சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய நடிகைகளின் பட்டியலில் ப்ரியா பவானி சங்கருக்கும் முக்கியமான இடம் உண்டு.

செய்தி வாசிப்பாளராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் தனது பயணத்தை தொடங்கிய இவர், பின்னர் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன்பிறகு கிடைத்த சினிமா வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு, இன்று தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகிலும் கவனம் பெறும் நடிகையாக மாறியுள்ளார்.
இதையும் படிங்க: ‘ஹார்ட் பீட்’ 3-வது சீசனில் கலக்கும் சுபிக்ஷா..!! திடீரென வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

குறிப்பாக கதாநாயகியாக மட்டுமல்லாமல், தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் ப்ரியா பவானி சங்கர், சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

படங்கள் தொடர்பான அப்டேட்கள், பயண புகைப்படங்கள், ரசிகர்களை கவரும் போட்டோஷூட் படங்கள் என அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள மஞ்சள் நிற உடையிலான அழகிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.

ப்ரியா பவானி சங்கரின் திரைப்பயணம் சினிமாவில் இருந்து தொடங்கியது கிடையாது. முதலில் தொலைக்காட்சி உலகில் தொகுப்பாளினியாக அறிமுகமான அவர், பின்னர் சின்னத்திரையில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

சின்னத்திரையில் கிடைத்த புகழ் அவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகளைத் தேடி வரச் செய்தது. குறிப்பாக ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானபோது, அவரது இயல்பான நடிப்பும் அழகும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

முதல் படத்திலேயே கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு வழிவகுத்தது. தொடர்ந்து வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்ட படங்களில் நடிக்க ஆரம்பித்த ப்ரியா பவானி சங்கர், முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் முக்கிய அப்டேட்.!! இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு.. ரிலீஸ் தேதியிலும் மாற்றமா.!