• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நானும் கேரளா முதல்வர் ஆகணும்..!! விஜய், த்ரிஷாவை வைத்து மேடையில் கலாய்த்த தியான் ஸ்ரீனிவாசன்.. கடுப்பில் விழுதுகள்..!

    தியான் ஸ்ரீனிவாசன் பேச்சால் விஜய் ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றனர்.
    Author By Bala Fri, 17 Jul 2026 13:54:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-malayalam-actor-dhyan-sreenivasan-jokes-about-tamilnadu-cm-vijay-and-trisha-at-stage-tamilcinema

    திரைப்பட விழாக்கள் என்றாலே ரசிகர்களுக்கு திரைப்படம் தொடர்பான தகவல்கள் மட்டுமின்றி, நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பகிரும் சுவாரசியமான அனுபவங்களும் முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக சில கலைஞர்கள், தங்களது இயல்பான நகைச்சுவை உணர்வு மற்றும் வெளிப்படையான பேச்சு மூலம் விழாக்களையே கலகலப்பாக மாற்றிவிடுவார்கள். தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் மிஸ்கின், அமீர், பேரரசு போன்றவர்கள் தங்களது மேடை பேச்சுகளால் அடிக்கடி கவனம் ஈர்ப்பது போல, மலையாள திரையுலகிலும் தனது வித்தியாசமான நகைச்சுவை பேச்சால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் தியான் ஸ்ரீனிவாசன்.

    மலையாள சினிமாவில் நடிகராக மட்டுமின்றி, இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் அறியப்படும் தியான் ஸ்ரீனிவாசன், எந்த மேடையிலும் தனது மனதில் தோன்றுவதை நகைச்சுவையாக வெளிப்படுத்தும் பாணிக்காக பிரபலமானவர். அவரது பேச்சுகளில் இருக்கும் திடீர் திருப்பங்களும், சுய கிண்டலும் ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பைப் பெறும். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் அவர் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இந்த நிகழ்ச்சியில் தியான் ஸ்ரீனிவாசன், தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து நகைச்சுவையாக பேசியது அரங்கில் இருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. விழா மேடையில் பேசிய தியான் ஸ்ரீனிவாசன், "நான் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது தான் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். விஜய் முதலமைச்சராகிவிட்டார் என்ற செய்தியை கேட்டதும், எனக்கும் அடுத்த 15 ஆண்டுகளில் எப்படியாவது முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது," என்று கூறினார்.

    இதையும் படிங்க: 'கருகரு கருப்பாகி' பாடலில் கொட்டிய ரத்தம்.. ஆனாலும் ஷாட்டை நிறுத்தவில்லை..! கண்கலங்கியபடி மனம் திறந்து பேசிய நடிகை ரோஜா..!

    malayalam-actor-dhyan-sreenivasan

    அவரது இந்த பேச்சு அரங்கில் இருந்தவர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆசையை தனது நண்பரான நடிகர் அஜு வர்கீஸிடம் கூறியதாகவும், அதற்கு அவர் ஒரு அரசியல் பயணத்திற்கான "திட்டம்" ஒன்றை கூறியதாகவும் நகைச்சுவையாக பகிர்ந்தார். நான் முதல்வர் ஆக வேண்டும் என்று அஜுவிடம் சொன்னேன். அதற்கு அவர், முதலில் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' அமைப்பின் தலைவராக வேண்டும். அதன் பிறகு நிறைய மக்களுக்கு உதவிகள் செய்து, மக்கள் மனதில் இடம் பிடித்து, பின்னர் முதல்வர் ஆகலாம் என்று கூறினார்," என தியான் தெரிவித்தார்.

    ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அஜு வர்கீஸ் தனது ஆலோசனையை மாற்றிக்கொண்டதாகவும் அவர் கூறியது தான் நிகழ்ச்சியின் உச்சகட்ட சிரிப்பை ஏற்படுத்தியது. "சில நாட்கள் கழித்து மீண்டும் அஜு எனக்கு போன் செய்தார். 'மச்சான், இப்போது அம்மா சங்கத்தில் பெரிய பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அங்கேயும் போக வேண்டாம். முதல்வர் ஆசையையும் விட்டுவிடு. உனக்கு எந்த பிரச்சனையும் இல்லாத கவர்னர் பதவிதான் சரியாக இருக்கும்' என்று சொன்னார்," என்று தியான் கூறியதும் அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது.

    இதனைத் தொடர்ந்து, தனது புதிய திரைப்படமான 'விசிட்டர்' தொடர்பான அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை நவ்யா நாயருடன் இணைந்து நடித்துள்ளதாக கூறிய தியான், அதையும் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பேசியுள்ளார். "நவ்யா நாயரும் நானும் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளோம்.

    இப்போது நவ்யாவுக்கு திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார். ஆனால், நான் கேரள முதலமைச்சராக பதவியேற்கும் நாள் வரும்போது, நவ்யா நாயர் அழகான புடவை அணிந்து, கண்களில் கண்ணீருடன் முன் வரிசையில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை," என்று கூறினார்.

    malayalam-actor-dhyan-sreenivasan

    அவரது இந்த பேச்சு, விஜய் முதலமைச்சராக பதவியேற்றபோது நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா முன்வரிசையில் அமர்ந்திருந்த சம்பவத்தை மறைமுகமாக குறிப்பிட்டதாக ரசிகர்கள் கருதி வருகின்றனர். இந்த நகைச்சுவையான ஒப்பீடும் அரங்கில் இருந்தவர்களை சிரிக்க வைத்தது. இதற்கு பதிலளித்த நடிகை நவ்யா நாயரும் தன்னுடைய நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தினார்.

    அவர் கூறுகையில், "தியான் சார், நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் முதலமைச்சராகும் நாளில், உங்கள் ஆசைப்படியே நான் பச்சை பார்டர் வைத்த வெள்ளை நிற புடவை அணிந்து, வைர நெக்லஸ் போட்டுக்கொண்டு, முன் வரிசையில் கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருப்பேன். 'வாழ்க, வாழ்க' என்று கோஷம் போடுவேன். ஆனால், எனக்காக முன் வரிசையில் ஒரு சீட் மட்டும் ஏற்பாடு செய்து வையுங்கள்," என்று கூறினார். நவ்யா நாயரின் இந்த பதிலும் அரங்கில் மிகப்பெரிய சிரிப்பை ஏற்படுத்தியது. தியான் மற்றும் நவ்யாவின் இந்த கலகலப்பான உரையாடல் நிகழ்ச்சியின் முக்கியமான தருணமாக அமைந்தது.

    இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் அஜு வர்கீஸ், இருவரின் பேச்சையும் கேட்டு நகைச்சுவையாக பதிலளித்தார். "தியானும் நவ்யாவும் பேசியதை பார்க்கும்போது எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. இனிமேல் என்னால் தமிழ்நாட்டிற்குள் காலடி எடுத்து வைக்கவே முடியாது போல இருக்கிறது. எனது அன்பிற்குரிய முதலமைச்சர் விஜய் சார்... என் நண்பனுக்கு கொஞ்சம் பைத்தியம் பிடித்துவிட்டது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்," என்று கூறினார்.

    அஜு வர்கீஸின் இந்த பேச்சும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. முழு நிகழ்ச்சியும் நகைச்சுவை நிறைந்ததாக மாறிய நிலையில், குறிப்பாக விஜய் மற்றும் த்ரிஷா தொடர்பான தியான் ஸ்ரீனிவாசனின் பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக கலைஞர்கள் தங்களது கருத்துகளை மேடைகளில் வெளிப்படுத்தும்போது, சில நேரங்களில் அது செய்தியாக மாறுவது வழக்கம். ஆனால் தியான் ஸ்ரீனிவாசனின் இந்த பேச்சு முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் நட்பு அடிப்படையில் அமைந்ததாக ரசிகர்கள் பார்க்கின்றனர்.

    malayalam-actor-dhyan-sreenivasan

    அரசியல் விஷயங்களையும், சினிமா பிரபலங்களின் நிகழ்வுகளையும் இணைத்து அவர் பேசிய விதம் தற்போது இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரைச் சுற்றியுள்ள பல விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், தியான் ஸ்ரீனிவாசனின் இந்த மேடை பேச்சு அதில் ஒரு வேடிக்கையான தருணமாக அமைந்துள்ளது. அவரது இயல்பான நகைச்சுவை பாணி மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்த சுவாரசியமான உரையாடல் தற்போது மலையாளம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடையேயும் கவனத்தை பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: யோகா வீடியோவிலிருந்து கவர்ச்சி போட்டோவுக்கு மாறிட்டாங்களே..!! திடீர் கிளாமர் அவதாரத்தில் குதித்த அபிராமி.. குஷியில் இளசுகள்..!

    மேலும் படிங்க
    பள்ளிக்கரணை சதுப்பு நில வழக்கு கட்டுமான நிறுவனங்களின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    பள்ளிக்கரணை சதுப்பு நில வழக்கு கட்டுமான நிறுவனங்களின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆபத்து... தமிழக மக்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை...!

    இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆபத்து... தமிழக மக்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    விஜய் அலுவலக அறை மாற்றம்..!! வாஸ்து ஆலோசனையா.. நிர்வாக முடிவா..??

    விஜய் அலுவலக அறை மாற்றம்..!! வாஸ்து ஆலோசனையா.. நிர்வாக முடிவா..??

    தமிழ்நாடு
    நர்சிங் கனவுக்கு கைகொடுக்கும் விஜய் அரசு... புதிய வாய்ப்புகள்..! அதிரடி அறிவிப்பு..!!

    நர்சிங் கனவுக்கு கைகொடுக்கும் விஜய் அரசு... புதிய வாய்ப்புகள்..! அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    சர்வதேச கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மா விடை? ஒருநாள் அணியில் இனி இடமில்லை..!!

    சர்வதேச கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மா விடை? ஒருநாள் அணியில் இனி இடமில்லை..!!

    கிரிக்கெட்
    நேரில் இணக்கம்... வெளியே விமர்சனம்? தவெக அமைச்சர்கள் மீது கவர்னர் அர்லேக்கர் அதிருப்தி!

    நேரில் இணக்கம்... வெளியே விமர்சனம்? தவெக அமைச்சர்கள் மீது கவர்னர் அர்லேக்கர் அதிருப்தி!

    அரசியல்

    செய்திகள்

    இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆபத்து... தமிழக மக்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை...!

    இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆபத்து... தமிழக மக்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    விஜய் அலுவலக அறை மாற்றம்..!! வாஸ்து ஆலோசனையா.. நிர்வாக முடிவா..??

    விஜய் அலுவலக அறை மாற்றம்..!! வாஸ்து ஆலோசனையா.. நிர்வாக முடிவா..??

    தமிழ்நாடு
    நர்சிங் கனவுக்கு கைகொடுக்கும் விஜய் அரசு... புதிய வாய்ப்புகள்..! அதிரடி அறிவிப்பு..!!

    நர்சிங் கனவுக்கு கைகொடுக்கும் விஜய் அரசு... புதிய வாய்ப்புகள்..! அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    சர்வதேச கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மா விடை? ஒருநாள் அணியில் இனி இடமில்லை..!!

    சர்வதேச கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மா விடை? ஒருநாள் அணியில் இனி இடமில்லை..!!

    கிரிக்கெட்
    நேரில் இணக்கம்... வெளியே விமர்சனம்? தவெக அமைச்சர்கள் மீது கவர்னர் அர்லேக்கர் அதிருப்தி!

    நேரில் இணக்கம்... வெளியே விமர்சனம்? தவெக அமைச்சர்கள் மீது கவர்னர் அர்லேக்கர் அதிருப்தி!

    அரசியல்
    சபரிவர்மன் மரணத்தில் மவுனம்...

    சபரிவர்மன் மரணத்தில் மவுனம்... "கோழை முதல்வர்"...! திமுக காட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share