நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமா திரையுலகிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் இந்த நேரத்தில் இனி படங்களில் தான் நடிக்கப் போவதில்லை என்றும் மக்களுக்கான பணியில் முழு நேரத்தில் ஈடுபட போவதாகவும் சொல்லி 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை துவங்கி மக்களுக்கான பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இதுவரை விஜய் நற்பணி மன்றம் என்ற பெயரில் செய்து கொண்டிருந்த தொண்டுகளை தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தின் மூலமாக தனது ஆருயிர் தொண்டர்களை வைத்து நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறார். மேலும், தேர்வுகளில் வெற்றி அடைந்த மாணவர்களுக்கு என ஊக்கங்களை கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி கட்ட காட்சிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்பொழுது படத்திலிருந்து முழுமையாக விடைபெற்று முழு நேர அரசியல்வாதியாக களமிறங்கி இருக்கிறார் நடிகர் விஜய்.
இதையும் படிங்க: விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜனநாயகன்'..! அதிரடி அப்டேட் கொடுத்த படக்குழு..!

இப்படிப்பட்டதான சூழலில், நடிகர் விஜய் மீண்டும் திரை உலகிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கண்ணீர் மல்க புலம்பி வருகின்றனர். மறுபக்கம் அரசியலில் ஒரு மாற்றங்கள் வரவேண்டுமானால் புதியதாக ஒருவர் வந்தாக வேண்டும் அதனால் நடிகர் விஜய் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம் என்று ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது. இப்படிதான வேலையில் இனி தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் விஜய் படம் வெளியாகாது என்று நினைக்கும் பொழுது ரசிகர்களுக்கு கொஞ்சம் மனம் வருத்தமாகவே இருக்கிறது. ஆனாலும் சினிமா உலகை தாண்டி நிஜ உலகில் சூப்பர் ஹீரோவாக பயணிக்க இருக்கும் விஜய்க்கும் பலரது ஆதரவுகளும் வாழ்த்துக்களும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

இந்த சூழலில் மீண்டும் நடிகர் விஜயின் பழைய திரைப்படங்கள் அனைத்தும் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதுவரை கில்லி, போக்கிரி போன்ற திரைப்படங்கள் வெளியான நிலையில் வரும் நாட்களில் நடிகர் விஜயின் ஹாட் கிளிக் திரைப்படமான குஷி மற்றும் சிவகாசி ஆகிய இரு திரைப்படங்களும் அனைத்து திரையரங்குகளிலும் ரீரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாக்கி வரும் "ஜனநாயகன்" திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, பாபிஜியோல், மமீதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை பெங்களூரை சேர்ந்த கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படி இருக்க, விஜயின் கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் முற்றிலும் முடிவடைந்துள்ளது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இந்த சூழலில் விஜயின் பிறந்தநாள் அன்று அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் " The First Roar - Jana Nayagan " வீடியோவை வெளியிட்டனர் படக்குழுவினர். வெளியிட்ட சில நிமிடங்களிலேயே மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

இந்த சூழலில், இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை பிரியாமணி. அதன்படி அவர் பேசுகையில், நடிகர் விஜய்யுடன் நடிப்பது எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது.நீங்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு ஜனநாயகன் படம் சூப்பர் ஸ்பெஷலாக இருக்கும். இந்த படத்தில் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தில் நான் நடித்து வருகிறேன். கண்டிப்பாக இந்த ஜனநாயகன் படம் எனது கெரியரில் ஒரு சிறந்த படமாக இருக்கும்" என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் மகிழ்ச்சியில் உங்களது கேரக்ட்டர் படத்தில் தனித்துவமாக இருக்கும் என்பதை கூறிவிட்டீர்களே என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை சீரியல் நாயகிக்கு கல்யாணமா..! திருமண கோலத்தில் இருக்கும் நடிகை கோமதி ப்ரியாவை பாருங்க..!