தமிழ் சினிமா உலகில் தற்பொழுது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள கூட்டணி என்றால் அது தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூட்டணி. இவர்கள் இருவரது கூட்டணியில் "கூலி" என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார் என பல ஆண்டுகளாக எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இது ஒரு கனவு நிறைவேறிய தருணமாகவே பார்க்கப்படுகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்" போன்ற வெற்றிப் படங்களை இயக்கி, தன் தனித்துவமான பாணியால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதனாலேயே ரஜினிகாந்த் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் இந்த "கூலி" திரைப்படம், மற்றும் அதில் நடிக்கும் நட்சத்திர பட்டாளம், மேக்னட்டிக் ஸ்டைல், மற்றும் உணர்வுப்பூர்வமான கதையம்சம் முதலானவை தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து தெலுங்குத் திரை நட்சத்திரமான நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், நடிகை ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவின் மூத்த நட்சத்திரம் சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் மாஸ் ஹீரோவான அமீர் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே பேசு பொருளாகியுள்ளது. இந்த சூழலில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்துடன் நடந்த முதல் சந்திப்பை நகைச்சுவையாக பகிர்ந்தார்.

அதில், "நான் முதன்முறையாக ரஜினி சாரிடம் ‘கூலி’ படத்தின் கதையை சொல்லும்போது, ஆரம்பமாகவே ‘நான் கமல் சாருடைய ரசிகர்’ என்று கூறினேன். ஆனால் அவர் அதைப் பற்றிப் பேசாமலே சிரித்துவிட்டார். படம் முடிந்த பிறகு அவர் என் உதவி இயக்குநரிடம், ‘லோகேஷ் என் ரசிகன் இல்லை, கமலின் ரசிகன் தான், இசை வெளியீட்டு விழாவில் அவனை பார்த்துக்கறேன்’ என்று சொன்னாராம்" என கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றது. ரஜினி மற்றும் கமல் இருவரும் தமிழ் சினிமாவின் இரண்டு பெரும் தூண்களாக இருப்பதாலேயே, லோகேஷ் போன்ற புதிய தலைமுறை இயக்குநர், இருவரிடமும் ஈர்ப்பு கொண்டிருப்பது பெரியதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், படத்தின் சில சீன்கள் குறித்து ரஜினிகாந்த் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், படத்திற்கு இசையமைத்திருப்பவர் யார்?அனிருத் ரவிச்சந்திரன் அல்லவா.. அப்பொழுது படத்தின் இசையில் மிரட்டி விட்டிருப்பார். காரணம் ஏற்கனவே அவர், லோகேஷ் கூட்டணியான "விக்ரம்" படத்தில் இசையில் வெற்றியை கொடுத்திருக்கிறார். எனவே அதனை தொடர்ந்து, இந்த படத்திலும் திகைக்கவைக்கும் BGM, மாஸ் பாடல்களுடன் ரசிகர்களை திருப்திப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவு கலைஞராக "மாஸ்டர்" மற்றும் "விக்ரம்" படங்களில் பணியாற்றிய சத்யன் சூர்யன் ஈடுபட்டுள்ளார். எடிட்டராக பிலோம் ராஜ் பணியாற்றுகிறார்.
இதையும் படிங்க: இணையத்தில் லீக்-ஆன ரஜினியின் ‘கூலி’ படத்தின் கதை...! படக்குழுவை பதறவைத்த அதிர்ச்சி சம்பவம்..!
இப்படி மட்டும் மாஸ் அல்ல அதில் பணிபுரிபவர்களையும் மாஸாக வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இப்படிப்பட்ட, "கூலி" திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்த படம் ஒரு முழுமையான ரஜினி படமல்ல.. இது அவரது புதிய வண்ணங்களில் வெளிப்படும் ஒரு கதாபாத்திரம். அவரின் நடிப்பின் வெளிப்பாடு, கோபம், பாசம், சண்டை காட்சிகள் என அனைத்தும் மிக நுணுக்கமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இயக்குநர் லோகேஷ், ஒரு புது 'தளபதி'யை உருவாக்கி வைத்திருப்பதாகவே ரசிகர்கள் கூறுகின்றனர். எனவே, "கூலி" திரைப்படம் என்பது வெறும் திரைப்படம் அல்ல.

இது ரஜினியை ஒரு புதிய லெவலுக்குக் கொண்டு செல்லும் வகையில், உருவாக்கப்பட்ட புதிய பக்கம். லோகேஷின் ஸ்கிரிப்ட் ஸ்டைலும், ரஜினியின் கரிச்மாவும் சேர்ந்தால் வெளிப்படும் பூகம்பம் தான் "கூலி". ஆகவே தான் ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலகமும் இந்த படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
இதையும் படிங்க: “லியோவில் என்னை வீணடித்துவிட்டார்” – சஞ்சய்தத்தின் கருத்து விமர்சனத்துக்கு லோகேஷ் கனகராஜ் பதிலடி..!