• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ‘மொத ராத்திரி’ எப்படி இருக்கு? ஒரே இரவில் நடக்கும் கதை..!! சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் திருமணக் குழப்பம் – முழு விமர்சனம்..!

    ‘மொத ராத்திரி’ படம் எப்படி இருக்கு என்ற விமர்சனம் கிடைத்துள்ளது.
    Author By Bala Thu, 20 Aug 2026 15:03:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-modha-rathri-review-in-tamil-rishikanth-and-anishma-anilkumar-rocking-tamilcinema

    தமிழ் சினிமாவில் திருமணத்தை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், ஒரு திருமண வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை வைத்து ஆணாதிக்கம், சாதி ஏற்றத்தாழ்வு, காதல், குடும்ப அழுத்தம், பெண்களின் சுதந்திரம் என பல விஷயங்களை ஒரே கதைக்குள் கொண்டு வந்து சொல்ல முயற்சிக்கும் படங்கள் குறைவு. அந்த வகையில், அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம், திருமணத்தை சுற்றி நடக்கும் ஒரு இரவு நேரக் குழப்பத்தை மையமாக வைத்து பல்வேறு சமூக விஷயங்களை பேச முயற்சிக்கிறது.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், வெங்கடேஷ், பக்ஸ், சேத்தன், ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், அப்துல் லீ, வர்ஷினி கார்மேகம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முக்கியமாக இயக்குநர் ராஜா கருப்பசாமியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் நிலையில், படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவரும் என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பு.

    கதை என்ன?

    காதலியை இழந்த வேதனையில் துபாயில் கடந்த ஆறு ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார் மருதநாயகம் என்ற கதாபாத்திரத்தில் ரிஷிகாந்த். வாழ்க்கையில் காதல் தோல்விக்குப் பிறகு திருமணம் குறித்த எந்த எண்ணமும் இல்லாமல் இருக்கும் அவரை, குடும்பத்தினர் திடீரென சொந்த ஊருக்கு அழைக்கிறார்கள். அதுவும் சாதாரண அழைப்பு இல்லை. அவரது சகோதரி மகனுக்கு காதுகுத்து விழா என்று கூறி மருதநாயகத்தை ஊருக்கு வரவழைக்கின்றனர். ஆனால் குடும்பத்தினரின் உண்மையான திட்டம் வேறு.

    இதையும் படிங்க: விஜய் மற்றும் தனுஷை தொடர்ந்து அரசியலில் என்ட்ரி கொடுக்கும் சிம்பு..!! STR-ன் பதிலால் ஏற்பட்ட பரபரப்பு..!

    அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்கள். அந்த திருமண மண்டபத்தில் முத்துச்செல்வி என்ற பெண் மணப்பெண்ணாக காத்திருக்கிறார். மாப்பிள்ளை வருவாரா என்ற பதற்றத்தில் இருக்கும் நிலையில், மறுபுறம் மருதநாயகத்துக்கே தனக்கு திருமணம் நடக்கப்போகிறது என்பது தெரியாது. ஊருக்கு வந்த பிறகுதான் தான் திருமண மாப்பிள்ளை என்பதை அவர் தெரிந்துகொள்கிறார்.

    modha-rathri-review

    இதற்குப் பிறகு கதை இன்னும் சுவாரஸ்யமாகிறது. முத்துச்செல்விக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. தனது காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. ஆனால் குடும்ப அழுத்தம் காரணமாக மண்டபத்திற்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருமண மேடையில் இருந்தபடியே காதலனுடன் தப்பிச்செல்லும் திட்டத்தையும் அவர் போடுகிறார். ஆனால் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அவரது காதலன், காதலியை அழைத்துச் செல்ல வேண்டிய நேரத்தில் சரியாக வந்து சேராமல் போகிறார். இதனால் திட்டமிட்டபடி எதுவும் நடக்காமல், முத்துச்செல்விக்கும் மருதநாயகத்துக்கும் திருமணம் நடைபெறுகிறது.

    இப்போது திருமணம் முடிந்துவிட்டது. ஆனால் கதை அங்கே முடியவில்லை. “மொத ராத்திரிக்கு முன்னாடியே உன்னை கூட்டிட்டு போயிடுறேன்” என்று காதலன் உறுதியளிக்கிறார். அவர் உண்மையிலேயே வந்து முத்துச்செல்வியை அழைத்துச் சென்றாரா? திருமணத்திற்குப் பிறகு இந்த வீட்டில் என்னென்ன பிரச்சினைகள் வெடிக்கின்றன? மருதநாயகத்துக்கும் முத்துச்செல்விக்கும் இடையே என்ன நடக்கிறது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    படம் எப்படி இருக்கிறது?

    ‘மொத ராத்திரி’ படத்தின் மிகப்பெரிய பலமே, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லாமல் திருமண வீட்டின் பின்னணியில் பல்வேறு சமூக பிரச்சினைகளை பேச முயற்சிப்பதுதான். “பெண்ணுக்கு பெண்ணே எதிரி”, ஆணாதிக்க சமூகத்தின் கட்டுப்பாடுகள், பெண்கள் தங்களுடைய விருப்பப்படி முடிவெடுக்க முடியாத நிலை, காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல என்ற கருத்து, திருமணத்திற்கு பணத்தைவிட துணிச்சல் முக்கியம், சாதி ஏற்றத்தாழ்வு என பல விஷயங்களை இயக்குநர் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். அதுவும் இவற்றை நேரடியாக பிரசங்கம் செய்வது போல சொல்லாமல், திருமண வீட்டில் நடக்கும் சம்பவங்கள் வழியாக காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

    திருமண வீடுகளில் வெளியில் சிரித்துக்கொண்டு பேசும் பலருக்கும் பின்னால் இருக்கும் வேறு முகத்தை படம் சுவாரஸ்யமாக காட்டுகிறது. உறவுகளுக்குள் இருக்கும் ஈகோ, மரியாதை எதிர்பார்ப்பு, குடும்ப கவுரவம், பெண்கள் மீதான கட்டுப்பாடு என பல விஷயங்கள் கதாபாத்திரங்கள் வழியாக வெளிப்படுகின்றன. மேலும், சாதி அடிப்படையிலான ஆணவக் கொலைகள் மற்றும் சமூக மனநிலையை சிறுதெய்வ வழிபாடு போன்ற அம்சங்களுடன் இணைத்து படத்தின் ஆரம்பத்திலேயே சில கருத்துகளை இயக்குநர் பதிவு செய்திருப்பது கவனிக்க வைக்கிறது.

    ஒரே இரவில் நடக்கும் கதை

    modha-rathri-review

    படத்தின் முக்கியமான சுவாரஸ்யமே இது முழுவதும் ஒரு இரவை மையமாகக் கொண்டு நகர்வதுதான். திருமணம் முடிந்த பிறகு அந்த வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக நகர்கின்றன. இதனால் முதல் பாதியில் படம் சுவாரஸ்யத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்கிறது. குறிப்பாக பாக்யராஜ் பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் டைட்டில் கார்டு மற்றும் இயக்குநர் பெயர் வரும் விதம் போன்ற சிறிய விஷயங்களிலும் இயக்குநரின் ரசனை வெளிப்படுகிறது. அதேபோல், சாமி வந்து ஆடுவது போன்ற நம்பிக்கைகளின் பின்னணியிலும், “சாமி சொன்னாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத சில விஷயங்கள் இருக்கின்றன” என்பதை இயக்குநர் நுட்பமாகக் காட்டியிருக்கிறார். இப்படி படம் முழுவதும் பல சிறிய கருத்துகள் தூவப்பட்டுள்ளன.

    ஆனால் இரண்டாம் பாதியில் சற்று தொய்வு

    முதல் பாதியில் இருக்கும் வேகமும் சுவாரஸ்யமும் இரண்டாம் பாதியில் முழுமையாக தொடரவில்லை என்பதுதான் படத்தின் மிகப்பெரிய குறை.
    குறிப்பாக மழையை முக்கியமான பின்னணியாகக் கொண்டு கதை நகரும் பகுதியில், கதாபாத்திரங்களும் அதிகமாக நகராமல், கதையும் அதே இடத்தில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதனால் சில காட்சிகள் சற்று நீளமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

    எடிட்டர் இன்னும் கொஞ்சம் கருணையில்லாமல் காட்சிகளை வெட்டியிருந்தால், படம் இன்னும் கச்சிதமாக இருந்திருக்கும். முதல் பாதியில் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆழம் இரண்டாம் பாதியில் அதே அளவில் தொடராததும் மைனஸாக மாறுகிறது. மேலும், ரிஷிகாந்தின் மருதநாயகத்தை ஆரம்பத்திலிருந்தே நல்லவர், தேவதூதர் போன்ற பிம்பத்தில் காட்டிவிடுவதும், மறுபுறம் முத்துச்செல்வியின் காதலனை ஆரம்பத்திலிருந்தே ஒரு சோப்ளாங்கியாக காட்டுவதும் கிளைமேக்ஸை ஓரளவுக்கு முன்கூட்டியே கணிக்க வைத்துவிடுகிறது. அந்த கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்சம் சாம்பல் நிறத்தில் வைத்திருந்தால், இறுதிப் பகுதியின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும்.

    நடிகர்களின் பங்களிப்பு

    ஹீரோவாக நடித்திருக்கும் ரிஷிகாந்த், மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தின் வலி, குழப்பம், சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் என பல்வேறு உணர்வுகளை அவர் நன்றாக வெளிப்படுத்துகிறார். நாயகியாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒருவர். குறிப்பாக திருமண மேடையில் அவர் வெளிப்படுத்தும் கோபமும், இறுதிக்கட்டத்தில் வெடிக்கும் உணர்ச்சியும் கதாபாத்திரத்தின் வலியை பார்வையாளர்களிடம் கொண்டு செல்கிறது. மணமகளின் அம்மாவாக நடித்துள்ள ஷெல்லி கிஷோர், மாப்பிள்ளையின் அம்மாவாக நடித்துள்ள சங்கீதா பாலன், மாப்பிள்ளையின் அப்பாவாக வரும் இயக்குநர் வெங்கடேஷ் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

    வெங்கடேஷின் ‘புல்லட்’ தொடர்பான காட்சியும் கவனம் பெறுகிறது. மரியாதையை எதிர்பார்க்கும் தாய் மாமன் கதாபாத்திரத்தில் வரும் பக்ஸ், தனது வழக்கமான நகைச்சுவை பாணியால் சிரிப்பை வரவழைக்கிறார். அதேபோல் அப்துல் லீ, இரு வீட்டாரின் பெண்கள் என துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் படத்திற்கு தேவையான பலத்தை கொடுத்துள்ளனர். இயக்குநர் ராஜா கருப்பசாமி தானே முத்துச்செல்வியின் காதலனாக நடித்திருப்பதும் சுவாரஸ்யமான தேர்வு. குறிப்பாக அவரது நண்பர்களுடன் இடம்பெறும் ‘மனசாட்சி’ காட்சிகள் திரையரங்கில் சிரிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

    modha-rathri-review

    இசை – படத்தின் மிகப்பெரிய பலம்

    ‘மொத ராத்திரி’ படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது பரத் ஷங்கரின் இசை. திருமண வீட்டின் மேளம், தாளம் போன்ற ஒலிகளை வெறுமனே பின்னணி சத்தமாக பயன்படுத்தாமல், காட்சிகளின் உணர்வுகளை கடத்துவதற்கான கருவியாகவே இசையமைப்பாளர் பயன்படுத்தியிருக்கிறார். பல காட்சிகளில் இசைதான் அந்த சூழ்நிலையின் பரபரப்பை அதிகரிக்கிறது. குறிப்பாக ‘டை டக்கா’ பாடல் கவனம் பெறுகிறது. ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பிரபஞ்சோதி ஒரே இரவில் நடக்கும் கதையை காட்சிப்படுத்துவதில் தனது வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

    மைனஸ் என்ன?

    படத்தின் முக்கிய குறைகளில் ஒன்று, இன்றைய ஜென்-ஸி தலைமுறையை முழுவதுமாக ‘சோப்ளாங்கி’ என்ற கோணத்தில் காட்டியிருப்பது. அனைத்து இளைஞர்களும் பொறுப்பில்லாதவர்கள் என்ற பொதுப்பிம்பம் தேவையில்லாமல் உருவாகிறது. மேலும், முதல் பாதியில் இருந்த கதாபாத்திரங்களின் ஆழம் இரண்டாம் பாதியில் குறைந்து போகிறது. சில காட்சிகளை குறைத்திருந்தால் படத்தின் வேகம் மேலும் அதிகரித்திருக்கும். குறிப்பாக கிளைமேக்ஸ் எந்த திசையில் செல்லும் என்பதை ஓரளவுக்கு முன்கூட்டியே கணிக்க முடிவதும் படத்தின் தாக்கத்தை சற்று குறைக்கிறது.

    பார்க்கலாமா? வேண்டாமா?

    குறைகள் இருந்தாலும், ‘மொத ராத்திரி’ ஒரு முறை தியேட்டரில் பார்க்கக்கூடிய படமாகவே இருக்கிறது. குடும்பத்துடன் பார்க்கும்போது திருமண வீட்டில் நடக்கும் பல சம்பவங்கள் நம்முடைய சொந்த உறவினர்களையும், நாம் பார்த்த திருமணங்களையும் நினைவுபடுத்தக்கூடும். அதே நேரத்தில், படம் பேசும் ஆணாதிக்கம், சாதி, காதல், குடும்ப அழுத்தம் போன்ற விஷயங்கள் சிந்திக்கவும் வைக்கின்றன.

    அறிமுக இயக்குநர் என்ற நிலையில் ராஜா கருப்பசாமி எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. குறிப்பாக ஒரே இரவில் நடக்கும் கதையை கடைசி வரை பரபரப்பாக கொண்டு செல்ல அவர் செய்த முயற்சி கவனிக்க வைக்கிறது. முதல் பாதியின் வேகம் இரண்டாம் பாதியிலும் தொடர்ந்திருந்தால், ‘மொத ராத்திரி’ இன்னும் சிறப்பான அனுபவமாக மாறியிருக்கும்.

    ஆனால் அதையும் தாண்டி, இந்த வாரம் குடும்பத்துடன் தியேட்டரில் தாராளமாக பார்க்கக்கூடிய படங்களின் பட்டியலில் ‘மொத ராத்திரி’யை சேர்க்கலாம். சென்னையைத் தாண்டி மற்ற மாவட்டங்களிலும் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இது எதிர்பாராத வெற்றிப் படமாக மாறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

    மொத்தத்தில்: சிரிப்பு + குடும்பக் குழப்பம் + சமூக கருத்துகள் + நல்ல நடிப்பு = ‘மொத ராத்திரி’!

    இதையும் படிங்க: சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற Essel குழுமத்தின் நூற்றாண்டு விழா..! கமல்ஹாசன் முதல் விஜய் ஆண்டனி, ஆர்யா வரை குவிந்த நட்சத்திரங்கள்..!

    மேலும் படிங்க
    சுதந்திரமாக ஓடி விளையாடு என் செல்லமே..!! செல்ல நாய் பகீரா மறைவு.. உருக்கமான பதிவை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்..!

    சுதந்திரமாக ஓடி விளையாடு என் செல்லமே..!! செல்ல நாய் பகீரா மறைவு.. உருக்கமான பதிவை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்..!

    சினிமா
    அஜித் செய்த அந்த “செல்லத் திருட்டு”..! இயக்குநர் அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த ‘காதல்’ சுகுமார்..!

    அஜித் செய்த அந்த “செல்லத் திருட்டு”..! இயக்குநர் அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த ‘காதல்’ சுகுமார்..!

    சினிமா
    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    தமிழ்நாடு
    தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தருவேன்..!! நண்பர் ஜி.வி.பிரகாஷ் சொன்ன அந்த ஒரு வார்த்தை..!

    தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தருவேன்..!! நண்பர் ஜி.வி.பிரகாஷ் சொன்ன அந்த ஒரு வார்த்தை..!

    சினிமா
    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    இந்தியா
    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    இந்தியா

    செய்திகள்

    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!

    தமிழ்நாடு
    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    கழுத்தில் QR Code உடன் பிச்சைக்காரர் வேடம்!! 8 மணி நேரத்தில் யூடியூபருக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

    இந்தியா
    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

    இந்தியா
    வந்தே மாதரம் விவகாரம்! காங்கிரஸ் தியாகிகளை அவமதிக்கிறது! அமித் ஷா சரமாரி குற்றச்சாட்டு!

    வந்தே மாதரம் விவகாரம்! காங்கிரஸ் தியாகிகளை அவமதிக்கிறது! அமித் ஷா சரமாரி குற்றச்சாட்டு!

    அரசியல்
    மத்திய அமைச்சரவையில் மெகா மாற்றம்? பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கிய முடிவு? மீண்டும் பிரதானுக்கு வாய்ப்பு!

    மத்திய அமைச்சரவையில் மெகா மாற்றம்? பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கிய முடிவு? மீண்டும் பிரதானுக்கு வாய்ப்பு!

    அரசியல்
    மழை அப்டேட்! இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

    மழை அப்டேட்! இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share