தமிழ் சினிமாவில் சில நடிகைகள், ஒரு பெரிய படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்துவிட்டு, அதன்பிறகு தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது ரசிகர்களிடையே பேசப்படும் நடிகையாக மாறியிருப்பவர் மிர்னா மேனன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி உள்ளார்.
இதையும் படிங்க: என்ன SK ரசிகர்களே ரெடியா..! நாளைய மறுநாள் சென்னை வள்ளுவர் கோட்டத்துக்கு வாங்க.. 'பராசக்தி' ட்ரீட் இருக்கு..!

‘ஜெயிலர்’ படத்தில், ரஜினிகாந்தின் மருமகள் கதாபாத்திரத்தில் மிர்னா மேனன் நடித்திருந்தார். படத்தில் பெரிய அளவில் கவர்ச்சி அல்லது ஸ்டைலிஷ் காட்சிகள் இல்லாவிட்டாலும், அவரது இயல்பான நடிப்பும், முகபாவனைகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

திரையில் ஒரு பக்கம் அமைதியான மருமகள், குடும்ப பெண், ஆனால் நிஜ வாழ்க்கையிலும், சமூக வலைதளங்களிலும், முற்றிலும் வேறொரு முகத்துடன் ரசிகர்களை சந்தித்து வருகிறார் மிர்னா மேனன்.

கடந்த சில மாதங்களாக, அவர் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்களை, ஸ்டைலிஷ் உடைகளில் நவீன போஸ்களுடன் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், மிர்னா மேனன் தற்போது வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

மிகவும் ஷார்ட் உடை, கவர்ச்சியான போஸ், தைரியமான ஸ்டைல் ஆகியவற்றுடன் அவர் எடுத்துக்கொண்டுள்ள இந்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: மிரட்டும் “45 தி மூவி” படம்..! வெளியானது சிவராஜ்குமார், உபேந்திரா நடித்த மாஸ் படத்தின் டிரெய்லர்..!