படத்தில் ரவி மோகனுக்கு இருக்கும் நடிகை ஃபேன்ஸை விட, நிஜ உலகில் ரவி மோகனுக்கு பல ஃபேன்ஸ்கள் உள்ளனர். இப்படி இருக்க, சமீப காலமாக ரவி மோகனும் ஆர்த்தியும் அறிக்கை வாயிலாக பேசி வருகின்றனர். ஒரு ரூபாய் செலவு செய்து போனில் பேச வேண்டிய விஷயத்தை இன்ஸ்டாகிராமில் பக்கம் பக்கமாய் பேசி, அவர்கள் நிம்மதியை கெடுத்துக் கொள்வது அல்லாமல், அதனைப் பார்ப்பவர்கள் நிம்மதியும் கெடுத்து வருகின்றனர்.

ஒரு பக்கம் ரவிமோகன் கெனிஷாவுக்காக நிற்க, மறுபக்கம் தனது மகன்களுக்காகவும் ரவிமோகனுக்காகவும் பிடிவாதம் பிடித்தபடி நின்று கொண்டிருக்கிறார் ஆர்த்திரவி. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பியபடி நின்று கொண்டிருக்கிறார் நடிகர் ரவி மோகன். இந்த சூழலில், காதலித்து திருமணம் செய்து கொண்ட ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தன் மனைவி ஆர்த்தி இடம் இருந்து எப்படியாவது விவாகரத்து வாங்கி கொடுங்கள் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார் ரவி மோகன்.
இதையும் படிங்க: கெனிஷாவோட பண்ண தப்ப மறைக்க எவ்வளவு நாடகம்..! புயலை கிளப்பிய ஆர்த்தி ரவி..!

இந்த சூழலில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, 16 வருடம் நன்றாக வாழ்ந்த குடும்பம் திடீரென பிரிவதா என அறிவுரை கூறிய நீதிபதி, இவர்களது வழக்கை சமரசத் தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்தது. ஆனால் அங்கேயும் இருவருக்கும் இடையே எந்த சமரசமும் செய்யப்பட முடியாததால் மீண்டும் இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்திற்கே மாற்றி வைக்கப்பட்டது. இப்பொழுது இருவருக்கும் வாழ்க்கை என்பது தேவை என்ற எண்ணங்கள் மாறி, ஈகோ கிளாஷ் ஆரம்பித்து உள்ளது. இப்படி இருக்க, ரவி மோகனுக்கு வக்காலத்து வாங்க அவரது புதிய காதலியான பாடகி கெனிஷாவும், சுசித்ராவும் களமிறங்கியதால், ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக அவரது தாயார் சுஜாதாவும், பயில்வான் ரங்கநாதன், குஷ்பூ, ராதிகா என பலரும் தங்களது ஆதரவு கொடியை நீட்டி வருகின்றனர்.

நீங்கள் என்னதான் ஆதரவு கொடி நீட்டினாலும் ஒரு நாளும் ஆர்த்தி ரவியுடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்ற முடிவை தீர்க்கமாக எடுத்து உள்ள ரவி மோகன், சீக்கிரம் விவாகரத்து வாங்கிவிட்டு பாடகி கெனிஷாவை திருமணம் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார். இந்த நிலையில், 'சட்டம் தன் கடமையை செய்யும்' என்று ரவி மோகன் படத்தில் சொன்ன அதே வார்த்தையை ஆர்த்தி தனது வாழ்க்கையின் தாரக மந்திரமாக எடுத்துக்கொண்டு நீதிமன்றத்தின் கதவை நேற்று பலமாக தட்டி இருக்கிறார். அந்த வகையில், குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரான ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரிடமும் நீதிபதி மீண்டும் சேர்ந்து வாழ விருப்பமா என விசாரிக்க ரவி மோகன் தரப்பு விவாகரத்து வேண்டும் என தனது வாதத்தில் முன்வைத்தனர்.

ஆனால் இதற்கு சற்றும் அசராத ஆர்த்தி ரவி, ரவி மோகனை கலங்கடிக்கும் வகையில், மாதம் ஜீவனாம்சமாக தனக்கும் தனது இரு மகன்களுக்கும் சேர்த்து ரவிமோகன் ரூ.40 லட்சம் வழங்க வேண்டும் என புதிய மனு தாக்கல் செய்து அவர் தலையில் பாராங்கல்லையே வைத்தார். இதனால் ஒரு நிமிடத்தில் ஆட்டம் கண்ட ரவி மோகன் தரப்பு, என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்க, அவர்களது திடீர் ஷாக்கிற்கு கொஞ்சம் யோசிக்கும் வகையில் நீதிபதி அவர்கள் ஜூன் 12ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.
மேலும், ஆர்த்தி கேட்கும் ஜீவனாம்சத்திற்கு ரவி மோகன் தகுந்த பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இப்படி ஜீவனாம்சம் கேட்டதை பார்த்து ரவி மோகன் மட்டுமல்ல, மக்கள் அனைவரும் வாயை பிளந்து பார்க்க, ரவி மோகன் தனது அறிக்கையில் வெளியிட்ட வார்த்தையை மக்கள் இப்பொழுது நினைவு கூர்ந்து வருகின்றனர். அதில் "என்னை தங்க முட்டையாகவே எனது மாமியாரும் மனைவியும் பார்த்தார்கள்" என அவர் வெளியிட்டது இப்பொழுது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்பொழுது ரவி மோகனுக்கு ஆதரவு குரல்கள் வலுத்து வரும் நிலையில், ஆர்த்தி ரவி ஜீவனாம்சம் குறித்து துளி கூட கவலைப்படாத ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பழைய காலத்து டெலிபோனை கையில் எடுத்துக் கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதன் கீழ் " நியூஸ் இன்கமிங்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த போட்டோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: என்ன சாபம் விட்டாலும் பலிக்காது..! அம்மா, பொண்ணுக்கு பாடகி கெனிஷா நெத்தியடி பதில்..!