என்றைக்கு தனியார் நிறுவனங்கள் மொபைல் டேட்டாக்களை வாரி வழங்கியதோ அன்றிலிருந்து தொலைக்காட்சிகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சகஜமாக குறைந்து கொண்டே வருகிறது. இப்படி இருக்க, செல்போன்கள் ஓடிடி தளங்களின் ராஜ்யங்கள் வருவதற்கு முன்பு தொலைக்காட்சி ராஜ்யங்களே நாடுகள் முழுவதும் அதிகம் இருந்தது.

அப்படிப்பட்டதான வேளையில் தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் சீரியல்களின் மோகம் அதிகமாக இருந்தது. குறிப்பாக கோலங்கள், ராஜா ராணி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, வாணி ராணி, மெட்டி ஒலி, தென்றல் என பல சீரியல்கள் இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை கொண்டு வந்தது. ஆனால் இப்படிப்பட்டவர்களின் மனதிலும் இளசுகளின் மனதிலும் சீரியல்களை அதிகமாக பார்க்கத் தூண்டியது வடநாட்டு சீரியல்கள் என்றே சொல்லலாம். இப்படி ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்ட சீரியல்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒலிபரப்பான பின்பு இல்லத்தரசிகள் முதல் இளசுகள் வரை இப்படிப்பட்ட தானா சீரியல்களை விரும்ப ஆரம்பித்தனர். அதற்கு இணங்கவே தற்பொழுது சீரியல்களின் பேட்டன்கள் அனைத்தும் மாறி இருக்கிறது.

இப்படிப்பட்ட சீரியல்கள் அனைத்தும் பேட்டன்கள் மாற காரணம் எனப் பார்த்தால் பாலிமர் தொலைக்காட்சி மட்டுமே. பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் இன்றும் நம்மால் மறக்க முடியாதவையாகவே உள்ளது. அந்த வகையில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சீரியல் என்றால் "உள்ளம் கொள்ளை போகுதடா.. மற்றும் மூன்று முடிச்சு.." இந்த சீரியல்களுக்கு பல ஆண்களும் அடிமையாக இருந்தனர் என்றால் மிகை ஆகாது. இப்படி இருக்க தற்பொழுது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகா ஹிட் சீரியல் என்றால் அதுதான் "சிறகடிக்க ஆசை". இந்த சீரியலில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருபவர்களுக்கு இடையே ஏற்படும் ஒவ்வொரு விதமான சம்பவங்களை அழகாக காண்பித்து வருகின்றார் இயக்குனர்.
இதையும் படிங்க: "பெண்ணின் பிறந்தவீடு அவளுக்கு அந்நியமாகாது".. செம கான்செப்ட்..! 3BHK படத்தை பாராட்டிய இயக்குநர் ஹலிதா ஷமீம்..!

அந்த வகையில் இந்த வீட்டில் குடும்பத் தலைவனாக அண்ணாமலையும் குடும்பத் தலைவியாகவும் விஜயா என்பவரும் இருக்கின்றனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூத்தவன் பெயர் 'மனோஜ்', இளையவன் பெயர் 'முத்து', கடைக்குட்டி ஆகப் பிறந்தவர் பெயர் 'ரவி'. இதில் மனோஜ் அதிகமாக படித்திருந்தாலும் உலக அறிவு இல்லாமல் அம்மாவின் பேச்சைக் கேட்கும் அமைதிப் பிள்ளையாக இருக்கிறார். அவருக்கு துணையாக ரோகிணி என்ற மனைவியும் இருக்கின்றார். அதேபோல் இந்த சீரியலின் கதாநாயகனாக விளங்கும் முத்து, கார் ஓட்டுனராக இருந்தாலும் படிப்பறிவு இல்லாமல் போனாலும் உலக அறிவை அதிகமாக பெற்று இருக்கிறார். இவருக்கு துணையாக 'மீனா' என்ற மனைவியும் உள்ளார்.

மேலும் கடைக்குட்டியான ரவி, பிரபல உணவகத்தில் உணவு சமைப்பவராக இருக்கிறார், நன்றாக படித்திருக்கும் இவர் 'ஸ்ருதி' என்ற பணக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வார். இப்படிப்பட்டதான இந்த சீரியலில் முத்துவையும் மீனாவையும் யாருக்கும் பிடிக்காது என்றே கூறலாம். இப்படி இருக்க முத்துவிற்கு அந்த வீட்டில் சப்போர்ட் செய்வது என பார்த்தால் அப்பாவான அண்ணாமலை மற்றும் தம்பி ரவி, ஸ்ருதி முதலானோர் மட்டுமே. கதாநாயகியான மீனாவுக்கும் முத்துக்குவுக்கும் வில்லனாக பார்த்தால் விஜயா, மனோஜ், ரோகினி, சிட்டி, ஸ்ருதியின் அம்மா அப்பா என பலரும் இருக்கின்றனர். இந்த சீரியலின் கதாநாயகியாக இருக்கும் 'மீனா' மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவரது அப்பா ரயில் விபத்தில் இறந்து போகவே முத்துவிற்கு மீனாவை அண்ணாமலை திருமணம் செய்து வைப்பார். மீனா திருமணத்திற்கு பின்பு ஒரு சில கஷ்டங்களை பட்டாலும் தற்பொழுது பூ வியாபாரம் செய்து தனது வாழ்க்கையை முன்னேற்றிக் கொண்டு இருக்கிறார். இப்படி இருக்க, தனி ஒரு ஆளாக இருந்து தனது தம்பியையும் படிக்க வைத்து சகோதரியும் படிக்க வைத்து இன்று அவர்களை திருமணத்தில் இணைக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார் மீனா. இப்படிப்பட்ட அழகிய மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கோமதி பிரியா... இவர் எந்த அளவிற்கு தொலைக்காட்சி சீரியல்களில் ஆக்டிவாக இருக்கிறாரோ அதேபோலவே இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார்.

இந்த சூழலில் தனக்கான பல ரசிகர்களைக் கொண்டிருக்கும் கோமதி தற்பொழுது கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்ய இருப்பதற்கான ஆதாரங்களை போட்டோவாக வெளியிட்டு இருக்கிறார். இதனைப் பார்த்த அவரது கோடான கோடி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த தளபதி நானாக இருக்கனும்.. ஆசிர்வாதம் பண்ணுங்க..! நடிகர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற சூர்யா சேதுபதி..!