தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படமான ‘கூலி’ படத்தின் இரண்டாவது பாடல் ‘மோனிகா’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து பாடிய இந்த பாடலில், நடிகை பூஜா ஹெக்டே நடனமாடி ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். பூஜாவுடன் சவுபின் ஷாஹிர் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரும் இந்த பாடலில் நடனமாடி இந்த பாடலை இன்னும் அதிகமாக ரசிக்க செய்தனர். இந்த பாடல், லிரிக்கல் வீடியோவாக வெளியிடப்பட்டதும் யூடியூப் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் சுமார் 1.6 கோடி பார்வைகளை தாண்டி வைரலாகி ரசிகர்களிடையே பிரபலமானது. இப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த்துடன் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜூனா, உபேந்திரா, அமீர் கான், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.

குறிப்பாக நடிகர் அமீர் கான் இப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்க, மோனிகா பாடல் வெளியீட்டு உற்சாகத்தில், நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் படப்பிடிப்பு காட்சிகளை பகிர்ந்து உள்ளதோடு அதற்க்காக தான் எதிர்கொண்ட கடுமையான சவால்களை குறித்து வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் " மோனிகா பாடலுக்காக ரசிகர்கள் அளித்த அன்புக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த பாடல் என் கெரியரில் உடல் ரீதியாக மிக கடினமான மற்றும் சவாலான பாடலாகும். அதீத வெப்பம், சூரியன் சுட்டெரித்து தோலில் பழுப்பு நிற வரிகள் சில மாதங்களுக்கு இருக்கும், ஈரப்பதம், புழுதி, கொப்புளங்கள், மற்றும் மிக வேகமான நடன அசைவுகள் என எல்லாவற்றையும் எதிர்த்து இந்த பாடல் படப்பிடிப்பை முடித்தேன். ligament காயத்துக்குப் பிறகு இது எனது முதல் மிக கடுமையான நடனமாக இருந்தது.
இதையும் படிங்க: இன்று மாலை வெளியாகிறது பூஜா ஹெக்டேவின் 'மோனிகா' பாடல்...! உற்சாகத்தில் மிதக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!

இத்தனை சவால்களை சமாளித்து கூட பாடல் கிளாமராகவும், எளிமையாகவும் காட்சி அளிக்க வேண்டும் என்பதே முக்கியம். நான் இதற்காக முழு முயற்சியையும் செய்துள்ளேன். திரையில் பார்த்தால் அது நிச்சயமாக சரவெடியாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். என்னை ஆதரித்து இணைந்து நடனமாடிய துணை நடனக்கலைஞர்களுக்கு தனியாக நன்றி கூறுகிறேன். குறிப்பாக மகாசிவராத்திரி அன்று நான் விரதம் வைத்து இருந்த சமயத்தில் கூட அவர்கள் எனக்கு ஊக்கம் அளித்து மிக அருமையாக இருந்தனர். அவர்கள் அனைவரும் அற்புதமானவர்கள்" என்று மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார். இப்படி, வெளியான ‘கூலி’ படத்தின் ‘மோனிகா’ பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், முழு படமும் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளது என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படம் ரஜினிகாந்தின் மாபெரும் வெற்றிப் படம் என்றும், பாடல்கள் மற்றும் காட்சிகள் தங்கள் எதிர்பார்ப்புகளை மிஞ்சியுள்ளதாக இருக்கிறது என்றும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி ‘கூலி’ படத்துடன் சினிமாவில் புது படைப்பை வெளிப்படுத்துவதாக இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இந்தப் படம் வெளியான பிறகு, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் புதிய உற்சாகத்தை கொடுக்கும் படமாக மாறும் என சொல்லப்படுகிறது. மேலும், பாடல் படப்பிடிப்பு தொடர்பான பாடல் வெளியீட்டின் பின்னணி அனுபவங்கள் மூலம், படக்குழுவின் உழைப்பு மற்றும் பார்வையாளர்களுக்கு சிறந்தவை வழங்குவதே முக்கியம் என்பதையும் பூஜா ஹெக்டே தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். இந்த பாடல் மற்றும் படத்துடன் தொடர்புடைய புதுமையான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால் ரசிகர்களின் ஆர்வத்தை தொடர்ந்து எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் ‘கூலி’ படம் தனது கதை, பாடல்கள் மற்றும் நடிகர் நடிப்பின் மூலம் தமிழ் திரையுலகில் பெரிய வெற்றியை பதிவு செய்யும் படியாக அமைய இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அக்ஷய் குமாரை ஆழமாக பாதித்த அந்த சம்பவம்.. ஸ்டண்ட் மாஸ்டர்களுக்காக அவர் செய்த செயல்..!!