கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதியின் மகனான சூர்யா விஜய் சேதுபதி பேசிய வார்த்தைகளால் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார் என்று பலராலும் விமர்சனங்களை பெற்று வருகிறார். இந்த சூழலில் சமீபத்தில் சூர்யா சேதுபதியின் தந்தையான விஜய் சேதுபதி தனது மகனுக்காக பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருந்தார். இப்படிப்பட்டதான சூழலில் பலரது எதிர்பார்ப்பையும் தூண்டிய பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையமைப்பில் 'ஃபீனிக்ஸ்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.

இப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை மாதம் 4-ம் தேதியான இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி இருப்பதுடன், சினிமா ஜாம்பவான்களான, சரத்குமார் தேவயானி பயமான "3BHK" மற்றும் மிர்ச்சி சிவாவின் "பறந்து போ" படத்துடன் போட்டி போட்டு களத்தில் இறங்கியுள்ளது. இப்படி இருக்க, பலரது எதிர்பார்ப்பையும் பெற்ற இத்திரைப்படம் எப்படி உள்ளது கதைக்களம் என்ன என்பதை கீழே பார்க்கலாம். அதன்படி,
இதையும் படிங்க: மிர்ச்சி சிவாவின் தலையெழுத்தை மாற்றிய "பறந்து போ"..! 3BHK-க்கு டஃப் கொடுக்கும் படத்தின் ரிவ்யூ இதோ..!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியான "ஃபீனிக்ஸ்" திரைப்படத்தின் ட்ரைலரில் சொன்னது போல என்னடா பிரச்சனை உங்களுக்கு? நாங்க ஜெயிக்கிறதா..? இல்ல நாங்க உங்களை ஜெயிக்கிறதா..? என்ற வசனத்தை அடிப்படையாகக் கொண்டு இத்தரைப்படம் உருவாகி இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. தனது தந்தையான விஜய் சேதுபதி எப்படி மாஸ்டர் திரைப்படத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு பின்பு பெரியாளாக மாறுகிறாரோ அதேபோலத்தான் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா செங்கல்பட்டில் இருக்கும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொலை குற்றத்துக்காக அடைக்கப்படுகிறார்.. பல எதிர்ப்புகளின் மத்தியில் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குச் சென்ற சூர்யாவை ஜெயிலிலேயே வைத்து கொலை செய்ய ஒரு சிலர் திட்டமிட்டு இருக்கிறார்கள்..

அங்கிருந்து அவர் தப்பிப்பாரா? இல்லையா? என்பது தான் இந்த ஃபீனிக்ஸ் படத்தின் கதையாக இருக்கிறது. பாக்ஸராக இருக்கும் இவர் எப்படி இதில் சிக்கியிருக்கிறார் என்பதை பார்ப்பதற்கே இந்த படம் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இப்படி இருக்க தனது பாசமிகுந்த அண்ணனை கொலை செய்த நபர்களை கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்கிறார் சூர்யா சேதுபதி.. அதுமட்டுமில்லாமல் ஜெயிலில் போய் நிம்மதியாக இல்லாமல் சுற்றித் திரியும் சூர்யாவை கொலை செய்ய பலர் வந்தாலும் அவர்களிடமிருந்து சண்டையிட்டு தனது உயிரை காப்பாற்றிக் கொள்கிறார். இப்படிப்பட்ட சூர்யாவின் நடிப்பும் அவரது பார்வையிலும் விஜய் சேதுபதி அதிக அளவில் தென்படுகிறார் என்று கூறலாம்.

அதேபோல இவர் பேசுவதும் விஜய் சேதுபதி பேசுவதிலும் குரல்களும் ஒத்துப் போவதால் ரசிகர்களுக்கு பெரிதளவில் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறது.. மேலும் என்ன தான் நடிகருடைய மகனாகவே இருந்தாலும் ஆக்சன் காட்சிகளில் அவரது கடுமையான உழைப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது.. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஆக்ஷன் ஹீரோவாக விஷால் இருந்ததைப் போல தற்பொழுது இளைய ஆக்சன் ஹீரோவாக அவதரித்து இருக்கிறார் விஜய் சேதுபதி மகன் சூர்யா என்றே கூறலாம். மேலும் இத்திரைப்படத்தின் பிளஸ்கள் என பார்க்கும் பொழுது வரலட்சுமி சரத்குமாரை நினைவு கூறாமல் இருக்க முடியாது. ஏனெனில் அவர் இந்த திரைப்படத்தில் சின்ன போஷனில் வந்திருந்தாலும் தனது கேரக்டரை அசாத்தியமாக நிலை நிறுத்தி சென்றார்.

அதுமட்டுமல்லாமல் சூர்யா சேதுபதி அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் அசர வைத்திருக்கிறார் என்றே கூற முடிகிறது. மேலும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வந்த முத்துக்குமாரின் நடிப்புதான் இத்திரைப்படத்திற்கு மேலும் பலத்தைக் கூட்டி இருக்கிறது.. மேலும் பில்டப் காட்சிகளும் படத்தின் இசைகளுமே படத்தை இன்னும் மெருகேற்றி இருக்கிறது என்றே கூற முடிகிறது. மேலும் இத்திரைப்படத்தின் மைனஸ்கள் என பார்க்கும் பொழுது படத்தில் கொஞ்சம் செலவுகளை ஏற்றி இருந்தால் பின்னணி காட்சிகள் அனைத்தும் அழகாக இருந்திருக்கும் என்றே சொல்ல முடிகிறது... மேலும் இந்த திரைப்படத்தில் கதைகளை விட சண்டை காட்சிகளே அதிகமாக இருப்பதால் சண்டை காட்சிகளை கொஞ்சம் குறைத்து இருந்து கதையை முன்னோக்கி நகர்த்த பல வழிகளை கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது..

மொத்தத்தில் திரைப்படம் பழிவாங்கும் படலமாகவே இருப்பதால் சற்று மைனஸ் ஆக தெரிகிறது. ஆனாலும் இரண்டு திரைப்படங்கள் குடும்ப திரைப்படங்களாக வந்திருக்கும் இந்த நேரத்தில் ஆக்ஷன் கலந்த திரைப்படமாக இவர் ஒருவரது திரைப்படம் இருப்பதால் படத்தின் வசூலை வைத்தே இத்திரைப்படத்தின் வெற்றியை கணிக்க முடியும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தற்பொழுது 3 bhk மற்றும் பறந்து போ திரைப்படத்திற்கு போட்டியாக களமிறங்கி இருக்கும் சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ் வீழான்.. ஜெயிக்குமா அல்லது தோற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: கிளைமாக்ஸில் ஆடியன்சை கவர்ந்த "3BHK".. சூரியவம்சம் ஜோடி படம்-னா சும்மாவா.. விமர்சனத்தில் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்...!