ஆர்த்தி ரவிக்கு ஆதரவாகவும் பாடகி கெனிஷாவுக்கும் ரவிமோகனுக்கும் எதிராக பலர் பேசி கொண்டு இருக்க, குளிக்க செல்லும் கேப்பில் அதனை பார்த்து கடுப்பான சுசித்ரா, முதலில் கெனிஷாவுக்கு ஆதரவளித்து பேசினார். பின்பு ரவி மோகனுக்கும் சில அட்வைஸ்களை கொடுத்து, இன்னும் சில காரியங்கள் பேச வேண்டி உள்ளது குளித்து விட்டு வந்து பேசுகிறேன் என சென்றார். பின்பு குளித்துவிட்டு பிரஷ்ஷாக வந்த சுசித்ரா மீண்டும் ஒரு வீடியோவை போஸ்ட் செய்தார்.
அதில், பாடகி கெனிஷா, ஏதோ உள்ளாடை அணிந்து வருகிறார் போட்டோக்களை கொடுக்கிறார் என சொல்லுகிறீர்களே உங்களது பிள்ளைகள் எல்லாம் அதை போடுவதே இல்லையா. மதுரை, கோயம்புத்தூர் பகுதியில் உள்ள 10 மற்றும் 12 வயது உள்ள பிள்ளைகள் எல்லாம் இப்படிப்பட்ட ஆடைகளை அணிந்து ரீல்ஸ் போடவில்லையா..? பெண்களுக்கு வளர்ச்சி இருக்கிறது என்பதை வைத்து ஆண்கள் இப்படிப்பட்ட ஆடைகளை நீங்கள் அணியக்கூடாது என சொல்லக்கூடாது.

சின்ன பிள்ளைகள் இது போன்ற ஆடை அணிவது தவறு. ஆனால் பெரிய வயதில் உள்ள ஒருவர் அவர் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டாம். இங்கு உள்ள அனைவரிடமும் ஒரு குறுக்குத்தனமான புத்தி ஒன்று உள்ளது. சினிமாவில் நடிப்பவர்கள் என்றால் அவர்களுடைய ஆடைகள் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணுகிறீர்கள். என்னமோ கெனிஷா உழைக்காமல் மேலே வந்தவரைப் போல் நீங்கள் பேசுகிறீர்கள்.
அவர்கள் பட்ட கஷ்டங்கள் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா...? ஆர்த்தியை போல் திருமணம் ஆகி வெளியுலகத்திற்கு டிராமா போடுவது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. இப்படி கண்ணியமாக ஒரு திருமணத்திற்கு ஒன்றாக வந்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இதனை நீங்கள் பாராட்ட வேண்டும்.
இதையும் படிங்க: ஒரே வார்த்தையில் ஆர்த்தி ரவியை அழவைத்த பாடகி கெனிஷா..! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்காத ரவிமோகன்..!

எந்த தகுதியின் அடிப்படையில் நீங்கள் கல்யாணத்திற்கு கெனிஷாவை அழைத்து வந்தீர்கள் என நீங்கள் எப்படி கேட்க முடியும்? இதுவே இன்ஃப்ளுசர்கள் செய்தால் கைதட்டுவீர்கள். இவர்கள் செய்தால் காரி துப்புவீர்கள் அல்லவா. அந்தக் கல்யாணத்தில் அவர்கள் இருவரது பாடி லாங்குவேஜ் குறித்து பேசுகிறீர்களே அப்படி எண்ணத்தை நீங்கள் பார்த்தீர்கள். என்னமோ..ரவி மோகனுடைய மகன்களுக்காக நீங்கள் ஏதோ அழுகிறீர்கள்.
அந்த இரண்டு குழந்தைகளும் இப்பொழுது 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்று ரோட்டில் நின்று அழுது கொண்டிருக்கிறார்களா என்ன. அவர்கள் இருவரும் பங்களாவில் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள். ஒரு பக்கம் அம்மா செல்லம் மறுபக்கம் பாட்டி செல்லம். எல்லா பக்கமும் ஆன்டி செல்லம் என தங்கம் தங்கமாய் அவர்களை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னமோ கல்யாணமாகி குழந்தை பெற்றவர்கள் யாரும் இங்கு விவாகரத்தே வாங்காததை போல் பேசுகிறீர்கள். ஒரு பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட ஆர்த்திக்காக பதறுகிறீர்கள். ஐந்து பக்கம் அறிக்கை போட்டு கதறுகிற ரவிமோகனை நம்ப மாட்டேங்கிறீர்க. ஒரு பெரிய மனுசனையே தன்னுடைய கண்ட்ரோல்ல வைக்கணும்னு நினைச்ச ஆர்த்தி ரவிக்கு அவர்களுடைய இரண்டு மகன்களையும் கண்ட்ரோலில் வைக்க தெரியாதா என்ன? நீங்க எல்லோரும் தான், அந்த இரண்டு பசங்களை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் இருவரும் ஜாலியாக ஊட்டி கொடைக்கானல் என சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு பசங்களையும் வைத்து ஆர்த்தி ரவி உங்கள் அனைவருடைய அனுதாபத்தையும் வாங்குகிறார்கள் என்பது கூட உங்களுக்கு புரியல.

தாய் மகன் எனக்கொடி தூக்கும் அனைவரும் வாருங்கள். உங்களுக்கு பதில் சொல்லத்தான் நான் காத்திருக்கிறேன். என தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: பாடகி இங்க உங்க பொண்டாட்டி ஆர்த்தி எங்க..! ரவிமோகனுக்கு எதிராக நிற்கும் நடிகைகள்..!