படி இருக்க, 'கூலி' திரைப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியீடுகள் ஏற்கனவே இணையத்தில் மில்லியன் கணக்கான பார்வைகளைக் பெற்றுள்ளன. இதில் ரஜினிகாந்தின் மாஸ் அவதாரம், ரசிகர்களுக்கு பழைய கால சூப்பர் ஸ்டார் ஃபீலை மீண்டும் கொடுப்பதாக சினிமா வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி உள்ள 'கூலி' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே பல்வேறு கோணங்களில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றும் சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திய லோகேஷ், மறுபுறம் தன்னுடைய இளம் பருவ நினைவுகளை பகிர்ந்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். 'கூலி' படம் திரைக்கு வர இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இது போல நிகழும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி வருகின்றன.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் குறித்து கம்ளைண்ட் செய்த ரஜினிகாந்த்..! ‘கூலி’ இசைவெளியீட்டு விழாவில் சஸ்பென்ஸ் இருக்காம்..!