தமிழ் திரையுலகில் குழந்தை நட்சித்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்து பின் நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்து இன்று தனது பெயரை இந்தியா முழுவதும் நிலைநாட்டி இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழில் விக்ரம் பிரபு நடித்த "இது என்ன மாயம்" திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
இதையும் படிங்க: என்ன சாபம் விட்டாலும் பலிக்காது..! அம்மா, பொண்ணுக்கு பாடகி கெனிஷா நெத்தியடி பதில்..!

இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் 'அந்தோணி தட்டிலை' 15 வருடங்களாக காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த 2024 டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் பாரம்பரிய தமிழ் பிராமண மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இவரது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான திரை பரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதுவரை நடிகை கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம், தொடரி, ரெமோ, ரஜினி முருகன், பாம்பு சட்டை, பைரவா, சண்டகோழி 2, சீமராஜா, சாமி 2, சர்கார், நடிகையர் திலகம், தானா சேர்ந்த கூட்டம், மிஸ் இந்தியா, பெண்குயின், மரக்கர், அரபிக்கடலின் சிம்ஹம், அண்ணாத்த, சாணிக் காயிதம், குட் லக் சகி, மாமன்னன், சைரன், ரகு தாத்தா, கல்கி 2898 AD முதலிய படங்களில் நடித்துள்ளார்.

தனது திருமணத்திற்கு பின் ஹனிமூனில் பிசியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் இனி நடிப்பாரா மாட்டாரா? என்னும் சந்தேகம் ரசிகர்கள் மனதில் இருந்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்புக்கு சென்று கொண்டு இருக்கிறார். அதன்படி பார்த்தால் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ள கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து பெரிய பெரிய படஜெட் படங்களில் நடிக்க இருக்கிறார்.

மேலும், சமீபத்தில் இலங்கைக்கு சென்ற கீர்த்தி சுரேஷுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட் பிரபு.. மலேசியாவில் அப்டேட் சொன்ன இயக்குநர்!!