நயன்தாராவின் அறிமுகப்படமான 'ஐயா' திரைப்படம் யாராலும் மறக்க முடியாது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். தனது வெகுளித்தனமான நடிப்பில் அப்பொழுதே ரசிகர்களை உருவாக்கியவர். அதன் பின் தமிழ், தெலுங்கு மலையாளம் போன்ற படங்களில் நடித்து வந்தவர். நாளடைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி படத்தில் நடித்து, விஜயின் சிவகாசி படத்தில் "நான் சூப்பர் ஸ்டார் ஜோடி" என்ற பாட்டுக்கு நடனமாடி நயன்தாரா என்றாலே 'சூப்பர் ஸ்டார் ஜோடி' என்ற புனைப்பெயரைப் பெற்றார்.

நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களுக்கு பின்னர் திரைத்துறையை விட்டே வெளியே செல்ல முடிவெடுத்தார். ஆனால் சோதனையை சாதனையாக மாற்ற முடிவு எடுத்த நயன்தாரா தனது கடின உழைப்பால் இன்று கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும் அடி எடுத்து வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். ஒரு காலத்தில் நயன்தாராவை விமர்சனம் செய்தவர்கள் கூட வாயடைத்துப் போகும் அளவிற்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளங்களை உருவாக்கி, விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, அழகான குழந்தைகளுக்கு தாயாக மாறி... குடும்ப வாழ்க்கையிலும், தொழிலிலும் மிகப்பெரிய இடத்தையும் பிடித்து சாதனை பெண்ணாக வலம் வருகிறார்.
இதையும் படிங்க: விக்னேஷ் சிவனுக்கு வந்த கனவு..! பதறியடித்து கொண்டு அவர் சென்ற அதிசய இடம்..!

இந்த சூழலில் தன்னை இனி யாரும் 'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்க வேண்டாம் என நயன்தாரா கூற, அது மிக பெரிய சர்ச்சையாக மாறியது. இதனை அடுத்து முத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெலுங்கில் நடிகை அனுஷ்காவை "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை படத்தில் போடும் தகவலை அறிந்த பின் படக்குழுவினருக்கு நயன்தாரா தொடர்பு கொண்டு பேசியதாகவும் ஆனால் அவர்கள் பட்டங்களை எல்லாம் நீக்க முடியாது என சொன்னதால் தனது இமேஜ் குறைந்து விடும் என்பதற்காக தன்னை யாரும் இனி "லேடி சூப்பர் ஸ்டார்" என அழைக்க வேண்டாம் என கூறினார் என தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் ஜவான் படத்திற்கு பிறகு நயன்தாராவின் புகழ் பாலிவுட்டை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது, அனில் ரவிபுடி இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இதற்கான தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என நினைத்த தயாரிப்பாளர்கள், நயன்தாராவிடம் படம் குறித்து பேசியுள்ளனர். படத்தின் கதை பிடித்து போக,

இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் நயன்தாரா. மேலும், இப்படத்தில் நடிக்க சம்பளமாக ரூ.18 கோடியை கேட்டு இருக்கிறார் நயன்தாரா. இந்த நிலையில், முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவாக இருக்கும் இப்படத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாராவுடன் கேத்ரின் தெரசாவும் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில், அன்னபூர்ணா ஸ்டுடியோவில் கதாபாத்திரத்திற்கான போட்டோ ஷூட் நடைபெற்றது. அதில் நயன்தாரா மற்றும் சிரஞ்சீவி ஆகியோரின் கதாபாத்திர கெட்டப் எல்லோருக்கும் பிடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: ஓடிடியில் ஃபிளாப் ஆன நயன்தாராவின் "டெஸ்ட்"..! உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி..!