விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் தமிழ் கடந்த எட்டு சீசன்களாக தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், இம்முறை ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றே கூறப்படுகிறது. தொடக்கம் முதலே இந்த சீசன் பற்றிய விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.
இப்படி இருக்க முக்கிய காரணமாக ரசிகர்கள் கூறுவது, இந்த சீசனுக்குத் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களின் பட்டியல் தான். முந்தைய சீசன்களில் போன்று, இந்த முறை ஹைலைட் தரக்கூடிய ஆளுமைகள் குறைவாக உள்ளதாகவும், பலரும் தங்கள் இயல்பான தன்மையை வெளிப்படுத்தாமல், கேமரா முன் நடிப்பதாகவே தோன்றுவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் கடந்த வாரங்களில் கணிசமாக குறைந்துள்ளது. இதனை சரிசெய்யும் நோக்கத்தில் விஜய் டிவி புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது நான்கு புதிய வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர். இவர்களின் வருகையால் நிகழ்ச்சியில் புதிய திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வைல்ட்கார்ட் எண்ட்ரிகளில் யார் யார் வந்துள்ளனர் என்பதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை வெளியான பிக் பாஸ் ப்ரோமோவில், வீட்டுக்குள் வந்த வைல்ட்கார்ட் போட்டியாளர்களை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, இந்த வாரம் நடைபெறவுள்ள பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் கூட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டாஸ்கில், முந்தைய சீசனில் கலக்கிய சில போட்டியாளர்கள் “கெஸ்ட்” ஆக வரவுள்ளனர் என தயாரிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், நிகழ்ச்சி மீண்டும் பழைய உற்சாகத்துடன் பார்வையாளர்களை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது எப்போதும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றது. ஒவ்வொரு சீசனிலும், சில குறிப்பிட்ட டாஸ்குகள் மற்றும் வாக்குவாதங்கள் சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாறுவது வழக்கம்.
இதையும் படிங்க: சாட்டையை சுழற்றிய 'பிக்பாஸ்'..! பக்கா ஸ்கெட்ச்.. சூடான நாயகர்களை போட்டியாளர்களாக களமிறக்கிய டீம்..!

ஆனால், இந்த சீசனில் அத்தகைய “ஹைலைட்” தருணங்கள் குறைந்திருப்பதே, இதன் பிரபலத்தைக் குறைத்துவிட்டது என விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனை சரிசெய்யும் முயற்சியாக, விஜய் டிவி தயாரிப்பு குழு புதிய ஸ்ட்ராட்டஜி ஒன்றைத் தீட்டியுள்ளது. அதில் முக்கியமானது — வைல்ட்கார்ட் எண்ட்ரி மற்றும் ரீ-என்ட்ரி முயற்சி. இதுவரை பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் பெரும்பாலும் அமைதியாக இருந்த போதிலும், புதிய எண்ட்ரியால் நிகழ்ச்சி மீண்டும் கிளர்ச்சியாக மாறும் என நம்பப்படுகிறது. மேலும், “புதிய போட்டியாளர்கள் வருகையால் வீட்டுக்குள் கலவரம் அதிகரிக்கும்” என உற்சாகமாக இருகின்றனர் ரசிகர்கள். இதோடு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் வாராந்திர எலிமினேஷனும் இந்த முறை சுவாரஸ்யமாக இருக்கும் என கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி வழக்கம்போல் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது, வைல்ட்கார்ட் போட்டியாளர்களை நேரடியாக எதிர்கொள்வார் என நம்பப்படுகிறது. விஜய் டிவி தற்போது பிக் பாஸ் 9ம் சீசனை மீண்டும் பார்வையாளர்களின் மனதில் உற்சாகத்துடன் கொண்டு வர பெரும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதிய டாஸ்குகள், விருந்தினர்கள், வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் என பல்வேறு வடிவங்களில் நிகழ்ச்சி மெருகேற்றப்படுகிறது. குறிப்பாக இசை, உணவு, சண்டை, உணர்ச்சி என எல்லா கலவைகளும் கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி என்ற பெயரில் பிக் பாஸ் தமிழ் தொடர்ந்து கவனம் ஈர்க்கும் நிலையிலும், இம்முறை ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற கேள்வி இன்னும் பதில் காணவில்லை.
அதுவும் இன்று வெளியான ப்ரோமோவில் “வைல்ட்கார்ட் போட்டியாளர்களை பாரு வெளுத்து வாங்குகிறார்” என ரசிகர்கள் கூறும் அளவுக்கு சம்பவம் நடைபெற்றிருப்பதாக தெரிகிறது. இது ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டியுள்ளது. இப்போது எல்லோரின் கவனமும் அடுத்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள ஹோட்டல் டாஸ்க் மீதே. புதிய போட்டியாளர்கள், பழைய சீசனின் விருந்தினர்கள், விஜய் சேதுபதியின் கடுமையான விமர்சனங்கள் என இவை

அனைத்தும் இணைந்தால், பிக் பாஸ் 9ம் சீசன் மீண்டும் டிரெண்டில் வருவது உறுதி என ரசிகர்கள் நம்புகின்றனர். ஆகவே பிக் பாஸ் 9 – இப்போதைக்கு அமைதியாக இருந்தாலும், புதிய வைல்ட்கார்ட் நுழைவால் மீண்டும் வெடிக்கும் நிகழ்ச்சியாக மாறும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது.
இதையும் படிங்க: சாட்டையை சுழற்றிய 'பிக்பாஸ்'..! பக்கா ஸ்கெட்ச்.. சூடான நாயகர்களை போட்டியாளர்களாக களமிறக்கிய டீம்..!