நடிகர் ஷாருக்கான் ஹிந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நடிகராகவும் அப்பகுதியின் சூப்பர் ஸ்டார் ஆகவும் திகழ்ந்து வருகிறார். இப்படிப்பட்ட ஷாருக்கான் தனக்கு பிடித்த ஹீரோ என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று சொல்லி, அவர் நடித்த "சென்னை எக்ஸ்பிரஸ்" படத்தில் ரஜினிக்காக 'லுங்கி டான்ஸ்' என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர். இப்படி இருக்க, இவரது நடிப்பு ஒருபுறம் ஃபேமஸ் என்றால் இவரது சிக்ஸ் பேக்கும் மறுபுறம் ஃபேமஸ். அவரது பல படங்கள் இன்றும் உலகம் முழுவதும் பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. உதாரணத்திற்கு சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூயர் போன்ற படங்கள் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: 'வார் 2' படம் ரிலீஸுக்கு முன்பே ஹிட்..! சல்மான் மற்றும் ஷாருக்கானின் சாதனையை முறியடித்த ஹிருத்திக் ரோஷன்..!
அதுமட்டுமல்லாது ட்ரெயினில் "நெஞ்சி உச்சி கொட்டி துடிக்குது தையா" என்ற பாடலுக்கு அப்பொழுதே ட்ரெயின் மீது ஏறி பாடி ஆடும் காட்சிகளும் இன்றளவும் யாராலும் மறக்க முடியாது.அப்படிப்பட்ட ஷாருக்கான் வைத்து யாராவது தமிழில் மீண்டும் படம் எடுப்பார்களா என்று நம் கண்கள் தேடிக் கொண்டிருந்த பொழுது, இதோ நான் இருக்கிறேன் என்று வந்தவர் தான் இயக்குநர் அட்லி. இவர் நடிகர் ஷாருக் கானை வைத்து பிரம்மாண்டமான 'ஃபேன் இந்தியா' படமான "ஜவான்" திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்திருந்தார். இதுவரைக்கும் ஷாருக்கான பல ஆக்சன் படங்களில் பார்த்தவர்களுக்கு இந்த படம் ஒரு வித்தியாசத்தையும் கௌரவத்தையும் தேடித்தந்தது. இப்படியாக தனது 33 ஆண்டுகால சினிமா பயணத்தில் முதல் முறையாக தேசிய திரைப்பட விருது பெற்றுள்ளார். 71-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘சிறந்த நடிகர்’ விருதை ‘ஜவான்’ படத்துக்காக பெற்ற அவர், இந்த அங்கீகாரம் மூலம் தனது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

குறிப்பாக ‘ஜவான்’ திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் வில்லனுக்கும் ஹீரோக்களுக்கும் இடையே உள்ள தடுமாற்றங்களை அழகாக முன் வைத்த ஷாருக்கான், விக்ரம் ரத்தோர் மற்றும் ஆஸாத் என்ற வேடங்களில் வன்முறைக்கு எதிரான போராட்டத்தையும் திறமையாகக் கையாண்டார். இப்படி இருக்க இந்த விருதைத் தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதாக கூறிய ஷாருக் கான், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்தார். அதன்படி அவர் பேசுகையில், " இந்த தேசிய விருதால் என்னை கௌரவித்ததற்காக நன்றி. ஜூரி குழுவிற்கும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சுக்கும் மனமார்ந்த நன்றி. இவ்வரிசைக்காக இந்திய அரசுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். என்னை ஆழமாக நெகிழச் செய்த இந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன்.
👉🏻 Thank you for honouring me with the National Award 👈🏻 Video click
இன்று அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் அட்லீ மற்றும் அவரது டீமுக்கு நன்றி. இது ஒரு வெற்றி அல்ல.. உண்மையை வெளிப்படுத்தும் பொறுப்பு என நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார். ‘ஜவான்’ படம் வெளியானது 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான. ஆனால் இப்படம் வெளியானதும், இப்படம் வசூலில் சாதனைகள் படைத்ததுடன், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமூக நீதி, அரசியல் ஊழல் மற்றும் மகளிர் உரிமைகள் குறித்த கருத்துகளை விறுவிறுப்பாகக் கூறிய இப்படம், ஷாருக் கானின் புதிய கலை பொறுப்புகளை வெளிப்படுத்தியது. மேலும் விருது அறிவிக்கப்பட்டதும், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியுடன் அவரை வாழ்த்தினர். இசைமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகை ரிதி டோக்ரா உள்ளிட்டோர் பாராட்டுகளை பகிர்ந்தனர். ரசிகர்கள், "இந்த விருது அவர் ஒரு காலத்திலேயே பெற வேண்டியவர் தான் நாட்கள் தள்ளினாலும் சரியான நேரத்தில் வந்திருக்கிறது" என பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

இந்த விருது வெறும் ஒரு தனி நபருக்கான வெற்றியாக அல்ல, இந்திய சினிமாவின் புதிய பரிமாணங்களுக்கான அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, தென்னிந்திய இயக்குநர் அட்லீயுடன் ஷாருக் கான் இணைந்திருக்கும் இந்த முயற்சி, இந்திய சினிமாவின் வட-தென் சங்கமத்தை அழகாக வெளிப்படுத்தியது. அந்த வகையில், 33 ஆண்டுகள் கழித்து பெற்ற இந்த தேசிய விருது, ஷாருக் கானின் சினிமா பயணத்தை மட்டுமல்லாமல், அவரது சமூகப் பொறுப்புணர்வையும் பிரதிபலிக்கிறது.
இதையும் படிங்க: CWC-6க்கு நேரடி போட்டியாக களமிறங்கும் "டாப் குக்கு டூப் குக்கு" சீசன் 2..! அதிரடியாக வெளியான ப்ரோமோ..!