வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
சினிமா

ஷூட்டிங் பிஸிக்கு நடுவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் செய்த வேலையை பாருங்க..!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரல்.

தமிழ் கதாநாயகி வரிசையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை உடையவர் நடிகை நயன்தாரா, இவர் பல விமர்சனங்களையும், வலிகளையும் கடந்து தன் உழைப்பாலும், தன் திறமையாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து, பல படங்களில் தனது நடிப்பை வெளிக்காட்டி வருகிறார். 

நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து தற்பொழுது பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார். 

இதையும் படிங்க: அதிக சம்பளம் கேட்ட நயன்தாரா..! ஆடவிட்டு அடித்த இயக்குநர்.. சரண்டராகி நிற்கும் EX லேடி சூப்பர் ஸ்டார்..!

இப்படி பல படங்களை தன் கைகளில் வைத்திருக்கும் நயன்தாரா, வாழ்க்கையில் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் கடந்து வந்தவர். 

இவரை ஏளனமாக பேசியவர்கள் மத்தியில் இன்று சாதித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடனும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கானுடனும் நடித்து தனக்கென ஒரு இடத்தை வகுத்தவர். இதனை அடுத்து, கோலமாவு கோகிலா, அறம் என இவர் கதாநாயகன் இல்லாமல் நடித்த படங்களும் ஹிட் கொடுத்துள்ளது. 

இந்த சூழலில், நயன்தாரா தனது திருமணத்திற்கு பின் பலரது விமர்சனங்களில் சரிசமமாக சிக்கி வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பின் முதலில் திருமண ஆவணப்படம் வெளியாவதில் சிக்கல் வந்தது, அதன் பின் ஒருவழியாக ஆவணப்படத்தை வெளியிடலாம் என ட்ரெய்லரை ரிலீஸ் செய்தபோது தனுஷிடம் இருந்து 'காபி ரைட்ஸ்' சிக்கல் வந்தது. 

பின் நான் "லேடி சூப்பர் ஸ்டார்" இல்லை என்றார் உடனே ரசிகர்கள், நடிகர்கள் , நடிகைகள் என பலரிடமிருந்து பலரூபத்தில் சிக்கல் வந்து கொண்டு இருக்கிறது. பார்க்கும் இடத்தில் எல்லாம் கன்னி வெடி வைப்பது போல், நயன்தாரா திருப்பும் இடம் எல்லாம் தற்பொழுது கன்னி வெடியை அவரே வைத்து தடுமாறி வருகிறார். 

இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம்  ராக்காயி, HI, மண்ணாங்கட்டி, dear students என பல திரைப்படங்களை தனது கைவசம் வைத்துள்ள நயன்தாரா தனது பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட "முக்குத்தி அம்மன் 2"வில் தற்பொழுது நடித்து திஷ்டிகளை கழிக்க இருக்கிறார்.

இப்படி பல இடறல்களை கடந்து இன்றும் தனது கைகளில் ராக்காயி, HI, மண்ணாங்கட்டி, dear students, முக்குத்தி அம்மன் 2 என பல திரைப்படங்களை வைத்துள்ளார் நடிகை நயன்தாரா. இப்படி இருக்க சூட்டிங் பிஸியிலும் தனது குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு பொழுதை கழிக்க சென்றுள்ளார்.

இதையும் படிங்க: நடிகை நயன்தாராவுடன் போட்டோ ஷூட் நடத்திய நடிகர் சிரஞ்சீவி..! மகிழ்ச்சியில் இயக்குனர்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी