கஜானா - போர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் பிரபாதிஸ் எழுத்து இயக்கத்தில், அச்சு ராஜாமணி இசையமைப்பில், சாந்தினி, வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன்,வேதிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் மே மாதம் 9-ம் தேதி வெளியாக உள்ள படம் தான் "கஜானா".

வாத்தியார் குப்பம் - தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாத்தியார் குப்பத்தில் மக்களின் அனுமதி இல்லாமல் திறக்கப்படும் வட இந்திய நிறுவனத்தை எதிர்க்கும் படமாக இயக்குனர் ரஹ்மத் ஷாகிஃப் இயக்கி உள்ள படம் தான் வாத்தியார் குப்பம். இப்படத்தில், ரஷ்மிதா ஹிவாரி, காலித், அந்தோணி தாஸ், சாம்ஸ், கஞ்சா கருப்பு, மீசை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மே மாதம்- 9ம் தேதி வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: கோடை காலத்தில் குளு.. குளு.. காட்சிகள்..! வெயிலுக்கு இதமாக மனத்திற்கு குளிராக வருகிறது 7 படங்கள்..!

கீனோ - கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரிப்பில், ஆர்கே திவாகர் இயக்கத்தில், மகாதாரா பகவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களான மூவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் 'கீனோ'. இப்படம் இந்த வாரம் வெளியாகிறது.

என் காதலே - ஸ்கைவாண்டர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஜெயலட்சுமி தயாரிப்பில் இயக்குநர் ஜெயலட்சுமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில், லிங்கேஷ் , காட்பாடி ராஜன், திவ்யா தாமஸ், லேயா , மதுசூதனன், மாறன், கஞ்சா கருப்பு , தர்ஷன் என பலர் நடித்துள்ளனர். இப்படமும் வருகின்ற மே மாதம் 9ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

அம்பி - டி2 மீடியா சார்பில் எஃப். பிரசாந்தி பிரான்சிஸ் தயாரிப்பில், இயக்குநர் பாஸர் ஜெ. எல்வின் இயக்கத்தில் நகைச்சுவையில் கலக்கி வரும் நடிகர் ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் அம்பி. இப்படத்தில், அஸ்வினி சந்திரசேகர், ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன், சேரன் ராஜ், ஷர்மிளா, ஆர்த்தி, வித்யா என பல நட்சத்திர பட்டாளங்கள் அவருடன் இணைந்து நடித்துள்ளனர். இப்படமும் மே மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது.

சவுடு - இயக்குனர் ஜெயந்தன் அருணாசலம் இயக்கத்தில் மறைந்த நடிகர் போண்டாமணி, சாப்ளின் பாலு, வைகாசிரவி, கிளிமூக்கு ராமச்சந்திரன் , மீசை ராதாகிருஷ்ணன், பொன்ராம், ஸ்ரீ கண்ணன், பகவதி பாலா, கீர்த்தி விக்னேஷ், ஆசிபா, கே.ஜி.ஆர். என பலர் நடித்துள்ள திரைப்படம் தான் சவுடு. இப்படமானது மே மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது.

எமன் கட்டளை - மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் 'அன்பு மயில்சாமி' கதாநாயகநாக நடித்திருக்கும் திரைப்படம் தான் "எமன் கட்டளை". இப்படத்தில், அவருக்கு துணையாக அர்ஜுனன், ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, பவர் ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா என பலர் நடித்துள்ளனர். இப்படம் மே மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது.

கலியுகம் - அறிமுக இயக்குநரான ப்ரமோத் சுந்தர் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோர், இனியன், அஸ்மல், ஹரி மற்றும் மிதுன் உள்ளிட்டோரின் அட்டகாசமான நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'கலியுகம்'. இப்படம் வரும் மே மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது. இதனுடன் யாமன் என்ற படமும் மே 9ம் தேதி வெளியாகவுள்ளது.

நிழற்குடை - நடிகை தேவயானி, விஜித், கண்மணி, இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, நீலிமா இசை, அஹானா, தர்ஷன் சிவா என பலர் நடித்துள்ள திரைப்படம் தான் 'நிழற்குடை' .

இந்த படம் மே மாதம் 9ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: இப்படியா படம் எடுப்பாங்க.. யார் அந்த டைரக்டர்..! டூரிஸ்ட் ஃபேமிலி பற்றி விமர்ச்சித்த அமைச்சர் மா.சு..!